சில்க் ஸ்மிதா வரல .. நீங்களும் வர வேண்டாம்.. மணிரத்னம் மனைவியை டென்ஷனாக்கிய பிரபல ஹீரோ
சென்னை: சில்க் ஸ்மிதா ஏற்படுத்திய தாக்கம் கோலிவுட்டில் தவிர்க்க முடியாது. ரஜினிகாந்த், கமல் ஹாசன் உள்ளிட்ட பல நடிகர்களுடன் நடித்திருக்கிறார். உடலில் மட்டுமின்றி தனது கண்கள், குரல் உள்ளிட்டவைகளாலும் கவர்ச்சியை அள்ளி வீசியவர்.அதனால்தான் அவருக்கு இன்றுவரை பலரும் ரசிகர்களாக இருக்கிறார்கள். அவர் வாழ்க்கை தொடர்பான திரைப்படங்களும், அவரது புகைப்படங்கள் திரைப்படங்களிலும் பயன்படுத்தப்பட்டுவருகின்றன. இந்தச் சூழலில் அவர் குறித்து புதிய விஷயம் ஒன்று தெரியவந்திருக்கிறது.
ஆந்திராவில் பிறந்த விஜயலட்சுமி இயக்குநரும், நடிகருமான வினு சக்கரவர்த்தி கண்களில் பட்டு சினிமாவுக்கு வந்தவர். சினிமாவுக்கு வந்ததிலிருந்து அவர் சில்க் ஸ்மிதாவாக மாறினார். தொடர்ந்து அவருக்கு கிடைத்த வாய்ப்புகளை பயன்படுத்தி இந்திய சினிமாவை ரூல் செய்தது குறிப்பிடத்தக்கது. சில்க் கால்ஷீட் கிடைத்தால் போதும் படம் வெற்றிபெற்றுவிடும் என்பதே அப்போதைய விநியோகஸ்தர்களிடம் பெரும்பான்மையான எண்ணமாக இருந்தது.
மற்ற மொழி படங்களிலும்: சில்க் ஸ்மிதா தமிழில் அறிமுகமானாலும் தமிழ் மட்டுமின்றி இந்தியாவில் இருக்கும் அனைத்து மொழி திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார். ஒருமுறை மலையாளத்தில் மோகன் லாலுடன் ஒரு பாடலுக்கு ஆடுவதற்கு கேரளா செல்ல நேரம் இல்லாததால் மோகன் லால் சென்னை வந்து சில்க்குடன் நடனம் ஆடிவிட்டது சென்றதெல்லாம் சில்க்கால் மட்டுமே படைக்க முடிந்த வரலாறு. இயக்குநர்களில் பாலுமகேந்திரா எப்போதும் தனித்துவமானவர்.

தவம் இருந்த நடிகர்கள்: சில்க்குடன் நடித்துவிட வேண்டும் என்று பல முன்னணி நடிகர்களே தவம் இருந்ததாக சொல்லப்படுவதுண்டு. பநிற்பதற்குக்கூட நேரம் இல்லாமல் பம்பரமாய் சுழன்றவர் அவர். ஒருகட்டத்தில் தனிப்பட்ட பிரச்னை காரணமாக தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். அது இன்றளவும் பலருக்கு சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அவரது தற்கொலைக்கு காரணமாக பல கதைகள் சொல்லப்படுகின்றன. அவற்றில் முக்கியமான ஒன்று என்றால் அவர் காதலித்தார் என்பதுதான்.
என்ன காதல்?: அதாவது அவர் மருத்துவர் ஒருவருடன் உறவில் இருந்ததாகவும்; ஆனால் அது அவருக்கு கசந்துவிட்டது. அதனைத் தொடர்ந்து அந்த மருத்துவரின் மகனுடன் காதலில் விழுந்து அவரையே திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்ததாகவும்; அந்த நபரோ சில்க்கை நன்றாக பயன்படுத்திக்கொண்டு எஸ்கேப் ஆகிவிட்டார்; எனவே மன அழுத்தத்துக்கு ஆளான ஸ்மிதா தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார் என்றும் பேசப்படுவதுண்டு.
சிரஞ்சீவி செய்த செயல்: இந்நிலையில் சில்க் ஸ்மிதா பற்றி புதிய விஷயம் தெரியவந்திருக்கிறது. அதாவது சிரஞ்சீவி சேலஞ்ச் என்ற திரைப்படத்தில் நடித்தார். அவருடன் லீட் ரோலில் விஜயசாந்தி மற்றும் நடிகையும், இயக்குநர் மணிரத்னத்தின் மனைவியுமான சுஹாசினி நடித்தார்கள். அந்தப் படத்தில் சில்க் ஸ்மிதாவுக்கு முக்கியமான ரோல். படத்தின் ஷூடிங்கின்போது சில்க் ஸ்மிதா பயங்கர பிஸியாக இருந்தாராம். அப்படி ஒரு நேரத்தில் சிரஞ்சீவி - சில்க் சம்பந்தப்பட்ட காட்சிகளை படமாக்க இயக்குநர் திட்டமிட்டிருக்கிறார்.
டென்ஷனான சுஹாசினி: ஆனால் ஸ்மிதாவால் அன்றைய தினம் வர முடியவில்லையாம். மேலும் ஷூட்டிங்கிற்கு வர சில நாட்கள் ஆகும் என்றும் தெளிவுப்படுத்தினார். அதேசமயம் சுஹாசினியுடனான ஷூட்டிங்கையும் சிரஞ்சீவிக்கு வைத்திருந்தார்களா. சூழல் இப்படி இருக்க சில்க் ஷூட்டிங் வராத விஷயம் சிரஞ்சீவியிடம் சொல்லப்பட்டதாம். பிறகு என்ன நடந்ததோ தெரியவில்லை அன்று எடுக்கப்படவிருந்த சுஹாசினி - சிரஞ்சீவி காட்சிகளின் ஷூட்டிங் கேன்சல் செய்யப்பட்டதாம். கவர்ச்சி நடிகைக்கு தன்னைவிடவும் முக்கியத்துவம் கொடுக்கிறார்களே என்று டென்ஷனான சுஹாசினி சில நாட்கள் ஷூட்டிங்கிற்கு வராமல் இருந்தாராம்.


Click it and Unblock the Notifications











