Rajinikanth - சூப்பர் ஸ்டார் பட்டம்.. பத்திரிகையாளரிடம் கெஞ்சிய ரஜினி?.. நடந்தது என்ன தெரியுமா?

சென்னை: Rajinikanth (ரஜினிகாந்த்) சூப்பர் ஸ்டார் பட்டம் கொடுத்த புதிதில் ரஜினி செய்த செயல் குறித்து தெரியவந்திருக்கிறது.

கோலிவுட்டில் இப்போதைய ஹாட் பஞ்சாயத்தாக ஓடிக்கொண்டிருப்பது சூப்பர் ஸ்டார் பட்டம்தான். ரஜினிகாந்த் வரிசையாக இரண்டு படங்கள் தோல்வி கொடுத்து வியாபாரத்தில் பின் தங்க விஜய்யும் வரிசையாக இரண்டு படங்கள் தோல்வியாக கொடுத்தாலும் நல்ல வசூலை எடுத்துவிட்டார் என்று கூறப்படுகிறது. இதன் காரணமாக விஜய்தான் அடுத்த சூப்பர் ஸ்டார் என பலரும் பேச ஆரம்பித்தனர். ஆனால் இது ரஜினி ரசிகர்களை கொதிப்படைய செய்திருக்கிறது.

Cheyyaru Balu Shares abou Rajinikanths Super Star Title

இருதரப்பு விவாதம்: ஜெயிலரிலிருந்து வெளியான ஹுக்கும் என்ற பாடலில் நேரடியாகவே சூப்பர் ஸ்டார் ரஜினிதான் என்பது போன்ற வரிகள் இடம்பெற்றன. அதுமட்டுமின்றி அந்தப் பாடல் மூலம் விஜய்க்கு தக்க பதிலடி கொடுத்துவிட்டதாக ரஜினி ரசிகர்கள் பேசினர். இதற்கு விஜய்யின் ரசிகர்கள் பதிலடி கொடுக்க இரண்டு தரப்புக்குமிடையே அது சமூக வலைதளங்களில் விவாதமானது.

பற்ற வைத்த பரட்டை: சூழல் இப்படி ஜெயிலர் பட ஆடியோ வெளியீட்டு விழாவில் ரஜினியின் பேச்சு மேலும் இந்த பஞ்சாயத்தை பெருசாக்கியது. சூப்பர் ஸ்டார் பட்டத்துக்கான பிரச்னை 1977லேயே ஆரம்பித்துவிட்டது. அப்போது கமல் ஹாசன் உச்சத்தில் இருந்தார்; சிவாஜி ஹீரோவாக நடித்துக்கொண்டிருந்தார். அப்படி இருக்கும் சூழலில் எனக்கு சூப்பர் ஸ்டார் என்ற பட்டம் வேண்டாம் என நினைத்தேன். ஆனால் அது வந்துவிட்டது.

வெறுப்பிலிருந்து உருவான வெறுப்பானவன்: அதனால் பலருக்கும் என் மீது வெறுப்பு. அந்த வெறுப்பிலிருந்து மீண்டு வந்த நெருப்பானவன் நான் என பேசினார். அதுமட்டுமின்றி காக்கா கழுகு கதையையும் சொன்னார். அந்தக் கதையில் வரும் காக்கா விஜய்தான் என பலரும் சொல்ல ஆரம்பித்திருக்கின்றனர். இதனையடுத்து நடைபெறவிருக்கும் லியோ ஆடியோ லான்ச்சில் விஜய் என்ன குட்டிக் கதை சொல்லப்போகிறாரோ அது அவருக்குத்தான் வெளிச்சம்.

சூப்பர் ஸ்டார் கதை: இந்தச் சூழலில் சூப்பர் ஸ்டார் பட்டம் அவருக்கு எப்படி வந்தது என்பது குறித்து பார்ப்போம். இப்போது பிரபல தயாரிப்பாளராக இருக்கும் தாணு ரஜினி வளர்ந்துவந்த காலகட்டத்தில் விநியோகஸ்தராக இருந்தார். அந்த சமயத்தில் ரஜினி நடித்த பைரவி படம் ரிலீஸானது. அப்போதுதான் உதயம் தியேட்டரில் பல அடி உயர கட் அவுட் வைத்தார்.அதுமட்டுமின்றி அகில இந்திய சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தையும் கொடுத்தார்.

கெஞ்சிய ரஜினி: ஆனால் அதற்கு ரஜினி திட்டவட்டமாக மறுத்திருக்கிறார். அதறகு தாணுவோ அகில இந்திய என்ற வார்த்தையை எடுத்துவிடுவோம். சூப்பர் ஸ்டார் என்பதை மட்டும் வைத்துக்கொள்ளுங்கள் என சொல்லி ரஜினியை சம்மதிக்க வைத்திருக்கிறார். அந்தப் பட்டமும் அவருடன் ஒட்டிக்கொண்டது.

ஆனால் அந்தக் காலகட்டத்தில் பத்திரிகையாளர்களிடம் ரஜினிகாந்த், தன்னை பற்றி எழுதும்போது சூப்பர் ஸ்டார் என்று எழுதாதீர்கள் என கெஞ்சுவாராம். அந்த அளவு அவர் சூப்பர் ஸ்டார் பட்டத்தை போட்டுக்கொள்ள தயக்கம் காட்டியிருக்கிறார். இந்தத் தகவலை பத்திரிகையாளரான செய்யாறு பாலு ஒரு பேட்டியில் பகிர்ந்துகொண்டார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X