சூர்யாதான் அப்படிப்பட்டவர்.. ஜோதிகா அப்படிப்பட்டவர் இல்லை.. பிருந்தா சொன்ன ரகசியம்

சென்னை: கோலிவுட்டின் ஃபேவரைட் ஜோடி சூர்யா - ஜோதிகா. காதலித்து பல வருடங்கள் காத்திருந்து திருமணம் செய்துகொண்டார்கள். இப்போது மும்பையில் வசித்துவரும் அவர்கள் சினிமாக்களில் நடிப்பதில் பிஸியாக இருந்துவருகிறார்கள். ஜோதிகாவுக்கும் சூர்யா ரொம்பவே சப்போர்ட்டாக இருந்துவருகிறார். இந்தச் சூழலில் சூர்யா - ஜோதிகா குறித்து நடன அமைப்பாளர் பிருந்தா சில விஷயங்களை பேசியிருக்கிறார்.

சூர்யா தமிழின் டாப் 5 ஹீரோக்களில் ஒருவர். நேருக்கு நேர் படத்தின் மூலம் அறிமுகமான அவர் இதுவரை 41 படங்களில் நடித்திருக்கிறார். கடைசியாக அவரது நடிப்பில் எதற்கும் துணிந்தவன் ரிலீஸானது. படம் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை. இருந்தாலும் அவர் தேர்ந்தெடுக்கும் கதைக்களங்கள் அனைத்துமே சமூக பொறுப்பாக இருக்கிறது என்று பலரும் பாராட்டு தெரிவித்துவருகின்றனர். எதற்கும் துணிந்தவன் படத்தை முடித்துவிட்டு பாலா இயக்கத்தில் வணங்கான் படத்தில் கமிட்டானார். முதல் ஷெட்யூல் ஷூட்டிங் முடிந்ததை அடுத்து இரண்டாவது ஷெட்யூலில் இருவருக்கும் மனஸ்தாபம் ஏற்பட்டதால் அப்படத்திலிருந்து விலகினார் சூர்யா. அதனையடுத்து சிவா இயக்கத்தில் கங்குவா படத்தில் நடிக்க கமிட்டானார். ஞானவேல் ராஜா படத்தை தயாரிக்கிறார்.

throwback stories suriya jyothika

மெகா பட்ஜெட்: கங்குவா திரைப்படம் பல மொழிகளில் உருவாகிறது. 3டி தொழில்நுட்பத்திலும் வெளியாகவிருக்கும் படத்தில் திஷா பதானி ஹீரோயினாக நடிக்கிறார். தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். சூர்யாவின் கரியரிலேயே இந்தப் படம்தான் அதிக பட்ஜெட்டில் உருவாகும் படமாக அமைந்திருக்கிறது. பீரியட் கால படமாகவும் தற்காலத்தில் நடக்கும் படமாகவும் கங்குவா உருவாகியிருக்கிறது. படமானது அக்டோபர் மாதம் 10ஆம் தேதி ரிலீஸாகவிருக்கிறது.

சிறந்த கணவர்: சூர்யாவை பொறுத்தவரை நல்ல நடிகர் என்பதோடு மட்டுமின்றி சிறந்த கணவராகவும் திகழ்கிறார். பூவெல்லாம் கேட்டுப்பார் படத்தில் நடித்தபோது ஜோதிகாவுடன் ஏற்பட்ட காதல் திருமணத்தில் முடிந்தது. திருமணத்துக்கு பிறகு சில காலம் நடிக்காமல் இருந்த ஜோதிகா 36 வயதினிலே மூலம் ரீ என்ட்ரி கொடுத்தார். தொடர்ந்து படங்களில் நடித்துவருகிறார். கடைசியாக அவரது நடிப்பில் ஸ்ரீகாந்த் படம் வெளியானது. இந்தப் படம் தவிர்த்து வேறு சில படங்களிலும் நடிக்கிறார் ஜோதிகா.

தொடர்ந்து வதந்தி: இதற்கிடையே ஜோதிகாவால் சூர்யா வீட்டுக்குள் பிரச்னை ஓடிக்கொண்டிருப்பதாக கடந்த சில காலமாகவே தொடர்ந்து பேச்சு அடிபடுகிறது. அதுமட்டுமின்றி சூர்யா மும்பைக்கு சென்று செட்டில் ஆகவே ஜோதிகாதான் காரணம் என்றும்; சென்னை வந்தால்கூட சிவகுமாரை ஜோதிகா சந்திப்பதில்லை என்றும் சொலல்பப்ட்டது. ஆனால் அப்படியெல்லாம் எதுவுமே இல்லை என்று ஜோதிகா கொடுத்த ஒரு பேட்டியில் தெளிவுப்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

பிருந்தா பேட்டி: இந்நிலையில் நடன அமைப்பாளர் பிருந்தா சூர்யா மற்றும் ஜோதிகா குறித்து பேசியிருக்கிறார். அவர் அளித்த சமீபத்திய பேட்டியில், “காக்க காக்க படத்தில் இடம்பெற்ற ஒன்றா ரெண்டா ஆசைகள் பாடலில் ஜோதிகாவுக்கும், சூர்யாவுக்கும் நெருக்கமான காட்சிகள் இருந்தன. ஆனால் ஷூட்டிங் ஸ்பாட்டில் ஜோதிகாவின் அருகில் செல்லவே சூர்யா அவ்வளவு கூச்சப்பட்டார். ஆனால் ஜோதிகாவோ அட கிட்ட வாயா என்று சொல்வார். அதை பார்க்கவே அழகாக இருக்கும்” என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X