Captain Vijayakanth: ஹை-ரிஸ்க் எடுத்த விஜயகாந்த்... வியக்க வைக்கும் கேப்டனின் ரியல் ஆக்‌ஷன் வீடியோ

சென்னை: கேப்டன் விஜயகாந்தின் தற்போதைய உடல்நிலை குறித்து பிரபலங்கள் உட்பட ரசிகர்கள் கவலை தெரிவித்து வருகின்றனர். அவர்களுக்கு புத்துணர்வு கொடுக்கும் வகையில் விஜயகாந்தின் த்ரோபேக் வீடியோ ஒன்றை பிரபலம் ஒருவர் பகிர்ந்துள்ளார்.

விஜயகாந்தின் ரியல் ஆக்‌ஷன் வீடியோ
கோலிவுட்டின் டாப் ஹீரோக்களில் ஒருவராக மாஸ் காட்டியவர் கேப்டன் விஜயகாந்த். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலகநாயகன் கமல்ஹாசன் இருவரும் உச்சத்தில் இருந்த போது, விஜயகாந்துக்கு என மாபெரும் ரசிகர்கள் படை இருந்தது. நடிப்பை விடவும் ஆக்‌ஷன் காட்சிகளில் அதகளம் செய்வார் கேப்டன்.

 Captain Vijayakanth: Vijayakanth sharing his High-Risk fight sequence in Sethupathi IPS

முக்கியமாக கால்களால் விஜயகாந்த் போடும் சண்டைக் காட்சிகளுக்கு பெரிய ரசிகர்கள் கூட்டமே உள்ளது. சினிமாவில் இருந்து அரசியலுக்குச் சென்ற விஜயகாந்த், கடந்த சில நாட்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டு அதற்கான சிகிச்சை எடுத்து வந்தார். மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய விஜயகாந்தை தேமுதிக பொதுக்குழு கூட்டத்திற்கு அவரது குடும்பத்தினரால் அழைத்துச் செல்லப்பட்டது சர்ச்சையானது. இதற்கு பிரபலங்கள் பலரும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.

அதேபோல் கேப்டனின் நிலையை கண்டு அவரது ரசிகர்களும் சோகத்தில் ஆழ்ந்திருந்தனர். அவர்களை உற்சாகப்படுத்தும் வகையில் ஏவிஎம் நிறுவனத்தின் அருணா குகன், டிவிட்டரில் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் விஜயகாந்தின் த்ரோபேக் பேட்டி ஒன்றையும் அவர் ஷேர் செய்துள்ளார். ஏவிஎம் தயாரிப்பில் விஜயகாந்த் நடித்த படங்களில் சேதுபதி ஐபிஎஸ் சூப்பர் ஹிட்டானது.

1994ம் ஆண்டு பொங்கல் ஸ்பெஷலாக வெளியான இந்தப் படத்தை பி வாசு இயக்கியிருந்தார். விஜயகாந்த் ஜோடியாக மீனாவும், முக்கியமான கேரக்டர்களில் நம்பியார், கவுண்டமணி, ஸ்ரீவித்யா உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். விஜயகாந்த் சேதுபதி என்ற ஐபிஎஸ் அதிகாரியாக நடித்து ஆக்‌ஷனில் மாஸ் காட்டியிருப்பார். இந்தப் படம் இப்போதும் விஜயகாந்த் ரசிகர்களின் ஃபேவரைட் லிஸ்ட்டில் உள்ளது.

இந்நிலையில், சேதுபதி ஐபிஎஸ் படத்தில் வரும் ஒரு சண்டைக் காட்சியில் நடித்தது குறித்து விஜயகாந்த் தனது அனுபவத்தை பகிர்ந்துள்ளார். அதாவது ஒரு காட்சியில் தீவிரவாதிகள் விஜயகாந்தை கொலை செய்ய வருவார்கள், அதில் 70 கார்களை வைத்து 18 நாட்கள் படமாக்கினார்களாம். முக்கியமாக படப்பிடிப்பு அரை மணி நேரம் மட்டுமே நடக்கும் எனவும், அதன்பின்னர் மழை வந்துவிடும் என்றும் விஜயகாந்த் கூறியுள்ளார்.

ஆனால், 15 நாட்களும் ஏவிஎம் நிறுவனம் தங்களுக்கு தேவையான ஏற்பாடுகளை செய்து கொடுத்தது. அதனால் தான் அந்த சண்டைக் காட்சியை திருப்தியாக எடுக்க முடிந்ததாக விஜயகாந்த் கூறியுள்ளார். அதுமட்டும் இல்லாமல் தான் நடித்த சண்டைக் காட்சிகளிலேயே அதிக ரிஸ்க் எடுத்து நடித்தது சேதுபதி ஐபிஎஸ் படத்தில் வரும் இந்த ஃபைட் சீன் தான் என்று விஜயகாந்த் நெகிழ்ச்சியாகக் கூறியுள்ளார். இந்த வீடியோவை ஷேர் செய்துள்ள அருணா குகனும், விஜயகாந்தின் அர்ப்பணிப்பு குறித்து பாராட்டியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X