விஜய்யை ரிஜெக்ட் செய்தேன்.. ஆனால் இன்னைக்கு விஜய் தான் நம்பர் ஒன்.. வருத்தப்பட்ட பாரதிராஜா

சென்னை: பாசத்திற்குரிய பாரதிராஜா அரசு மரியாதையுடன் விடை பெற்று விட்டார். பெரும் துயரத்தில் இருந்து தமிழ் சினிமா மட்டுமல்லாது தமிழ்நாடும் மெல்ல மெல்ல மீண்டு வந்து கொண்டு இருக்கிறது. இந்நிலையில் பாரதிராஜா குறித்த பல சுவாரஸ்யமான தகவல்கள், கடந்த காலங்களில் அவர் அளித்த பேட்டிகளில் பகிர்ந்துக்கொண்ட தகவல்கள் ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்து வருகிறது. இதில் நடிகரும் தற்போதைய தமிழ்நாட்டின் முதலமைச்சருமான விஜய் குறித்து பாரதிராஜா தெரிவித்துள்ள கருத்து பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

அதாவது, விஜய்யை எனது ( பாரதிராஜா) இயக்கத்தில் நடிக்க வைக்க வேண்டும் என்று கேட்டு, விஜய்யை அழைத்துக் கொண்டு என்னைச் சந்தித்தார். நானோ, ஏன் உனது இயக்கத்திலேயே நடிக்க வைக்கலாமே என்று கேட்டேன். அது மட்டும் இல்லாமல் நான் விஜய்யை ரிஜெக்ட் செய்துவிட்டேன். ஏன் என்று தெரியவில்லை, எனக்கு அப்போது விஜய்யை நடிக்க வைக்க வேண்டும் என்று தோன்றவில்லை. அவ்வளவுதான், ஆனால் இன்றைக்கு விஜய் நெம்பர் ஒன் இடத்தில் இருக்கிறார். விஜய்யை ரிஜெக்ட் செய்துவிட்டோமே என்று வருத்தம் இருக்கிறது. ஒருமுறை விஜய்யை சந்திக்கையில் நானே பார்த்து சொன்னேன்" என்று தெரிவித்துள்ளார்.

Bharathiraja Regretted Rejecting Vijay Called Him Tamil Cinema s No 1 Star

பாரதிராஜாவின் இந்த பழைய பேட்டி தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. மேலும் இந்த பேட்டியைப் பார்த்த ரசிகர்களும் இணையவாசிகளும், விஜய்யின் அப்பா எஸ்.ஏ. சந்திரசேகர் தனது மகனை கதாநாயகனாக மாற்ற எப்படி எல்லாம் சிரமப்பட்டு, உழைத்திருக்கிறார் என்று பதிவிட்டு வருகிறார்கள்.

அதே நேரத்தில் தன்னை ரிஜெக்ட் செய்த இயக்குநர் என்று எல்லாம் யோசிக்காமல், தமிழ் சினிமாவின் மிக உயர்ந்த கலைஞருக்கு கொடுக்க வேண்டிய மரியாதையை விஜய் கடந்த காலங்களில் கொடுத்துள்ளார். எங்கு பார்த்தாலும் மரியாதையையும் அன்பையும் வெளிப்படுத்தி உள்ளார்.

Bharathiraja Regretted Rejecting Vijay Called Him Tamil Cinema s No 1 Star

மேலும் கடந்த ஆண்டு பாரதிராஜாவின் மகன் மனோஜ் பாரதிராஜா மறைவின் போது கூட நேரில் சென்று ஆறுதல் கூறினார். அதேபோல் பாரதிராஜாவின் மறைவின் போது முதலமைச்சராக சென்று மரியாதை செலுத்தியது மட்டும் இல்லாமல், 72 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் பாரதிராஜாவுக்கு தமிழ்நாடு அரசு மரியாதை செலுத்தவும் உத்தரவிட்டுள்ளார். முதலமைச்சர் விஜய் எப்போதும் பாரதிராஜா மீது அன்பும் மரியாதையும் வைத்திருப்பவர் என்று தெரிவித்து வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X