Atlee - என்னது ஜவான் விஜய்க்கு எழுதிய கதையா?.. எதுவாக இருந்தாலும் விஜய்யிடம் கேட்டுத்தான் அட்லீ செய்வாரா?

சென்னை: Atlee (அட்லீ) இயக்குநர் அட்லீ எதுவாக இருந்தாலும் விஜய்யிடம் கேட்டுத்தான் செய்வார் என்ற தகவல் வெளியாகியிருக்கிறது.

இயக்குநர் ஷங்கரிடம் உதவி இயக்குநராக இருந்து ராஜா ராணி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் அட்லீ. கடந்த 2013ஆம் ஆண்டு வெளியாகியிருந்த அந்தப் படத்தில் ஆர்யா, நயன்தாரா, நஸ்ரியா நஸீம், ஜெய் உள்ளிட்டோ நடித்திருந்தனர். காதல், பிடிக்காத திருமணம் என 2 லைனை வைத்துக்கொண்டு தனது மேக்கிங்கில் அதகளம் செய்திருந்தார் அட்லீ. படமும் நூறு நாட்கள் ஓடி சாதனை படைத்தது.

Cheyyaru Balu Shares about Vijay And Atlee Bonding

விஜய்யுடன் செட் ஆன அட்லீ: முதல் படம் நூறு நாட்கள் ஓடிய பிறகு விஜய்யுடன் இணைந்தார். தெறி படத்தை விஜய்க்காக முதலில் இயக்கிய அட்லீ அந்தப் படத்தில் விஜய்க்கு இரண்டு கெட்டப்புகள் கொடுத்து மாஸான சீன்களை வைத்து படத்தை ஹிட்டாக்கிவிட்டார். தெறியை தொடர்ந்து மெர்சல், பிகில் படங்களை இயக்கினார். இந்த இரண்டு படங்களில் மெர்சலில் விஜய்க்கு மூன்று ரோல்களையும், பிகில் படத்தில் இரண்டு ரோல்களையும் கொடுத்தார்.

மெர்சல் செய்த அட்லீ, மிஸ் ஆன பிகில்: இந்த இரண்டு படங்களில் மெர்சல் அதிரிபுதிரி ஹிட்டடித்தது. ப்ளாஷ்பேக் காட்சியில் வரும் விஜய்யின் கெட்டப் இன்றுவரை பலரது ஃபேவரைட். கதையும் ஓரளவு ஓகேயாக இருந்ததாலும் அட்லீயின் மேக்கிங் பட்டையை கிளப்பியதாலும் மெர்சல் நூறு கோடி ரூபாயை வசூலித்தது. ஆனால் பிகில் படமோ அட்டர் ஃப்ளாப் ஆனது குறிப்பிடத்தக்கது.

விஜய்தான் எல்லாமே: தெறி படத்திலிருந்தே விஜய்யுடனான பழக்கம் அட்லீக்கு நெருக்கமாகிவிட்டது. மேடையாக இருந்தாலும் சரி பேட்டியாக இருந்தாலும் அட்லீக்கு விஜய் அண்ணாதான். பிகில் ஆடியோ வெளியீட்டு விழாவில், எங்க அண்ணனுக்கு நான் தான் டா செய்வேன் என விஜய் குறித்து அட்லீ பேசியிருந்தது அப்போது ட்ரெண்டாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் சினிமா துறையில் தனக்கு நெருக்கமானவர்கள் வீட்டு விசேஷங்களில் மட்டும்தான் விஜய் கலந்துகொள்வார். அப்படி அவர் அட்லீயின் மனைவி ப்ரியாவின் வளைகாப்பு நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது. மேலும் அட்லீ இயக்கிய படம் என்பதால் ஜவான் குறித்த அறிவிப்பு ஒன்றையும் விஜய் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தது கவனிக்கத்தக்கது. அந்த அளவு விஜய்யும், அட்லீயும் நெருக்கமானவர்கள்.

Cheyyaru Balu Shares about Vijay And Atlee Bonding

விஜய்யை கேட்டுத்தான் செய்வாரா?: இந்தச் சூழலில் விஜய்யை கேட்டுவிட்டுத்தான் அட்லீ சில விஷயங்களை செய்வார் என்று கூறப்படுகிறது. அதாவது பிகில் படத்தை முடித்துவிட்டு அட்லீ இருந்தபோது இரண்டு பெரிய ஹீரோக்கள் அட்லீயை கூப்பிட்டு தங்களுக்கு படம் செய்யும்படி கூறி பெரிய தொகையை அட்வான்ஸாக கொடுக்க முன்வந்தனராம். ஆனால் அதற்கு அட்லீயோ விஜய் அண்ணனிடம் ஒரு வார்த்தை கேட்டுவிட்டு வருகிறேன் என சொன்னாராம். அதற்கு அந்த இரண்டு ஹீரோக்களுமே அப்படினா நீங்க ஒன்னும் செய்ய வேண்டாம் கிளம்புங்க என்று கூறிவிட்டாராம். இந்தத் தகவலை பத்திரிகையாளர் செய்யாறு பாலு தெரிவித்தார்.

மேலும் பேசிய அவர், ஜவானுக்கு முன்னதாகவே விஜய்க்கு அட்லீ கதையை தயார் செய்துவிட்டாராம். அந்த சமயத்தில் ஷாருக்கானிடமிருந்து அட்லீக்கு அழைப்பு வர விஜய்யே அனுப்பி வைத்து இந்தக் கதை அவருக்கு செட் ஆகும் என சொல்லி அனுப்பியதாகவும், அதனால்தான் ஜவான் பட ட்ரெய்லரில் விஜய்யின் சாயல் அடிக்கிறது என்றும் தெரிவித்தார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X