இறைவன் பார்த்துக்கொள்வார்.. சிவகார்த்திகேயனை அட்டாக் செய்தாரா டி.இமான்.. மீண்டும் பஞ்சாயத்து?
சென்னை: நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் கடைசியாக அமரன் திரைப்படம் வெளியானது. அந்தத் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்று உலகம் முழுவதும் 300 கோடி ரூபாய்வரை வசூல் செய்தது. இதன் காரணமாக அவரது மார்க்கெட்டும் சரசரவென்று உயர்ந்திருக்கிறது. இப்போது அவர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மதராஸி படத்தில் நடித்து முடித்திருக்கிறார். அடுத்ததாக சுதா கொங்கரா இயக்கத்தில் பராசக்தி படத்தில் நடித்துவருகிறார். இப்படிப்பட்ட சூழலில் இமான் அளித்திருக்கும் பேட்டி ஒன்று ட்ரெண்டாகியிருக்கிறது.
சிவகார்த்திகேயன் டாப் 10 ஹீரோக்களில் ஒருவராக இருக்கிறார். தேர்ந்தெடுக்கும் கதைகள் கமர்ஷியலாக இருப்பதால் சிறுவர், சிறுமிகள் மத்தியில் அவருக்கு நல்ல கிரேஸ் உண்டு. அதேபோல் குடும்பத்தினரும் சிவாவின் படங்களை விரும்பி பார்க்கின்றனர். விஜய்யும் இப்போது சினிமாவிலிருந்து ஒதுங்கவிருப்பதால் கண்டிப்பாக அவர் இடத்தை சிவகார்த்திகேயன் ரீப்ளேஸ் செய்வார் என்று எஸ்கே ரசிகர்கள் கூற ஆரம்பித்திருக்கின்றனர். அவரது நடிப்பில் கடைசியாக அமரன் திரைப்படம் வெளியாகி சூப்பர் ஹிட்டடித்தது.
அடுத்த படங்கள்: அமரன் படத்தின் வெற்றி அவரை உற்சாகப்படுத்தியுள்ளது. மேலும் அதற்கு முன்னதாக வெளியானஅயலான், மாவீரன் திரைப்படங்களும் சூப்பர் ஹிட்டானது குறிப்பிடத்தக்கது. தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மதராஸி படத்தில் நடித்து முடித்திருக்கும் அவர்; சுதா கொங்கரா இயக்கத்தில் பராசக்தி படத்தில் நடித்துவருகிறார். இந்த இரண்டு படங்களின் மீது அவரது ரசிகர்களுக்கு உச்சக்கட்டமான நம்பிக்கை இருக்கிறது. அமரன் போலவே இவ்விரண்டு படங்களும் மெகா ப்ளாக் பஸ்டர் ஆகும் என்று கூற ஆரம்பித்திருக்கிறார்கள்.

சம்பளமும் உயர்வு: அமரனின் வெற்றி சிவாவின் மார்க்கெட்டை எங்கேயோ கொண்டு போயிருக்கிறது. தனது சம்பளத்தையும் அவர் 50 கோடி ரூபாய்வரை உயர்த்திவிட்டதாக தெரிகிறது. மேலும் மிகப்பெரிய கமர்ஷியல் ஹீரோவாகவும் மாறிவிட்டார் அவர். பட தயாரிப்பிலும் பிஸியாக இருக்கும் அவர் சூரியை வைத்து கொட்டுக்காளி படத்தை தயாரித்திருந்தது குறிப்பிடத்தக்கது. அந்தப் படம் வணிக ரீதியாக வெற்றி பெறாவிட்டாலும் விமர்சன ரீதியாக மிகப்பெரிய வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.
க்ளீன் பாய் இமேஜ்: இதற்கிடையே கோலிவுட்டில் சிவகார்த்திகேயனுக்கு க்ளீன் பாய் என்ற இமேஜ் இருந்தது. ஆனால் இசையமைப்பாளர் டி.இமான் சில வருடங்களுக்கு முன்பு ஒரு பேட்டி அளித்தார். அதில், 'இனி சிவகார்த்திகேயனுடன் இந்த ஜென்மத்தில் இணைந்து பணியாற்றமாட்டேன். அவர் எனக்கு மிகப்பெரிய துரோகத்தை செய்துவிட்டார். எனது குழந்தைகளின் எதிர்கால நலன் கருதி அதனை வெளியில் சொல்லாமல் இருக்கிறேன். அந்த துரோகம் குறித்து சிவகார்த்திகேயனிடமும் நான் நேராகவே கேட்டுவிட்டேன் என்று சொல்லி பரபரப்பை ஏற்படுத்தினார்.
என்ன பிரச்னை: இதனையடுத்து இமானுக்கு சிவகார்த்திகேயன் என்ன துரோகத்தை செய்திருப்பார் என்று பலரும் கேள்விகள் கேட்க ஆரம்பித்தனர். ஒருதரப்பினரோ இமானும் அவரது முதல் மனைவியான மோனிகாவும் பிரிவதற்கு சிவாதான் காரணமாக இருப்பார். அதைத்தான் இமான் சுற்றி வளைத்து சொல்கிறார் என்று ஓபனாகவே பேச ஆரம்பித்தனர். ஆனால் அதனை மோனிகா திட்டவட்டமாக மறுத்தார்.
ட்ரெண்டாகும் பேட்டி: இந்தப் பிரச்னை ஒருவழியாக ஓய்ந்திருந்த சூழலில் சமூக வலைதளங்களில் திடீரென ட்ரெண்டாகும் வீடியோவால் மீண்டும் தலை தூக்கியிருக்கிறது.அதாவது இமான் அளித்த பழைய பேட்டி ஒன்றில் அவரிடம், உங்களை பற்றி சில விஷயங்கள் சமூக வலைதளங்களில் வந்துகொண்டிருக்கின்றன. அவற்றுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டாமா என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், 'எது சரி எது தவறு என்று இறைவன் பார்த்துக்கொள்வார். அவருக்கு அனைத்தும் தெரியும் என்று நம்புபவன் நான். எனவே அவரே முற்றுப்புள்ளி வைப்பார்' என்றார். இதனைப் பார்த்த ரசிகர்களில் ஒரு தரப்பினர் சிவாவைத்தான் இமான் மறைமுகமாக தாக்கியிருக்கிறாரோ என்று கமெண்ட்ஸ் செய்துவருகிறார்கள்.


Click it and Unblock the Notifications











