Ex CM ஜெயலலிதாவுக்கு லெட்டர் எழுதிய AVM சரவணன்.. அடுத்து நடந்ததுதான் ஹைலைட்.. இது எப்போ?
சென்னை: AVM சரவணனின் மறைவு மொத்த தென்னிந்திய திரையுலகையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. திரைப் பிரபலங்கள் தொடங்கி, ரசிகர்கள், பொதுமக்கள் என பலரும் அவரது உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். இன்று அதாவது டிசம்பர் 4ஆம் தேதி பிற்பகல் 3.30 மணிக்கு அவருக்கு இறுதி மரியாதை செலுத்த படவுள்ளது. இப்படி இருக்கும்போது, அவர் குறித்த பல சுவாரஸ்யமான தகவல்கள் ரசிகர்களை புருவம் உயர்த்த வைக்கிறது. அப்படியான ஒரு சம்பவம் தான் அவர் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு கடிதம் எழுதியது.
இது தொடர்பாக ஜெயா தொலைக்காட்சிக்கு அவர் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் இரண்டாம் ஆண்டு நினைவு நாளுக்கான சிறப்பு பேட்டியில் பகிர்ந்து கொண்டிருந்தார். அவர் பேசும்போது, " நான் நடிகர் சூர்யாவை வைத்து பேரழகன் என்ற படத்தை தயாரித்து இருந்தேன். அப்போது பைரசியால் படம் பெரிய வெற்றியை எட்டவில்லை. பெரும் மன உளைச்சலுக்கு ஆளானேன். உடனே, அன்றைய முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா அவர்களுக்கு கடிதம் எழுதினேன். எங்களால் முடியவில்லை நாங்கள் ஸ்டூடியோவை மூடி விடலாமா என்று எல்லாம் எண்ணம் வருகிறது என்று மிகவும் வருத்தப்பட்டு அந்த கடிதத்தை எழுதி நான் அவருக்கு அனுப்பி இருந்தேன்.

கடிதம்: அதன் பின்னர் அந்த கடிதத்தை நான் மறந்துவிட்டேன். ஒரு நாள் முதலமைச்சர் ஜெயலலிதா என்னை அழைத்திருந்தார். அவரைப் பார்க்கச் சென்றேன். சுமார் 15 நிமிடங்கள் நாங்கள் பேசிக் கொண்டு இருந்தோம். அப்போது நான் தான் கேட்டேன், எதற்காக என்னை வரச் சொன்னீர்கள் என்று, அதற்கு உடனே நான் எழுதிய கடிதத்தை எடுத்துக் காட்டினார். இந்தியாவில் பழமையான ஸ்டுடியோ என்றால் அது AVM தான். இது தமிழ்நாட்டுக்கே பெருமை.
ஜெயலலிதாவின் வேண்டுகோள்: அப்படி இருக்கும்போது, நீங்கள் திரைத்துறையில் இருந்து வெளியேறக் கூடாது. பல நல்ல நல்ல படங்களைக் கொடுத்த நிறுவனம் உங்கள் நிறுவனம் எனவே நீங்கள் தொடர்ந்து படங்கள் எடுக்க வேண்டும் என்று கூறினார். மேலும் பைரசிகளை ஒழிப்பதற்கான நடவடிக்கைகள் எடுப்பதாக உறுதி அளித்தார். நாங்கள் இன்றைக்கும் ஸ்டூடியோவை வெற்றிகரமாக நடத்த அன்றைய முதலமைச்சர் ஜெயலலிதா கொடுத்த தைரியமும் மிகவும் முக்கியமான காரணம். எங்கள் நிறுவனம் என்றைக்கும் கடமைப்பட்டிருக்கிறது" என்று தெரிவித்திருந்தார். அவரது இந்த பேட்டி மற்றும் இந்த சம்பவம் பலரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.



Click it and Unblock the Notifications











