மனோஜ் பாரதிராஜாவை இரவில் டார்ச்சர் செய்த மனைவி நந்தனா.. அவங்களுக்கு இப்படி ஒரு பிரச்னையா?

சென்னை: இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் மகன் மனோஜ் உடல்நல குறைவால் சமீபத்தில் மரணமடைந்தார். ஏற்கனவே அவருக்கு இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருந்தது. அப்படிப்பட்ட சூழலில் திடீரென அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதால் அவரது காலமானார். அவரது உயிரிழப்பு அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது. முக்கியமாக பாரதிராஜா மற்றும் மனோஜின் மனைவி நந்தனாவை தீராத துயரத்தில் தள்ளியிருக்கிறது. இந்நிலையில் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியிருக்கிறது.

தமிழ் சினிமாவின் தவிர்க்கவே முடியாத இயக்குநர்களில் ஒருவர் பாரதிராஜா. அவர் அறிமுகப்படுத்திய நடிகர்கள், நடிகைகள் சினிமாவில் மிகப்பெரிய ஆளுமைகளாக மின்னிக்கொண்டிருக்கின்றனர். அதேபோல் தனது மகனையும் மாற்ற முடிவு செய்து தாஜ் மஹால் படத்தை இயக்கி அதில் மனோஜை ஹீரோவாக அறிமுகம் செய்தார் பாரதிராஜா. ஆனால் அந்தப் படம் படுதோல்வியையே சந்தித்தது. அடுத்ததாக மனோஜ் நடித்த வருஷமெல்லாம் வசந்தம் திரைப்படம் ஓரளவுக்கு அவருக்கு நல்லதொரு அடையாளத்தை பெற்றுக்கொடுத்தது.

இருந்தாலும் எழ முடியவில்லை: வருஷமெல்லாம் வசந்தம் திரைப்படம் ஹிட்டானதால் தன்னுடைய வளர்ச்சி இனி நன்றாக இருக்கும் என்றே எதிர்பார்த்தார் மனோஜ். ஆனால் அந்தப் படத்துக்கு பிறகு அவர் நடித்த பல படங்கள் தோல்வியை சந்தித்தன. அவற்றில் கடல் பூக்கள், அல்லி அர்ஜுனா படங்களில் மனோஜின் நடிப்புக்கு நல்ல தீனி கிடைத்தது. நல்ல நடிகர் என்கிற பெயரையும் அவர் பெற்றார். இருப்பினும் அவர் சந்தித்த தொடர் தோல்விகள் காரணமாக திரைத்துறையில் அவரால் சக்சஸ்ஃபுல் ஆக்டராக ஜொலிக்க முடியவில்லை.

Bharathiraja Son Manoj And His Wife Nandhana s Throwback Interview Goes Trending

இயக்குநர் அவதாரம் எடுத்த மனோஜ்: நடிகராகத்தான் ஜொலிக்க முடியவில்லை; தந்தை வழியில் இயக்குநராகலாம் என்று முடிவெடுத்த அவர் ஷங்கரிடம் உதவி இயக்குநராக எந்திரன் திரைப்படத்தில் பணியாற்றினார். அதுமட்டுமின்றி மணிரத்னம், பாரதிராஜா ஆகியோரிடமும் சில காலம் உதவி இயக்குநராக பணியாற்றியிருந்தார். எனவே அந்த அனுபவத்தின் அடிப்படையில் மார்கழி திங்கள் படத்தை இயக்கினார். அதில் பாரதிராஜா உள்ளிட்டோர் நடித்திருந்தார்கள். இருப்பினும் அந்தப் படமும் இயக்குநராக மனோஜுக்கு வெற்றியை கொடுக்கவில்லை.

உயிரிழந்த மனோஜ்: நிலைமை இப்படி இருக்க சில மாதங்களுக்கு முன்பு அவருக்கு இதய அறுவை சிகிச்சை நடந்தது. அதனையடுத்து வீட்டில் ஓய்வில் இருந்தார் அவர். ஆனால் மீண்டும் அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டிருக்கிறது. அதன் காரணமாக அவர் பரிதாபமாக உயிரிழந்தார். அவருக்கு நந்தனா என்ற மனைவியும் இரண்டு மகள்களும் இருக்கிறார்கள். மனோஜின் உயிரிழப்பு அவரது தந்தை பாரதிராஜா மற்றும் குடும்பத்தினரை நிலைகுலைய செய்திருக்கிறது. பாரதிராஜா என்ன செய்வதென்று தெரியாமல் துக்கத்தில் இருக்கிறார். இந்நிலையில் நந்தனாவும், மனோஜும் கொடுத்த பேட்டி ஒன்று சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியிருக்கிறது.

பழைய பேட்டி: தனியார் ஊடகம் ஒன்றுக்கு சில வருடங்கள் முன்பு அவர்கள் அளித்த பேட்டியில் தனது மனைவி குறித்து பேசியிருந்த மனோஜ், "எனக்கு முழுக்க முழுக்க இருட்டாக இருந்தால்தான் தூக்கம் வரும். ஆனால் திருமணம் முடிந்த பிறகு லைட்டை ஆன் செய்து வைத்துக்கொண்டுதான் தூங்குகிறேன். ஏனெனில் மனைவிக்கு இருட்டு என்றாலே பயம். அதிலும் நடு ராத்திரியில் அவர் ரெஸ்ட் ரூம் போகும்போது என்னை டார்ச்சர் செய்துவிடுவார். அதுவரைக்கும் வந்து என்னை விட்டுட்டு வாங்களேன் என்று சொல்வார். அந்த அளவுக்கு அவருக்கு பயம்" என்றார். முன்னதாக சாதூரியன் படத்தில் நடித்தபோது மனோஜும், நந்தனாவும் காதலிக்க ஆரம்பித்து பிறகு திருமணம் செய்துகொண்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X