இன்னொரு முகத்தை பார்ப்பீங்க.. தனுஷால் அமலா பாலை மிரட்டினாரா ரஜினி?.. பிரபலம் இப்படி சொல்றாரே

சென்னை: தனுஷின் நடிப்பில் கடைசியாக வெளியான குபேரா திரைப்படம் தமிழில் சுமாரான வரவேற்பையே பெற்றது. சேகர் கம்முல்லா இயக்கியிருந்த அந்தப் படத்துக்கு தெலுங்கில் நல்ல ரெஸ்பான்ஸ். இப்போது தேரே இஷ்க் மெய்ன் படத்தில் நடித்து முடித்திருக்கும் அவர்; போர் தொழில் இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் நடித்துவருகிறார். இந்நிலையில் பத்திரிகையாளர் செய்யாறு பாலு பேசிய த்ரோபேக் வீடியோ திடீரென ட்ரெண்டாகியிருக்கிறது.

தனுஷ் மிகச்சிறந்த நடிகர்களில் ஒருவராக திகழ்ந்துகொண்டிருக்கிறார். கோலிவுட்டில் ஆரம்பித்த அவரது பயணம் பல விமர்சனங்களை சந்தித்தது. ஆனால் அதையெல்லாம் காதில் போட்டுக்கொள்ளாத அவர் தனது திறமையை படிப்படியாக வளர்த்துக்கொண்டு இப்போது ஹாலிவுட்வரை சென்றிருக்கிறார். அடுத்ததாக அவர் நடிக்கவிருக்கும் ஹாலிவுட் படத்தில் சிட்னி ஸ்வீனி ஹீரோயினாக நடிக்கவிருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த விஷயம் தனுஷ் ரசிகர்களை உச்சக்கட்ட மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.

தமிழில் பிஸி: ஹாலிவுட் சென்றாலும் தமிழில் அவர் டஜன் கணக்கில் படங்கள் வைத்திருக்கிறார். கடைசியாக அவரது நடிப்பில் குபேரா திரைப்படம் வெளியானது. பெரிய எதிர்பார்ப்போடு வெளியான அந்தப் படம் தமிழில் சுமாரான வரவேற்பைதான் பெற்றது. அதற்கும் முன்னதாக வெளியான ராயன் தோல்வி, கேப்டன் மில்லர் சுமார் என தனுஷ் ஒரு ஹிட் படத்தை கொடுக்க முடியாமல் தத்தளித்துக்கொண்டிருக்கிறார்.

Cheyyaru Balu has said that Rajinikanth threatened Amala Paul through Dhanush Here are Throwback Interview
Photo Credit:

பெர்சனல் வாழ்க்கை: இருப்பினும் அடுத்தடுத்த படங்கள் அவருக்கு நம்பிக்கையூட்டும் விதமாகவே இருக்கிறது. இதற்கிடையே ரஜினிகாந்த்தின் மூத்த மகள் ஐஸ்வர்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இரண்டு ஆண் குழந்தைகளை பெற்ற அந்தத் தம்பதி திடீரென பிரிந்தது. கடந்த வருடம்தான் சட்டப்பூர்வமாக அவர்கள் விவாகரத்து பெற்றார்கள். இந்தப் பிரிவுக்கு ஏகப்பட்ட காரணங்கள் யூகங்களாக சொல்லப்பட்டுக்கொண்டே இருக்கின்றன.

தனுஷின் பதிலடி: முக்கியமாக இவ்விவகாரத்தில் தனுஷைத்தான் பெரும்பாலனோர் டார்கெட் செய்தார்கள். அதுமட்டுமின்றி தேவையில்லாத விஷயங்களில் எல்லாம் தனுஷின் பெயரை இழுத்துவிடுவதையே ஒருதரப்பினர் வாடிக்கையாக வைத்திருக்கிறார்கள். அவற்றுக்கெல்லாம் குபேரா படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் தரமான பதிலடியை கொடுத்திருந்தார் தனுஷ். இந்நிலையில் பத்திரிகையாளர் செய்யாறு பாலு தனியார் யூடியூப் சேனலுக்கு அளித்த பழைய பேட்டி ட்ரெண்டாகியிருக்கிறது.

செய்யாறு பாலு பேட்டி: அவர் அந்தப் பேட்டியில், "தனுஷுடன் நடிக்கும் நடிகைகள் பரபரப்பாக பேசப்படுவார்கள். அவர் அப்பாவி போல் இருந்தாலும் அவருக்கென்று சில்மிஷம் இருக்கிறது. ஒருகட்டத்தில் வீட்டுக்கே போவதில்லை என பத்திரிகைகளிலேயே எழுதப்பட்டன. அந்த சமயத்தில் ரஜினிகாந்த் ரொம்பவே டென்ஷனாகிவிட்டார். அமலா பால் தங்கியிருந்த அப்பார்ட்மென்ட்டுக்கே நேராக சென்று, அவர் (தனுஷ்) ஒரு குடும்பஸ்தன். இப்படி செய்யலாமா?.. இனி இப்படி தொடர்ந்தால் ரஜினியின் இன்னொரு முகத்தை பார்த்திருக்கமாட்டீங்க.. பார்ப்பீங்க என மிரட்டாமல் சொல்லிவிட்டு வந்தார்" என்றார்.

எழுந்த கிசுகிசு: முன்னதாக, தனுஷும் அமலா பாலும் சேர்ந்து வேலையில்லா பட்டதாரி படத்தில் முதன்முறையாக நடித்தார்கள். அந்தப் படம் மெகா ஹிட்டானது. மேலும் அப்படத்தின்போதுதான் தனுஷையும், அமலா பாலையும் சேர்த்து வைத்து ஏகப்பட்ட கிசுகிசுக்கள் வந்துகொண்டே இருந்தன என்பது நினைவுகூரத்தக்கது. அந்த கிசுகிசுக்கள் வந்தபோதெல்லாம், தனுஷை வேண்டுமென்றே டேமேஜ் செய்வதற்காகத்தான் இப்படி கிளப்பிவிடுகிறார்கள் என அவரது ரசிகர்கள் பதிலடி கொடுத்தார்கள். இந்த கிசுகிசுக்கள் ஒருபக்கம் வந்தாலும் நல்ல நட்பில் இருக்கும் தனுஷும், அமலா பாலும் வேலையில்லா பட்டதாரி படத்தின் இரண்டாவது பாகத்திலும் நடித்தார்கள். அந்தப் படம் சுமாரான வரவேற்பையே பெற்றது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X