ஏன் சமந்தாவ படுத்துறீங்க.. எவ்வளவு கஷ்டம் தெரியுமா?.. கொந்தளித்து எழுந்த யூட்யூப் பிரபலம்

சென்னை: நடிகை சமந்தாவும் நடிகர் நாக சைதன்யாவும் காதலித்து திருமணம் செய்து பிறகு பிரிந்தார்கள். இப்போது நாக சைதன்யா இரண்டாவது திருமணம் செய்யவிருக்கிறார். சமந்தா தனது நடிப்பில் தீவிர கவனம் செலுத்திவருகிறார். ஆனால் தெலங்கானா அமைச்சரோ சமந்தா குறித்து அவதூறாக பேசி பரபரப்பை கிளப்பினார். தனக்கு எழுந்த எதிர்ப்பை உணர்ந்த அவர் தனது வருத்தத்தை பதிவு செய்தார். இந்த சூழலில் யூட்யூபில் சினிமா தொடர்பான வீடியோக்களை வெளியிட்டும்; யூட்யூப் சேனல்களுக்கு பேட்டி கொடுத்து பிரபலமானவருமான பத்திரிகையாளர் செய்யாறு பாலு சமந்தா குறித்து பேசியிருக்கிறார்.

மாஸ்கோவின் காவிரி படத்தில் ஹீரோயினாக சினிமா பயணத்தை தொடங்கியவர் சமந்தா. அந்தப் படம் சரியாக போகாவிட்டாலும் சமந்தா கவனிக்கப்பட்டார். அதற்கு பிறகு அவர் நடித்த படங்கள் நல்ல வரவேற்பை பெற; அவரது கரியரும் உயர ஆரம்பித்தது. தமிழில் பிஸியான சமந்தா தெலுங்கில் நடிக்கும்போது நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். ஆனால் சில வருடங்களிலேயே இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டார்கள்.

samantha naga chaitanya nagarjuna

அவதூறு அமைச்சர்: பிரிவுக்கு பிறகு நாக சைதன்யா சோபிதாவை திருமணம் செய்யவிருக்கிறார். சமந்தா நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். நிலைமை இப்படி இருக்க தெலங்கானா வனத்துறை அமைச்சர், சமந்தா குறித்து அவதூறாக பேசினார். அதற்கு சமந்தா தரமான பதிலடி கொடுத்தார். அதுமட்டுமின்றி நாக சைதன்யா, நாகார்ஜுனா, அமலா என சமந்தாவின் முன்னாள் மாமனார் வீடே தனது கண்டனத்தை பதிவு செய்தது. மேலும் ஜூனியர் என்.டி.ஆரும் தனது கோபத்தை வெளிப்படுத்தியிருந்தார்.

வருத்தம் தெரிவித்த அமைச்சர்: நிலைமை விபரீதமாவதை உணர்ந்துகொண்ட அமைச்சர் தனது வருத்தத்தை பதிவு செய்தார். அமைச்சரின் அந்தப் பேச்சால் சமந்தா இப்போது மீண்டும் சினிமாவின் ஹெட்லைன்ஸாக மாறியிருக்கிறார். அந்தவகையில் சமந்தா குறித்து பேசிய பிரபல பத்திரிகையாளர் செய்யாறு பாலு பேசுகையில், "சமந்தாவை அமைச்சர் அவதூறாக பேசியிருக்கிறார். அந்தப் பொண்ண ஏன் யா போட்டு படுத்துறீங்க. சமந்தா சென்னை பல்லாவரத்தை சேர்ந்த பெண்.

பட்ட அவமானம்: டி.நகர் பள்ளியில்தான் படித்தார். சென்னையிலேயே கல்லூரி படித்து முடித்தார். அதற்கு பிறகு மாடலிங்கில் அவரது கவனம் சென்றது. மேலும் ரிசப்சனிஸ்ட் வேலையும் பார்த்திருக்கிறார். மாடலிங்கில் இருக்கும்போதே அவருக்கு நடிக்கும் ஆசை வந்தது. நடிப்பதற்கும் முயற்சி செய்தார். அப்போதுதான் பெரிய கம்பெனி ஒன்றிடமிருந்து சமந்தாவுக்கு அழைப்பு வந்தது. அவரும் இந்த விஷயத்தை தனது தோழர்கள், தோழிகளிடம் சொல்லிவிட்டார். எலோருக்குமே அவ்வளவு சந்தோஷம்.

ஏமாற்றம்: முதல் படமே இவ்வளவு பெரிய கம்பெனியிலிருந்தா என்று வாழ்த்து சொன்னார்கள். சமந்தாவும் அந்த கம்பெனிக்கு சென்று ஒன்றரை நாள் நடித்தார். பிறகு ஷூட்டிங்கிற்கு அழைப்பு வரவில்லை. புரொடக்‌ஷன் மேனேஜருக்கு ஃபோன் செய்தாலும் எடுக்கவில்லை. பொறுத்து பார்த்த சமந்தா ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு நேரில் சென்றார். அப்போது அவரிடம், இந்தக் கதைக்கு உங்கள் ஸ்கின் டோன் செட் ஆகவில்லை என்று இயக்குநர் சொன்னதாக சொன்னார்கள். அது அவருக்கு அவமானமாகிவிட்டது. பிறகும் விடாத சமந்தா தொடர்ந்து முயற்சி செய்தார். அதன் பின் மாஸ்கோவின் காவிரி படத்தில் அறிமுகமானார். படம் சரியாக போகாவிட்டாலும் சமந்தாவுக்கு நல்ல பெயர் கிடைத்தது. இப்படி கஷ்டங்களை சந்தித்து வந்தவர் சமந்தா" என்று குறிப்பிட்டிருக்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X