Ajith - ஷூட்டிங் ஸ்பாட்டில் அஜித்தை வெறித்தனமாக சைட் அடித்த பாலிவுட் நடிகை - வெளியான சீக்ரெட்
சென்னை: Ajith (அஜித்) ஷூட்டிங் ஸ்பாட்டில் அஜித்தை பாலிவுட் நடிகை வைத்த கண் வாங்காமல் சைட் அடித்த சம்பவம் தெரிய வந்திருக்கிறது.
கோலிவுட்டின் முன்னணி நட்சத்திரமாக ஜொலித்துக்கொண்டிருப்பவர் அஜித்குமார். யாரின் துணையும் இல்லாமல் திறமையின் துணையோடு சினிமாவுக்குள் வந்து பல முறை விழுந்து; விழுந்ததிலிருந்து கற்று மீண்டும் எழுந்து இன்று உயர்ந்த இடத்திற்கு வந்திருப்பவர். படத்தின் ப்ரோமோஷன், பேட்டி என எதையும் செய்யாமல் இருந்தாலும் அவருக்கென்று லட்சக்கணக்கானவர்கள் வெறித்தனமான ரசிகர்களாக இருந்துவருகின்றனர்.

சூப்பர் ஹிட் ஆன துணிவு: அஜித்குமார் சமீபத்தில் ஹெச்.வினோத் இயக்கத்தில் துணிவு படத்தில் நடித்தார். அந்தப் படம் வாரிசு படத்துக்கு போட்டியாக களமிறங்கியது. இதன் காரணமாக எந்தப் படம் வெற்றிப் பெறும் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஒரு பக்கம் வாரிசு தயாரிப்பாளர் விஜய்தான் நம்பர் 1 என கொளுத்திப்போட போட்டியில் அனல் பறந்தது. அந்த ரேஸில் கண்டெண்ட் ரீதியாக துணிவு படத்துக்கே பாஸிட்டிவ் விமர்சனங்கள் கிடைத்தன.
அஜித்தின் விடாமுயற்சி: துணிவு படத்தின் வெற்றிக்கு பிறகு மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி படத்தில் நடிக்கவிருக்கிறார் அஜித். துணிவு படம் தந்த வெற்றியை விடாமுயற்சியிலும் தொடர வேண்டும் என அவர் நினைப்பதால் கதையை தரமாக தயார் செய்திருக்கிறாராம் மகிழ் திருமேனி. படத்தின் ஷூட்டிங்கிற்காக தனது முதல் கட்ட வேர்ல்ட் டூரை முடித்திருக்கும் அஜித் சென்னையில் விரைவில் தொடங்கவிருக்கும் ஷூட்டிங்கில் பங்கேற்கவிருக்கிறார்.
காதல் மன்னன் அஜித்: அஜித்குமார் இப்போது கமர்ஷியல் ஆக்ஷன் ஹீரோவாக வலம் வந்து கொண்டிருக்கிறார். அவரது படங்கள் செய்யும் வசூல் அவரை இந்த நிலைக்கு மாற்றியிருக்கிறது. இதனால் முழு காதல் படத்திலோ அல்லது ஒரு ஃபீல் குட் படத்திலோ அஜித்தால் நடிக்க முடிவதில்லை. ஆனால் தனது கரியரின் ஆரம்பத்தில் காதல் மன்னன் என்றால் அது அஜித்குமார்தான். அவருக்கு பெண் ரசிகைகள் ஏராளமாக இருந்தனர். அவர்களை தக்க வைப்பதற்கேற்ப பல கதைகளில் நடித்தார்.
கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்: அப்படிப்பட்ட படங்களில் ஒன்று கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன். ஒளிப்பதிவாளர் ராஜீவ் மேனன் இயக்கத்தில் உருவான அந்தப் படத்தில் ஐஸ்வர்யா ராய், தபு, மம்மூட்டி, ஸ்ரீவித்யா, மணிவண்ணன் என பலர் நடித்திருப்பார்கள். அந்தப் படம் முழுக்க முழுக்க ஃபீல் குட்டாகவே இருக்கும். குறிப்பாக தான் ஏற்றிருந்த மனோகர் கதாபாத்திரத்தில் அவ்வளவு அழகாக நடித்திருப்பார்.
நடிப்பு மட்டுமின்றி அந்த படத்தில் அஜித் சாக்லேட் பாய் ரேஞ்சில் இருந்தார். அந்தப் படத்தில் இருக்கும் அஜித்தின் லுக் இன்றுவரை பலரது ஃபேவரைட். இந்தச் சூழலில் அப்படத்தின் ஷூட்டிங்கின்போது அஜித்தை பாலிவுட் நடிகை வெறித்தனமாக சைட் அடித்த சம்பவம் தெரியவந்திருக்கிறது.

சைட் அடித்த தபு: கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படத்தில் அஜித்துக்கு ஜோடியாக தபு நடித்திருப்பார். ஏவிஎம் ஸ்டூடியோவில் அஜித் - தபுவுக்கு இடையேயான பாடல் ஒன்று செட் போட்டு ஷூட் செய்யப்பட்டிருக்கிறது. அந்த சமயத்தில் தனது ஷாட்டை முடித்துவிட்ட தபு நாற்காலியில் அமர்ந்திருந்தாராம். அப்போது அஜித்துக்கான ஷாட் போய்க்கொண்டிருந்திருக்கிறது.
அந்த சமயத்தில் அஜித்தை தபு வைத்த கண் வாங்காமல் தொடர்ந்து பார்த்துக்கொண்டே இருந்தாராம். அதேபோல் இரண்டு ஹீரோயின்கள் நடித்த ஒரு படத்திலும் அவர்கள் அஜித்தை வெறித்தனமாக சைட் அடித்தனராம். அந்த அளவுக்கு அவர் மேல் அப்போது க்ரேஸ் இருந்ததாம். இந்தத் தகவலை பத்திரிகையாளர் செய்யாறு பாலு பகிர்ந்துகொண்டார்.


Click it and Unblock the Notifications











