Silk Smitha - ஏறி மிதித்த சில்க் ஸ்மிதா.. அதுவும் எங்கு தெரியுமா?.. ஷூட்டிங் ஸ்பாட்டில் அலறிய பிரபு

சென்னை: Silk Smitha (சில்க் ஸ்மிதா) சூரக்கோட்டை சிங்கக்குட்டி படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் சில்க் ஸ்மிதா மிதித்த பிறகு நடிகர் பிரபு அலறிவிட்டாராம்.

விஜயலட்சுமி என்ற இயற்பெயரை கொண்டவர் சில்க் ஸ்மிதா. ஆந்திராவை பூர்வீகமாகக் கொண்ட அவர் குடும்ப வறுமை காரணமாக தமிழ்நாட்டுக்கு வந்தவர். அதன் பிறகு அவர் இந்திய சினிமாவை ரூல் செய்தது குறிப்பிடத்தக்கது. சில்க் கால்ஷீட் கிடைத்தால் போதும் படம் வெற்றிபெற்றுவிடும் என்பதே அப்போதைய நிலையாக இருந்தது.

ரசிகர்களை கட்டிப்போட்ட சில்க்

ரசிகர்களை கட்டிப்போட்ட சில்க்

தமிழ் சினிமாவில் பல கவர்ச்சி நடிகைகள் வந்திருக்கிறார்கள்; வந்து கொண்டிருக்கிறார். ஆனால் அந்தக் கவர்ச்சியை அழகாகவும், அளவாகவும் உடலில் மட்டுமில்லாமல் கண்களிலும் காட்டுவது சில்க் ஸ்மிதாவால் மட்டும்தான் முடிந்தது. தமிழில் அவர் வினுசக்கரவர்த்தி இயக்கிய வண்டிச்சக்கரம் படம் மூலம் அறிமுகமானார். முதல் படத்தில் அவர் ஏற்றிருந்த சில்க் என்ற கதாபாத்திரத்திற்கு ரசிகர்கள் கட்டுண்டதால் ஸ்மிதா என்ற பெயருடன் சில்க் என்ற பெயரும் ஒட்டிக்கொண்டது. அப்போதிருந்து அவர் சில்க் ஸ்மிதாவாக அழைக்கப்பட்டார்.

தமிழ் மட்டுமல்ல பிறமொழிகளிலும் சூப்பர் ஸ்டார்

தமிழ் மட்டுமல்ல பிறமொழிகளிலும் சூப்பர் ஸ்டார்

சில்க் ஸ்மிதா தமிழில் அறிமுகமானாலும் தமிழ் மட்டுமின்றி இந்தியாவில் இருக்கும் அனைத்து மொழி திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார். படிப்பறிவு இல்லாவிட்டாலும் எதையும் உடனே பிடித்துக்கொள்ளும் திறமை சில்க் ஸ்மிதாவுக்கு இயற்கையிலேயே இருந்திருக்கிறது. இதன் காரணமாக அவரால் பல மொழிகளிலும் எளிதாக நடிக்க முடிந்தது. ஒருமுறை மலையாளத்தில் மோகன் லாலுடன் ஒரு பாடலுக்கு ஆடுவதற்கு கேரளா செல்ல நேரம் இல்லாததால் மோகன் லால் சென்னை வந்து சில்க்குடன் நடனம் ஆடிவிட்டது சென்றதெல்லாம் சில்க்கால் மட்டுமே படைக்க முடிந்த வரலாறு.

திராவிட பேரழகி சில்க் ஸ்மிதா

திராவிட பேரழகி சில்க் ஸ்மிதா

இயக்குநர்களில் பாலுமகேந்திரா எப்போதும் தனித்துவமானவர். அவரது இயக்கத்திலும், கேமராவிலும் நடித்தால் சாதாரண அழகிக்கூட பேரழகியாக தெரிவர். அப்படிப்பட்ட சூழலில் இயற்கையாகவே பேரழகியாக இருக்கும் சில்க் பாலுமகேந்திரா இயக்கத்தில் மூன்றாம் பிறை படத்தில் பூர்ணம் விஸ்வநாத்துக்கு ஜோடியாக நடித்தார். அதிலிருந்தே தெரிந்துகொள்ளலாம் சில்க் எந்த டெம்ப்ளேட்டுக்குள்ளும் அடங்காதவர் என்று. அந்தப் படத்தில் தன்னுடைய உடல் தேவையை ஒரு காட்சியில் பார்வையிலேயே பின்னி எடுத்திருப்பார் சில்க். அதனால்தான் யாரையும் அவ்வளவு எளிதாக பாராட்டிடாத பாலுமகேந்திரா சில்க்கை திராவிட பேரழகி என்று வர்ணித்தார்.

பிரபுவுடன் நடித்த சில்க்

பிரபுவுடன் நடித்த சில்க்

சிவாஜி கணேசனின் மகன் பிரபு நடித்த படம் சூரக்கோட்டை சிங்கக்குட்டி. இந்தப் படத்தில் பிரபுவுடன் சில்க் ஸ்மிதா நடித்திருப்பார். அந்தப் படத்துக்கான ஒரு பாடல் ஷூட்டிங்கில் நடன அமைப்பாளர் இரண்டு பேருக்கும் நடனம் அமைத்தாராம். அந்த நடனத்தில் பிரபுவின் தொடையில் சில்க் ஏறி நின்று தனது இன்னொரு காலின் முட்டியை பிரபுவின் தோள்பட்டையில் வைப்பதுதான் நடன அமைப்பாம்.

ஏறி மிதித்த சில்க்

ஏறி மிதித்த சில்க்

நடனம் எல்லாம் சொல்லக்கொடுத்துவிட்டு டேக் போயிருக்கிறார்கள். கேமரா ரோலில் இருந்தபோது பிரபு அலறிவிட்டாராம். உடனே நடன அமைப்பாளர் புலியூர் சரோஜா என்ன ஆச்சு என்று கேட்க, 'சில்க் என்னை வேறு எங்கோ மிதித்துவிட்டார் அக்கா' என்று கூறியிருக்கிறார். அதற்கு சில்க்கிடம் புலியூர் சரோஜா மாஸ்டர், எங்கடி மிதிச்ச என கேட்க, ‘இரண்டு கால்களுக்கும் நடுவில் மிதித்துவிட்டேன் அக்கா' என கூறியிருக்கிறார்.

பிரபுவிடம் மன்னிப்பு கேட்ட சில்க்

பிரபுவிடம் மன்னிப்பு கேட்ட சில்க்

உடனே கோபப்பட்ட புலியூர் சரோஜா உனது காலை நான் எங்கு வைக்க சொன்னேன் நீ எங்க வெச்சிருக்க இது தப்பு இல்லையா என கடிந்திருக்கிறார். உடனே பிரபுவிடம் சென்ற சில்க் தெலுங்கில், அண்ணா என்னை மன்னித்துவிடுங்கள் என கேட்டாராம். அதன் பிறகு மீண்டும் ரீ டேக் சென்று அந்த மூவ்மெண்ட்டை படமாக்கினார்களாம். இதனை நடன அமைப்பாளர் புலியூர் சரோஜா பேட்டி ஒன்றில் தெரிவித்தார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X