விஜய்யும் திரிஷாவும் எப்படி அதை செஞ்சாங்கனு தெரியல.. ரொம்ப கஷ்டம்.. ஓபனாக பேசிய பிரபலம்
சென்னை: விஜய்யும் திரிஷாவும்தான் கடந்த 20 வருடங்களாக கோலிவுட்டின் ரீல் ஜோடிகளில் ஃபேமஸானவர்கள். அவர்கள் இணைந்து நடித்தாலே அந்தப் படத்துக்கு ப்ரோமோஷன் பெரிதாக தேவையிருக்காது. ஏனெனில் இரண்டு பேரையும் திரையில் ஒன்றாக பார்ப்பதற்கு ரசிகர்கள் படையெடுப்பார்கள். கடைசியாக இரண்டு பேரும் சேர்ந்து GOAT படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடினார்கள். அதற்கு முன்னதாக லியோ படத்தில் ஜோடியாக நடித்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
கோலிவுட்டின் தவிர்க்க முடியாத ஹீரோக்களில் ஒருவர் விஜய். இதுவரை 68 படங்களில் நடித்திருக்கும் அவர் வெற்றி, தோல்வி என இரண்டையுமே கலந்துகொடுத்திருக்கிறார். அதேசமயம் அவர் கொடுத்த வெற்றிகள் எல்லாம் மெகா ஹிட்டுகளாக அமைந்திருக்கின்றன. கடைசியாக அவரது நடிப்பில் வெளியான நான்கு படங்களும் விமர்சன ரீதியாக அடி வாங்கினாலும்; வசூல் ரீதியாக சக்கைப்போடு போட்டன. அதனை படத்தை தயாரித்த தயாரிப்பு நிறுவனங்களே அறிவித்தன.

கெத்து திரிஷா: விஜய் எப்படியோ அதேபோல்தான் திரிஷாவும். அவரும் சினிமாவில் கிட்டத்தட்ட 20 வருடங்களுக்கும் மேலாக இருக்கிறார். சிறிய வேடத்தில் அறிமுகமாகி பிறகு ஹீரோயினாக மாறிய அவர் குறுகிய காலத்திலேயே முன்னணி ஹீரோயின் என்ற அந்தஸ்தை பெற்றார். இப்போதும்கூட அவரது கைவசம் ஏராளமான படங்கள் இருக்கின்றன. அத்தனையும் பெரிய ஹீரோக்களின் படங்கள் என்பது குறிப்பிடத்தக்கது. நாளைகூட அவர் நடிப்பில் விடாமுயற்சி திரைப்படம் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
விஜய், திரிஷா: திரிஷா எத்தனை ஹீரோக்களுடன் நடித்தாலும் சரி; விஜய் எத்தனை ஹீரோயின்களுடன் நடித்தாலும் சரி; விஜய்யும், திரிஷாவும் ஜோடி சேர்ந்தால் அந்த ஜோடியை ரசிகர்கள் வெகுவாக ரசிப்பார்கள். இருவரும் முதன்முதலாக கில்லி படத்தில் நடித்தார்கள். அதனையடுத்து திருப்பாச்சி, ஆதி, குருவி, லியோ ஆகிய படங்களில் நடித்தார்கள். இவர்கள் இணைந்து நடித்த படங்களில் இவர்களின் கெமிஸ்ட்ரியை பார்த்து ரசிகர்கள் ஆச்சரியம்தான் படுவார்கள். பல வருடங்கள் கழித்து அவர்கள் இணைந்து நடித்த லியோ படத்திலும் அதுதான் நடந்தது.
நெருங்கிய நண்பர்கள்: விஜய்யும், திரிஷாவும் கில்லி பட சமயத்திலிருந்தே நெருங்கிய நண்பர்களாக இருக்கிறார்கள். கடந்த வருடம்கூட கோவாவில் நடந்த கீர்த்தி சுரேஷின் திருமணத்துக்கு இரண்டு பேரும் தனி விமானத்தில் சென்றார்கள். அதனை வைத்து பலரும் கிசுகிசுக்களை கிளப்பிவிட்டாலும்; நட்பு ரீதியாகவே அவர்கள் பயணம் செய்தார்கள் என்று இரண்டு பேருக்குமான நெருங்கிய வட்டாரம் தெரிவிக்கிறது. இந்தச் சூழலில் அவர்கள் இரண்டு பேரும் குறித்து பிரபல நடன அமைப்பாளரான பிருந்தா தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்திருக்கும் பேட்டி சமூக வலைதளங்களில் பயங்கரமாக ட்ரெண்டாகியிருக்கிறது.
பிருந்தாவின் பேட்டி: அவர் அளித்த பேட்டியில், "ஆதி படத்தில் இடம்பெற்ற ஒல்லி ஒல்லி இடுப்பே என்ற பாடலுக்காக ஐரோப்பாவை சேர்ந்த நாட்டுக்கு சென்றிருந்தோம். நாங்கள் சென்ற மாதம் என்பது டிசம்பர். அப்போது அங்கு பனிப்பொழிவு அவ்வளவு இருக்கும். விஜய்க்கு ஒரு சட்டை உள்ளே பனியன், திரிஷாவுக்கு குட்டியாக ஒரு ட்ரெஸ். இவைதான் அவர்களுக்கு காஸ்ட்யூம். நாங்கள் எல்லாம் ஜெர்கின் போட்டுக்கொண்டு இருந்தோம். அவ்வளவு குளிரில் அந்த காஸ்ட்யூமை போட்டுக்கொண்டு எப்படி அந்தப் பாடலுக்கு நடனம் ஆடினார்கள் என்று தெரியவில்லை. அப்படி ஆடுவதெல்லாம் ரொம்பவே கஷ்டம்" என்றார்.


Click it and Unblock the Notifications











