போதை பழக்கத்தால் ரகுவரனுக்கு வந்த நிலைமை.. ரொம்ப கொடுமை.. ஷாக் கொடுத்த பப்லு பிருத்விராஜ்
சென்னை: இந்திய திரையுலகில் மிக சிறந்த நடிகர்களில் ஒருவர் ரகுவரன். ஹீரோவாக வேண்டுமென்ற ஆசையில் சினிமாவுக்குள் வந்த அவர் வில்லனாக ஜொலித்தார். ஏகப்பட்ட படங்களில் தன்னுடைய தரமான நடிப்பை வெளிப்படுத்திய அவர்; நடிகை ரோகிணியை காதலித்து திருமணம் செய்துகொண்டு பின்னர் பிரிந்தார். அவர்களுக்கு ஒரு மகன் இருக்கிறார். இந்நிலையில் ரகுவரன் பற்றி நடிகர் பப்லு பிருத்விராஜ் சமீபத்திய பேட்டியில் பேசியிருக்கிறார்.
ரகுவரன் என்றாலே நெடுநெடு உயரமும், வித்தியாசமான பாடி லாங்குவேஜ், குரலும், மிரட்டலான நடிப்பும்தான் நினைவுக்கு வரும். வில்லன் என்றால் ஜிம் உடலோடு இருக்க வேண்டும் என்ற விதியை உடைத்து தனக்கென தனி ஸ்டைலை வைத்துக்கொண்டு மிரட்டி காட்டியவர். அவர் ஸ்க்ரீனில் வந்தாலே பார்க்கும் ரசிகர்கள் பயந்து போகும் அளவுக்கு தனது வில்லத்தனமான நடிப்பை வித்தியாச வித்தியாசமாக ஒவ்வொரு படத்திலும் காண்பித்தவர் அவர்.
மார்க் ஆண்டனி: அவர் ஏற்றுக்கொண்ட பல கதாபாத்திரங்கள் அவருக்கு சிறந்த பெயரை பெற்றுக்கொடுத்திருக்கின்றன. புரியாத புதிர் திரைப்படத்தில் I Know என்ற ஒற்றை வார்த்தையை வைத்துக்கொண்டு அவர் நடிப்பில் அதகளம் செய்த சம்பவம் எல்லாம் வேறு எந்த நடிகராலும் பண்ண முடியாதது என்பதுதான் உண்மை. அதேபோல் ரஜினிகாந்த்துக்கு வில்லனாக பாட்ஷா படத்தில் அவர் ஏற்றிருந்த மார்க் ஆண்டனி கேரக்டர் இன்றுவரை ஒரு பெஞ்ச் மார்க்காக இருக்கிறது.
ரோகிணியுடன் காதல், திருமணம், பிரிவு: இதற்கிடையே அவர் நடிகை ரோகிணியை காதலித்து திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு ரிஷி என்கிற மகனும் இருக்கிறார். சில காலம் ஒன்றாக வாழ்ந்த அவர்கள் மன கசப்பு காரணமாக பிரிந்துவிட்டார்கள். அவர்களது பிரிவுக்கு ஏகப்பட்ட காரணங்கள் யூகங்களாக சொல்லப்படுகின்றன. இரண்டு பேரும் பிரிந்தாலும் ஒருவரையொரு மிகுந்த மரியாதையோடுதான் அணுகிக்கொண்டார்கள்.
கேரக்டர் ஆர்ட்டிஸ்ட்: வில்லானாக மட்டுமின்றி கேரக்டர் ஆர்ட்டிஸ்ட்டாகவும் தனது நடிப்பில் இன்னொரு பரிமாணத்தை வெளிக்காட்டினார் ரகுவரன். முகவரி, யாரடி நீ மோகினி என அவர் குணசித்திர கதாபாத்திரங்கள் செய்த படங்கள் எல்லாம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆகின யாரடி நீ மோகினி திரைப்படம்தான் அவரது கடைசி படம் என்பது குறிப்பிடத்தக்கது. அந்தப் படத்தில் நடித்துக்கொண்டிருந்தபோது அவர் உயிரிழந்துவிட்டார். அவரது உயிரிழப்பு பெரிய வெற்றிடத்தை உருவாக்கி சென்றிருக்கிறது.

ஆவண படம்: ரகுவரனின் நடிப்புக்கென்று இன்றுவரை பலரும் ரசிகர்களாக இருக்கிறார். இன்னொருவர் அவர் இடத்தை நெருங்கவே முடியாது என்பதுதான் உண்மை. அவரை பற்றி Raghuvaran : A Star That Defied Time என்ற ஆவண படமும் உருவாகியிருக்கிறது. அந்தப் படமானத் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஆங்கிலம், ஹிந்தி ஆகிய மொழிகளில் விரைவில் வெளியாகவிருக்கிறது. இந்நிலையில் அவர் குறித்து நடிகர் பப்லு பிருத்விராஜ் பேசியிருக்கும் விஷயம் ஷாக்கை கொடுத்திருக்கிறது.
பப்லுவின் பேட்டி: தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில், "நானும் ரகுவரனும் சினிமா கல்லூரியில் படித்தவர்கள். எனக்கு அவர் சீனியர். இருப்பினும் நாங்கள் நெருங்கிய நண்பர்கள். நாங்கள் மட்டுமின்றி எங்கள் இருவருடைய காதலிகளும் அப்படித்தான் இருந்தார்கள். ரகுவரனுக்கு ஹீரோவாக வேண்டுமென்ற ஆசை இருந்தது. அதுமட்டுமின்றி பெண் வேடமிட்டு நடிக்க வேண்டுமென்ற விருப்பமும் இருந்தது. ஒருமுறை கன்னட படத்தில் நடித்துக்கொண்டிருந்தேன்.
அப்போது அவர் அங்கு வந்திருந்தார். அந்த சமயத்தில் அவரிடம் நான், 'நாம் எப்படியெல்லாம் நடிக்க வேண்டுமென்று பேசிக்கொண்டோம்' என பழைய நினைவுகளை பற்றி பேச தொடங்கினேன். ஆனால் அவருக்கு அதில் எதுவுமே நியாபகம் இல்லை. அனைத்தையும் மறந்திருந்தார். ஏனெனில் அவர் போதை பழக்கத்துக்கு அடிமையாகியிருந்தார். இதை நிறுத்தும்படி சொன்னால், 'இப்படி சொல்வது உன் வேலையில்லை' என்று சொல்லிவிட்டார். அதனால் நானும் மேற்கொண்டு அவரிடம் அதுகுறித்து பேசவில்லை" என்றார்.


Click it and Unblock the Notifications











