கெட்ட பழக்கத்துக்கு அடிமையான நவரச நாயகன் கார்த்திக்.. அடியாட்களுடன் சென்ற தயாரிப்பாளர்.. பெரிய களேபரம்
சென்னை: நவரச நாயகன் என்று ரசிகர்களால் அழைக்கப்பட்டவர் கார்த்திக். 80களின் சாக்லேட் பாயாக தமிழ் சினிமாவில் வலம் வந்த அவர் தனது நடிப்பால் ரசிகர், ரசிகைகளை கட்டிப்போட்டவர். தொடர்ந்து பல ஹிட் படங்களை கொடுத்தவர். அவரது மகன் கௌதம் கார்த்திக்கும் நடிகராக வலம் வந்தாலும் தனது தந்தை போல் ஜொலிக்க முடியாமல் திணறி வருகிறார். இந்தச் சூழலில் பிரபல தயாரிப்பாளர் பாஸ்கரின் மகன் பாலாஜி பிரபு கார்த்திக் பற்றி பல விஷயங்களை பேசியிருக்கிறார்.
நவரச நாயகன் என்று ரசிகர்களால் அழைக்கப்படும் கார்த்திக் பாரதிராஜாவின் அறிமுகம். அலைகள் ஓய்வதில்லை படம் மெகா ஹிட்டான பிறகு கிடைத்த வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக்கொண்ட கார்த்தி ஒவ்வொரு படத்திலும் தனது நடிப்பில் பல வேரியஷன்களை காண்பித்தார். தனது டயலாக் டெலிவிரி, உடல் மொழி என அனைத்திலும் தனக்கென தனி ஸ்டைலை உருவாக்கிக்கொண்ட அவர்தான் 80களின் சாக்லேட் பாயாக வலம் வந்தார். பெண் ரசிகைகளை கவர்வது ரொம்பவே கடினம். அதனை அசால்ட்டாக செய்தார் கார்த்திக்.

பெஸ்ட் மௌன ராகம்: கார்த்திக் எத்தனையோ படங்களில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். ஆனால் கெஸ்ட் ரோலில் வந்து ஒட்டிமொத்தமாக ரசிகர்களின் கைத்தட்டலை அள்ளிய மௌன ராகம் படம் அவருக்கு எப்போதுமே பெஸ்ட். அதேபோல் அவர் நடித்த அமரன், அக்னி நட்சத்திரம் ஆகிய படங்களில் சாக்லேட் பாயிலிருந்து ரக்கட் பாய் மோடுக்கு மாறி நடிப்பில் பின்னி பெடலெடுத்திருந்தார். ஒருபக்கம் ரொமாண்ட்டிக் படம் மறுபக்கம் ஆக்ஷன் படம் என கலக்கிக்கொண்டிருந்த அவர், உள்ளத்தை அள்ளித்தா போன்ற காமெடி ஜானர் படங்களிலும் நடித்து அந்த ஏரியாவிலும் பெரும் ரவுண்டு வந்தவர்.
விமர்சனம்: எவ்வளவுக்கு எவ்வளவு அவர் சிறந்த நடிகர் என்ற பெயரை பெற்றாரோ அதே அளவு அவர் மீது விமர்சனமும் முன் வைக்கப்பட்டது. அதாவது கார்த்திக் ஒழுங்காக ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வர மாட்டார். வேண்டுமென்றே லேட் செய்வார் என்று கூறப்படுவதுண்டு. அதேசமயம் ஸ்பாட்டுக்கு வந்துவிட்டால் அவர் சிங்கிள் டேக் ஆர்ட்டிஸ்ட் என்ற பெயரையும் பெற்றதுண்டு. காலம் செல்ல செல்ல கார்த்திக்கிற்கு பட வாய்ப்புகள் குறைய; தனது மகன் கௌதம் கார்த்திக்கை சினிமாவில் களமிறக்கினார். ஆனால் கௌதமுக்கு சொல்லிக்கொள்ளும்படி இதுவரை ஒரு வெற்றியும் இல்லை.
பாலாஜி பிரபு பேட்டி: இந்நிலையில் கார்த்திக் நடித்த சக்கரவர்த்தி, சட்டத்தின் திறப்பு உள்ளிட்ட படங்களின் தயாரிப்பாளரின் மகன் பாலாஜி பிரபு தனியார் யூட்யூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கார்த்திக் குறித்து பல விஷயங்களை பேசியிருக்கிறார். அவர் பேசுகையில், "நடிகர் கார்த்திக் தவறான பழக்க வழக்கங்களுக்கு அடிமையாகிவிட்டார். அதனால் அவர் ஒழுங்காக ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வரவில்லை. வருஷம் 16 படம் சூப்பர் ஹிட்டாகி ஓடிக்கொண்டிருக்கும்போது சட்டத்தின் திறப்பு விழா படத்தின் தேதிகளை எங்களுக்கு கொடுத்தார்.
டென்ஷனான அப்பா: ஆனால் அந்தப் படத்தால் எங்களுக்கு லாபமும் இல்லை நஷ்டமும் இல்லை. பிறகு மீண்டும் அவரை வைத்து சக்கரவர்த்தி படத்தை தயாரித்தோம். அந்தப் படத்தில் அவர் நடித்துக்கொண்டிருந்தபோதுதான் அவரது கிழக்கு வாசல் படம் நன்றாக ஓடிக்கொண்டிருந்தது. சக்கரவர்த்தி பட ஷூட்டிங்கிற்கு அவர் கொடுத்த தேதிகளில் ஒழுங்காக நடிக்க வரவில்லை. இதனால் அப்பா ரொம்பவே டென்ஷனாகிவிட்டார். கார்த்திக் அந்த சமயத்தில் இன்னொரு ஷூட்டிங் ஸ்பாட்டில் இருப்பதை தெரிந்துகொண்ட அப்பா; அடியாட்களுடன் சென்றார். இதை தெரிந்துகொண்ட கார்த்திக் ஓடி ஒளிந்துகொண்டார். பிறகு அவரை ஒழுங்காக ஷூட்டிங்கிற்கு வரவைக்க அப்பாவின் ஆள் ஒருவர் கார்த்திக்கின் வீட்டில் தங்கியிருந்து அழைத்து வருவார்" என்றார்.


Click it and Unblock the Notifications











