ஆளு சூப்பரா இருக்காரு.. மலையாளத்தில் பேசி அஜித்தை சைட் அடித்த காஸ்ட்யூம் டிசைனர்
சென்னை: அஜித் இப்போது விடாமுயற்சி படத்தில் நடித்துவருகிறார் அடுத்ததாக அவர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி படத்தில் நடிக்க கமிட்டாகியிருக்கிறார். இந்த இரண்டு படங்களுமே கண்டிப்பாக சூப்பர் டூப்பர் ஹிட்டடிக்கும் என்று அவரது ரசிகர்கள் உச்சக்கட்ட நம்பிக்கையோடு காத்திருக்கிறார்கள். இந்நிலையில் அஜித் பற்றி ஆடை வடிவமைப்பாளர் தக்ஷா பேசியிருக்கும் விஷயம் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளது.
கோலிவுட்டின் டாப் ஹீரோக்களில் ஒருவரான அஜித் கையில் இப்போது விடாமுயற்சி, குட் பேட் அக்லி ஆகிய இரண்டு படங்கள் இருக்கின்றன. விடாமுயற்சி படத்திலிருந்து எந்த அப்டேட்டும் வெளியாகாமல் இருக்கிறது. அஜர்பைஜானில் முதல் ஷெட்யூல் ஷூட்டிங் முடித்த கையோடு சென்னை திரும்பிய அஜித் முழு உடல் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு சென்றபோது அங்கு அவருக்கு சிறிய அளவிலான அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. காதிலிருந்து மூளைக்கு செல்லும் நரம்பில் சிறு கட்டி இருந்ததால் அந்த ஆபரேஷன் நடந்தது.

பைக் டூர்: அறுவை சிகிச்சைக்கு பிறகு உடல்நலம் தேறிய அஜித்குமார் தனது மகனின் பள்ளிக்கூடத்தில் நடந்த விழா, தனது மகனுடன் ஃபுட்பால் விளையாடியது என இருந்தார். இதனையடுத்து வழக்கமாக அவர் செய்யும் பைக் டூரையும் மீண்டும் தொடங்கினார். அதுதொடர்பான வீடியோக்களும், புகைப்படங்களும் வெளியாகி சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகின.
மீண்டும் ஷூட்டிங்: சூழல் இப்படி இருக்க விடாமுயற்சி படத்தின் ஷூட்டிங் மீண்டும் எப்போது தொடங்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தார்கள். அவர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும்படி அஜர்பைஜான் நாட்டில் வைத்து மீண்டும் ஷூட்டிங் தொடங்கியது. அங்கு பெரும்பாலான காட்சிகள் மும்முரமாக படமாக்கப்பட்டன. ஒருவழியாக அஜர்பைஜான் ஷெட்யூலும் முடிந்துவிட்டது. இதுதொடர்பான புகைப்படங்களும் வெளியாகி ட்ரெண்டாகின.
செம லுக்கில் அஜித்: அதேபோல் விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் கடுமையான ட்ரோலை சந்தித்தது. அதற்கெல்லாம் பதிலடி தரும் விதமாக அமைந்திருந்தது படத்திலிருந்து வெளியான அடுத்த போஸ்டர். அதில் அஜித் படு ஸ்மார்ட்டாக தலைமுடிக்கு டை அடித்துக்கொண்டு திரிஷாவின் பின்னால் நின்றுகொண்டிருந்தார். அதனைப் பார்த்த ரசிகர்கள் அட இந்த லுக்கிற்காகவே இன்னும் எத்தனை காலம் வேண்டுமானாலும் விடாமுயற்சிக்கு காத்திருக்கலாம் என்று கமெண்ட்ஸ் செய்தனர்.
தக்ஷா பேட்டி: இதற்கிடையே குட் பேட் அக்லி படத்திலும் நடித்துவருகிறார் அஜித். இந்நிலையில் ஆடை வடிவமைப்பாளர் தக்ஷா அஜித் குறித்து ஒரு பேட்டியில் பேசியிருக்கிறார். அவர் அளித்த பேட்டியில், "அமராவதி பட சமயத்தில் அஜித்துக்கு நான் தான் ஆடை வடிவமைப்பு செய்தேன். அப்போது அவருக்கு மலையாளம் தெரியும் என்று எனக்கு தெரியாது. நான் எனது அருகில் இருந்தவரிடம் மலையாளத்தில், 'ஆளு சூப்பரா இருககரு. இவரை நம் மாடலுக்கு பயன்படுத்திக்கொள்ளலாம்' என்று சொன்னேன். அடுத்த நாள்தான் அஜித்துக்கு மலையாளம் தெரியும் என்கிற விஷயத்தை அறிந்துகொண்டேன். எனவே அடுத்த நாள் நான் ஷூட்டிங்கிற்கு செல்லவில்லை. அஜித்தி பிஆர்ஓ சுரேஷ் சந்திரா இன்றுவரை அதை சொல்லி என்னை கிண்டல் செய்வார்" என்றார்.


Click it and Unblock the Notifications











