தியேட்டர் வாசலில் படுத்த அஞ்சலி.. அய்யய்யோ அவங்க இப்படியும் செஞ்சிருக்காங்களா?

சென்னை: நடிகை அஞ்சலி தமிழ் சினிமாவின் சிறந்த நடிகை என்ற பெயரை பெற்றவர். கற்றது தமிழ் படத்தில் அறிமுகமான அவர் ஏராளமான படங்களில் நடித்திருக்கிறார். அவரது நடிப்பில் கடைசியாக கேம் சேஞ்சர் திரைப்படம் வெளியாகி தோல்வியடைந்தது. அடுத்ததாக ஏழு கடல் ஏழு மலை படத்தில் நடித்திருக்கிறார். அப்படத்தை ராம் இயக்கியிருக்கிறார். இந்தச் சூழலில் அவர் குறித்து பிரபல பத்திரிகையாளர் செய்யாறு பாலு பேசியிருக்கும் விஷயம் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்திருக்கிறது.

இயக்குநர் ராம் இயக்கிய கற்றது தமிழ் படத்தில் நடிகையாக அறிமுகமானவர் அஞ்சலி. அந்தப் படம் வெளியானபோது பெரிதாக கொண்டாடப்படாவிட்டாலும் இப்போது அப்படத்தை க்ளாசிக் படம் என்று பலரும் கூறுகிறார்கள். அந்தப் படத்தில் அஞ்சலியின் நடிப்புக்கும் ஏகப்பட்ட வரவேற்பு கிடைத்தது. அந்தப் படத்தைத் தொடர்ந்து அவருக்கு வரிசையாக வாய்ப்புகள் கிடைத்தன. சூழல் இப்படி இருக்க திடீரென அவருக்கு ஏற்பட்ட சில பிரச்னைகள் காரணமாக சினிமாவிலிருந்து ஒதுங்கியிருந்தார். தற்போது மீண்டும் நடிக்க ஆரம்பித்திருக்கிறார்.

Throwback Stories Anjali Angadi Theru

அடுத்த படம்: அவரது நடிப்பில் கடைசியாக கேம் சேஞ்சர், மதகஜராஜா ஆகிய இரண்டு படங்கள் ரிலீஸாகின. இவற்றில் கேம் சேஞ்சர் படம் படுதோல்வியை சந்தித்தது. அந்தப் படம் ஷங்கரின் இயக்கத்தில் உருவாகியிருந்தது குறிப்பிடத்தக்கது. அடுத்ததாக அஞ்சலி ராமின் இயக்கத்தில் ஏழு கடல் ஏழு மலை படத்தில் நடித்திருக்கிறார். கண்டிப்பாக கற்றது தமிழ் மாதிரியே இந்தப் படமும் தனக்கு மிகப்பெரிய பெயரை பெற்றுத்தரும் என்கிற முழு நம்பிக்கையில் இருக்கிறார் அவர்.

செய்யாறு பாலு பேட்டி: இதற்கிடையே அஞ்சலியின் கரியரில் அங்காடித் தெரு படத்துக்கும் முக்கியமான இடம் இருக்கிறது. அதிலும் அவர் தனது மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். இந்நிலையில் அந்தப் படத்தில் அஞ்சலி நடித்தது குறித்து பிரபல பத்திரிகையாளர் செய்யாறு பாலு ஒரு பேட்டியில் பேசியிருக்கிறார். தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில், "அங்காடித் தெரு படத்துக்கு மகேஷ் என்கிற ஹீரோவை ஃபிக்ஸ் செய்தாலும் ஹீரோயினாக யாரை நடிக்க வைப்பது என்பதில் வசந்த பாலனுக்கு ஏகப்பட்ட யோசனைகள் இருந்தன. சேல்ஸ் கேர்ஸ்களின் வலியை சொல்லும் படமாக அது இருந்ததால் அதற்கான ஹீரோயினை தேடிக்கொண்டே இருந்தார் வசந்தபாலன். படத்தில் நடிக்கும் ஹீரோயின் தென் மாவட்டத்துக்கார பெண் சாயலிலும் இருக்க வேண்டும்; பக்கத்து வீட்டு பெண் போலும் தோற்றமளிக்க வேண்டும்.

அஞ்சலியை தேர்ந்தெடுத்தார்: ஹிந்தியிலிருந்துகூட இந்தப் படத்துக்காக ஆடிஷனுக்காக வந்தார்கள். ஆனால் இயக்குநருக்கு திருப்தியில்லை. அப்போதுதான் கற்றது தமிழ் படத்தில் அஞ்சலியின் நடிப்பை பார்த்து வியந்திருக்கிறார் வசந்தபாலன். உடனே அஞ்சலியை தொடர்புகொண்டு அங்காடித் தெரு படம் பற்றி கூறினார். ஆனால் பெரிய கமர்ஷியல் ஹீரோயினாக வேண்டும் என்கிற ஆசையில் இருந்த அஞ்சலி முதலில் இந்தப் படத்தில் நடிக்க தயக்கம் காட்டினார். மேலும் இந்தக் கதைக்கு தான் சரியாக இருப்பேனா என்று சந்தேகமும் அவருக்கு இருந்தது. அதனைத் தொடர்ந்து இயக்குநர் கொடுத்த தைரியம், சம்பள விவகாரத்தால் அதில் நடிக்க ஒத்துக்கொண்டார்.

தியேட்டர் வாசலில் படுக்கை: அந்தக் கேரக்டருக்காக துணி கடைக்கு சென்று சேல்ஸ் கேர்ள்ஸ் எப்படி உழைக்கிறார்கள்; அவர்களது வாழ்க்கை முறை என்னவென்பதை பார்த்த அஞ்சலி; வேதனையடைந்து இந்தப் படத்தில் நடிப்பதாக ஒத்துக்கொண்டார். படத்தில் அவரும், அவரது தங்கை கதாபாத்திரமும் தியேட்டர் ஃப்ளாட்பாரத்தில் படுப்பது போன்ற காட்சி. அதில் முதலில் நடிப்பதற்கு ரொம்பவே தயக்கம் காட்டி நடிக்க முடியாது என்று சொல்லிவிட்டார். ஆனால் இயக்குநர் கட்டாயப்படுத்தியதால் வேண்டா வெறுப்பாக அந்த சீனில் நடித்தார். ஒருகட்டத்தில் அஞ்சலி நடித்த சீன்களை அவருக்கு இயக்குநர் போட்டு காண்பித்தவுடன் முழு திருப்தி வந்து ஈடுபாட்டுடன் அந்தப் படத்தில் நடித்துக்கொடுத்தார்" என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X