Trisha - த்ரிஷா - ராணா காதல் முறிவுக்கு அவர்கள்தான் காரணமா?.. பிரபலம் சொன்ன ஷாக் நியூஸ்
சென்னை: Trisha (த்ரிஷா) த்ரிஷாவுக்கு, ராணாவுக்குமான காதல் முறிவதற்கு இதுதான் காரணம் என செய்யாறு பாலு தெரிவித்திருக்கிறார்.
மௌனம் பேசியதே படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமான த்ரிஷா முதல் படத்திலேயே தனது நடிப்பாலும், அழகாலும் பலரது கவனத்தை ஈர்த்தார். பப்ளியான நடிகையைத்தான் தமிழ்நாடு ரசிகர்கள் கொண்டாடுவார்கள் என்ற பிம்பத்தை உடைத்து திறமை இருந்தால் ஒல்லியாக இருந்தாலும் தமிழ்நாட்டு ரசிகர்கள் ரசிப்பார்கள் என்பதை ஆணித்தரமாக உணர்த்தியவர் அவர்.

கனவுக்கன்னி: முதல் படம் கலவையான விமர்சனத்தை பெற்றாலும் த்ரிஷாவின் நடிப்பு ஈர்த்ததால் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் கிடைத்தன. அதன்படி அவர் நடித்த கில்லி, திருப்பாச்சி, சாமி, ஆறு என வரிசையாக படங்கள் ஹிட்டடித்தன. முக்கியமாக படத்துக்கு படம் த்ரிஷா தனது நடிப்பையும், அழகையும் மேம்படுத்திக்கொண்டே சென்றதால் தமிழ்நாட்டின் கனவுக்கன்னியாக மாறினார்.
தொடர்ந்து முன்னணி: தமிழ் மட்டுமின்றி தெலுங்கிலும் எண்ட்ரி ஆன த்ரிஷா அங்கும் முன்னணி ஹீரோக்களுடன் நடித்து பெரும் புகழடைந்தார். இதனால் த்ரிஷாவின் சாம்ராஜ்ஜியம் தமிழ்நாடு மட்டுமின்றி ஆந்திராவிலும் விரிவடைந்தது. அதனையடுத்து ஹிந்திக்கு சென்ற அவரால் தாக்குப்பிடிக்க முடியாவிட்டாலும் தொடர்ந்து தமிழில் முன்னணி இடத்தில்தான் இருக்கிறார். இப்போதுகூட லியோ படத்தில் நடித்திருக்கும் அவர் அடுத்ததாக அஜித்துடன் விடாமுயற்சி படத்தில் நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது.
திருமண சர்ச்சை: த்ரிஷாவுக்கு 40 வயது ஆகிறது. இருந்தாலும் இதுவரை அவர் திருமணம் செய்துகொள்ளாமல் இருக்கிறார். சில வருடங்களுக்கு முன்பு வருண் என்ற தொழிலதிபருடன் நிச்சயதார்த்தம் நடந்தது. ஆனால் திருமணம்வரை அவர்களது உறவு செல்லவில்லை. அதற்கு காரணமாக பல யூகங்கள் சொல்லப்பட்டிருக்கின்றன. இருந்தாலும் த்ரிஷா இதுவரை வாய் திறக்கவில்லை.
ராணாவுடன் காதல்?: இதற்கிடையே தெலுங்கில் நடித்தபோது த்ரிஷா ராணா டகுபதியை காதலித்ததாக பரவலாக பேசப்பட்டது. ஆனால் அந்த காதலும் பாதியில் முடிந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் அவர்களது காதல் முறிவுக்கு காரணம் குறித்து ஒரு தகவல் கூறப்படுகிறது. அதாவது, ராணா டகுபதி ராமநாயுடு குடும்பத்தை சேர்ந்தவர். ரொம்பவே செல்வாக்கு மிகுந்த குடும்பம். இவரது சித்தப்பாதான் வெங்கடேஷ். நாகார்ஜுனா குடும்பம், ராணா குடும்பம் எல்லாம் உறவினர்கள்தான்.
அந்த பரம்பரையை சேர்ந்தவர்கள் தங்களுக்குள் மிகவும் ஒற்றுமையாக இருப்பார்களாம். குறிப்பாக திருமணம் என்றால் தங்களது சொந்தத்துக்குள் மட்டுமே நடக்க வேண்டும் என்று யோசிப்பார்களாம். சமந்தாவைக்கூட முதலில் நாகார்ஜுனா குடும்பம் ஏற்றுக்கொள்ளவில்லையாம். ஆனால் நாக சைதன்யா ஒற்றைக்காலில் நின்றதால் மட்டும்தான் ஏற்றுக்கொண்டார்களாம்.
இதற்கிடையே த்ரிஷாவுடன் ராணாவுக்கு காதல் இருப்பதை ராணா குடும்பம் சுத்தமாக விரும்பவில்லையாம். அதனால்தான் அவர்கள் காதலை ஆரம்பத்திலேயே முறித்துவிட்டார்களாம். முக்கியமாக தெலுங்கில் த்ரிஷாவின் மார்க்கெட் காலி ஆனதற்கும் அந்தக் குடும்பம்தான் காரணம் என்று பரபரப்பாக பேசப்பட்டதாம். இந்தத் தகவலை பத்திரிகையாளர் செய்யாறு பாலு ஒரு பேட்டியில் பகிர்ந்துகொண்டார்.


Click it and Unblock the Notifications











