Vijay: சீறிய விஜய்.. சமாதானப்படுத்திய எஸ்ஏசி.. யார்கிட்ட தெரியுமா?

சென்னை: நடிகர் விஜய் மிகப்பெரிய மாஸ் ஹீரோவாக சர்வதேச அளவில் ஏராளமான ரசிகர்களை கொண்டவராக காணப்படுகிறார்.

இவரது சமீபத்தில் நடவடிக்கைகள் இவர் விரைவில் அரசியலுக்கு வருவார் என்ற எதிர்பார்ப்பை ரசிகர்களிடையே ஏற்படுத்தியுள்ளது.

தற்போது லியோ படத்தில் நடித்து முடித்துள்ள விஜய், விரைவில் இந்தப் படத்தின் இசை வெளியீட்டிலும் பங்கேற்க உள்ளார்.

Cheyyaru Balu revealed the secret incident when Vijay angry with media person

பத்திரிகையாளரிடம் சீறிய விஜய் (த்ரோபேக்): நடிகர் விஜய் நாளைய தீர்ப்பு என்ற படத்தின்மூலம் சினிமாவில் அறிமுகமானார். அவரது தந்தை எஸ்ஏசி மிகப்பெரிய இயக்குநர் என்ற வகையில், அவரது இயக்கத்தில் சிறுவனாகவும் இளைஞனாகவும் நடித்துள்ளார் விஜய். இந்தப் படங்கள் கலவையான விமர்சனங்களை பெற்ற போதிலும் விஜய்க்கு சிறப்பான என்ட்ரியை தமிழில் ஏற்படுத்திக் கொடுத்ததை மறுப்பதற்கில்லை. இயக்குநராக மட்டுமில்லாமல் விஜய்க்கு எல்லாமுமாக அவரது அப்பா இருந்துள்ளார்.

சமீபத்தில் அறுவை சிகிச்சை மேற்கொண்டிருந்த தன்னுடைய தந்தையை நேரில் சந்தித்தார் நடிகர் விஜய். இந்த சந்திப்பின்போது விஜய், எஸ்ஏசி மற்றும் சோபா சந்திரசேகர் ஆகியோர் இணைந்திருந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தன. விஜய்க்கும் அவரது அப்பாவிற்கும் நீண்ட நாட்களாக மனக்கசப்பு இருந்த நிலையில், அவர்கள் பல ஆண்டுகளாக பேசாமல் இருந்தனர். இது ரசிகர்களிடையே விமர்சனங்களுக்கு உள்ளானது.

Cheyyaru Balu revealed the secret incident when Vijay angry with media person

இந்நிலையில் தற்போது அவர்கள் இணைந்துள்ளது அவரது ரசிகர்களுக்கும் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விஜய்யின் ஆரம்பக் காலகட்டங்களில் அவருக்கு எல்லாமுமாக இருந்தவர் எஸ்ஏசி. விஜய் குறித்த எந்தவிதமான நெகட்டிவ் விமர்சனங்களையும் அவர் சட்டென்று தள்ளி வைத்து விட மாட்டார். அதேபோல விஜய்யை பாராட்டி எழுதுபவர்களையும் கூப்பிட்டு பாராட்டுவார் எஸ்ஏசி என்று தற்போது பிரபல பத்திரிகையாளர் செய்யாறு பாலு தெரிவித்துள்ளார்.

விஜய்யின் இசை வெளியீடுகளில் அவரது பேச்சு ரசிகர்களின் விருப்பத்திற்குரியதாக உள்ளது. ஆனால் அவரது கேரியரின் துவக்கத்தில் அவர் அதிகமாக பேச மாட்டார். மாறாக அவரது அப்பா எஸ்ஏசிதான் விஜய்க்கு பதிலாக அனைத்து விஷயங்களையும் பத்திரிகையாளர்களிடம் பேசுவார். விஜய் இந்த பேச்சின்போது அமைதியாக உட்கார்ந்திருப்பதையே வழக்கமாக பார்க்க முடியும். அந்த அளவிற்கு கூச்ச சுபாவமுள்ளவராக அவர் காணப்பட்டார்.

இதே நடைமுறையைதான் விஜய் தன்னுடைய திருமண அறிவிப்பின்போதும் கடைபிடித்தார். சங்கீதாவுடன் காதலா, எப்படி ப்ரபோஸ் செய்தார் என்பது உள்ளிட்ட பல கேள்விகளை பத்திரிகையாளர்கள் அடுக்கிய நிலையில், விஜய் அதற்கெல்லாம் பதில் சொல்லாமல் அமைதியாக இருந்த நிலையில், எஸ்ஏசிதான் இந்தக் கேள்விகளுக்கு பதிலளித்தார். ஒரு கட்டத்தில் பொறுமையிழந்த பத்திரிகையாளர்களில் ஒருவர், என்ன எதுவும் பேசாமல் இருக்கிறீர்கள், காதலித்தது நீங்களா இல்லை உங்கள் அப்பாவா என்று எடக்குமடக்காக கேள்வி எழுப்பியுள்ளார்.

இதைக் கேட்டு கோபமடைந்த விஜய், அந்த பத்திரிகையாளரிடம் பாய்ந்துள்ளார். மிகவும் கடுமையாக பேச முற்பட்ட விஜய்யை, அந்த நேரத்தில் அமைதிப்படுத்திய எஸ்ஏசி, அந்த பத்திரிகையாளரிடமும் நாசுக்காக இதுகுறித்து கடிந்து பேசியுள்ளார். இதனால் அதிகமான சர்ச்சைக்குரிய விஷயமாக மாறவிருந்த அந்த சூழலை, நிதானமாக எஸ்ஏசி ஹேண்டில் செய்ததாக தற்போது செய்யாறு பாலு தெரிவித்துள்ளார்.

விஜய்யின் பல்வேறு சந்தர்ப்பங்களில், சாதனைகளில் துணை நின்றவர் அவரது தந்தை எஸ்ஏசி. அவர்களுக்குள் துப்பாக்கி படத்தின்போது ஏற்பட்ட சில மனக்கசப்புகள் தொடர்ந்து, பேச்சு வார்த்தை நிற்கும் அளவிற்கு சென்ற நிலையில், தற்போது தன்னுடைய தந்தையின் அறுவை சிகிச்சை காரணமாக அவரை நேரில் சந்தித்துள்ளார் விஜய். இதுகுறித்து நெகிழ்ச்சி தெரிவித்து எஸ்ஏசி சமீபத்தில் பதிவிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X