Jawan - ஜவான்.. இத்தனை வருடங்கள் செய்யாததை வலியுடன் செய்த அட்லீ.. நெகிழ வைக்கும் சம்பவம்

சென்னை: Atlee (அட்லீ) அட்லீ இயக்கத்தில் வெளியாகி ஜவான் படம் நல்ல ரெஸ்பான்ஸை பெற்றிருக்கிறது. இந்தச் சூழலில் அந்தப் படத்துக்காக அவர் இதுவரை செய்யாத விஷயத்தை செய்திருக்கிறார்.

தமிழில் முன்னணி இயக்குநராக தன்னை நான்கே படங்களின் மூலம் நிலைநிறுத்திக்கொண்ட அட்லீ தற்போது பாலிவுட்டில் அடியெடுத்து வைத்திருக்கிறார். தன்னுடைய முதல் படமாக ஷாருக்கானை ஹீரோவாக வைத்து ஜவான் படத்தை இயக்கியிருக்கிறார். இதில் ஷாருக் தவிர நயன்தாரா, விஜய் சேதுபதி, யோகி பாபு, தீபிகா படுகோனே, ப்ரியாமணி உள்ளிட்டோரும் நடித்திருக்கின்றனர். அனிருத் இசையமைத்திருக்கிறார்.

Atlee has done something that has never been done before for Jawan

நல்ல ரெஸ்பான்ஸ்: படமானது நேற்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது. ஒரு பக்கம் ஷாருக்கின் படம் மறுபக்கம் அட்லீயின் முதல் ஹிந்தி படம் என்ற எதிர்பார்ப்போடு ரசிகர்கள் படம் பார்க்க சென்றனர். படத்தை பார்த்தவர்கள் படம் தங்களது எதிர்பார்ப்பை பூர்த்தி செய்துவிட்டதாக சமூக வலைதளங்களில் கூறினர். இதனால் முதல் நாளில் படமானது பெரும்பாலும் பாசிட்டிவ் விமர்சனத்தையே பெற்றிருக்கிறது.

அட்லீக்கு பாராட்டு: அதேபோல் இதுவரை பார்க்காத வகையில் ஷாருக்கானை அட்லீ காட்சிப்படுத்தியிருக்கிறார் என்று புகழும் ரசிகர்கள் நாட்டுக்கு தேவையான கருத்தை சரியான கலவையோடு கமர்ஷியலாக சொல்லி பாலிவுட் கவனத்தை தன் பக்கம் திருப்பியிருக்கிறார். எனவே இன்னும் சில ஹிந்தி படங்களை அவர் இயக்க வாய்ப்பிருப்பதாக ரசிகர்கள் கூறிவருகின்றனர். இந்தச் சூழலில் ஜவான் படத்துக்காக இதுவரை செய்யாத விஷயத்தை அட்லீ செய்தது குறித்து பார்க்கலாம்.

என்ன செய்தார்?: அதாவது ஜவான் ஷூட்டிங் சமயத்தில் இடையில் கிடைத்த பிரேக்கில் அட்லீயும் அவரது மனைவி ப்ரியாவும் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸுக்கு சென்றிருக்கின்றனர். அங்கு இருக்கும்போது ப்ரியாவுக்கு உடல்நிலை சரியில்லாதது போல் தோன்றியிருக்கிறது. அதனையடுத்து மருத்துவரிடம் சென்று பரிசோதனை செய்திருக்கின்றனர்.

வாழ்த்துகள்: மருத்துவர் அட்லீயிடம் வாழ்த்துகள் நீங்கள் அப்பாவாக போகிறீர்கள் என்று சொல்லியிருக்கிறார். 8 வருடங்களாக குழந்தை இல்லாததால் அந்த தருணம் இருவருக்குமே ரொம்பவே ஸ்பெஷல். தொடர்ந்து அட்லீ மருத்துவரிடம் சரி நான் இன்னும் மூன்று நாட்களில் இந்தியா திரும்ப வேண்டும் இவரையும் அழைத்து செல்லலாம்தானே என கேட்டிருக்கிறார். ஆனால் மருத்துவரோ, நோ ரொம்ப வருடங்கள் கழித்து கர்ப்பம் ஆகியிருப்பதால் 90 நாட்களுக்கு பிறகுதான் ப்ரியா பயணம் செய்ய வேண்டும் என அறிவுறுத்தியிருக்கிறார்.

ப்ரியாவின் மனது: இதனையடுத்து ஷாருக்கானிடம் விஷயத்தை அட்லி சொல்ல அவரோ வாழ்த்துகள் சொல்லி ஷூட்டிங் ஷெட்யூலை தள்ளி வைத்துக்கொள்ளலாம் என கூறியிருக்கிறார். ஆனால் அட்லீக்கோ அரைகுறை மனதுதான் என்பதை புரிந்துகொண்ட ப்ரியா, நானாவது 9 மாதங்கள்தான் சுமக்கப்போகிறேன். நீ மூன்று வருடங்களாக இந்தப் படத்தை சுமந்துகொண்டிருக்கிறாய். நீ இந்தியா கிளம்பி போ. நான் பார்த்துக்குறேன். அப்பப்ப வந்துட்டு போ என சொல்லியிருக்கிறார்.

இதுவரை செய்யாதது?: ஆனால் திருமணமாகிய 8 வருடங்களில் இதுவரை ஒருநாள்கூட ப்ரியாவை அட்லீ பிரிந்ததே இல்லையாம். இருந்தாலும் ஜவான் படத்துக்காக அதை செய்தாராம். பிறகு ஒரு நாள் அவர் இந்தியாவில் ஷூட்டிங்கில் இருக்கும்போது திடீரென ப்ரியா ஃபோன் செய்து ஒன்று கேள் என சொல்லி ஃபோனை வைத்திருக்கிறார். அப்போது அட்லீ தனது குழந்தையின் இதய துடிப்பை கேட்டாராம். இந்த விஷயம் பலரையும் நெகிழ்ச்சியடைய செய்துள்ளது. .அவர் பட்ட கஷ்டத்துக்கு ஏற்றவாறு ஜவான் படமும் நல்ல ரெஸ்பான்ஸையே பெற்றுவருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X