விடிய விடிய ஒரே காருக்குள் திரிஷா, நயன்தாரா.. என்ன செஞ்சாங்க தெரியுமா?.. இப்படியும் செஞ்சிருக்காங்களா?

சென்னை: திரிஷாவும், நயன்தாராவும் தமிழ் சினிமாவில் கடந்த 20 வருடங்களுக்கும் மேலாக முன்னணி ஹீரோயின்களாக வலம் வந்துகொண்டிருக்கிறார்கள். இவர்களில் நயன் இயக்குநர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்துகொண்டார். ஆனால் திரிஷா திருமணம் செய்துகொள்ளாமல் இருக்கிறார். இரண்டு பேருமே இப்போது பிஸியான நடிகைகளாக வலம் வந்துகொண்டிருக்கிறார்கள். இந்தச் சூழலில் அவர்கள் இரண்டு பேரும் செய்த சம்பவம் குறித்து தெரியவந்திருக்கிறது.

ஜோடி படத்தில் சின்ன வேடத்தில் அறிமுகமானவர் திரிஷா. அதற்கு பிறகு ஹீரோயினாக அறிமுகமான அவர் விஜய், அஜித், சூர்யா, விக்ரம், சிம்பு, தனுஷ் , ரவி மோகன்,விஷால், ஆர்யா, ரஜினி, கமல் என பலருடன் ஜோடி போட்டு நடித்தார். அறிமுகமான சில காலத்திலேயே அவர் முன்னணி ஹீரோயின் என்ற இடத்தை அடைந்துவிட்டார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, ஹிந்தி மொழிகளிலும் அவர் தடம் பதித்தவர். அவரது நடிப்பில் கடைசியாக விடாமுயற்சி திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களையே பெற்றன.

throwback stories trisha nayanthara

20 வருடங்களாக: திரிஷா அறிமுகமான மௌனம் பேசியதே படத்திலிருந்து கணக்கு வைத்துக்கொண்டால் அவர் திரைத்துறைக்கு வந்து 20 வருடங்களுக்கும் மேல் ஆகிவிட்டது. அவருக்கு இடையில் சின்ன சறுக்கல் ஏற்பட்டாலும் 96 படத்திலிருந்து தரமான கம்பேக் கொடுத்தார். தொடர்ந்து பொன்னியின் செல்வன், லியோ, விடாமுயற்சி படங்களில் நடித்த அவர்; அடுத்ததாக குட் பேட் அக்லி, தக் லைஃப், சூர்யா 45 உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார். தொடர்ந்து பிஸியாக இருக்கும் அவர் இன்னமும் திருமணம் செய்துகொள்ளவில்லை. வருண் என்பவருடன் நிச்சயதார்த்தம் மட்டும் நடந்தது. ராணாவுடன் இருந்த காதலும் பாதியில் முடிந்தது.

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா: திரிஷாவை போலவே நயனும் கோலிவுட்டுக்கு வந்து 20 வருடங்களுக்கும் மேல் ஆகிவிட்டது. ஐயா படத்தைத் தொடர்ந்து ரஜினிகாந்த், விஜய், அஜித், சிம்பு, தனுஷ், சூர்யா, விக்ரம் என பலருடன் நடித்த அவர் முதலில் சிம்புவையும், பிறகு பிரபுதேவாவையும் காதலித்தார். அந்தக் காதல்கள் பாதியில் முடிந்தன. அதனைத் தொடர்ந்து இயக்குநர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்துகொண்டு; வாடகை தாய் மூலம் இரண்டு ஆண் குழந்தைகளை பெற்றுக்கொண்டார்.

திரிஷா Vs நயன்தாரா: நயனின் நடிப்பில் கடைசியாக ஜவான், அன்னபூரணி படங்கள் வந்தன. இவற்றில் ஜவான் மட்டும் ஹிட்டடித்தது. அடுத்ததாக டெஸ்ட், மண்ணாங்கட்டி, ராக்காயி, டாக்சிக் உள்ளிட்ட படங்கள் வரவிருக்கின்றன. இதற்கிடையே ஹீரோயின்களில் திரிஷாவுக்கும், நயன்தாராவுக்கும்தான் போட்டி நிகழும். அதனை அவர்களே சில பேட்டிகளில் உறுதியும் செய்திருக்கின்றனர். முக்கியமாக பழைய பேட்டி ஒன்றில் திரிஷாவும், நானும் நண்பர்கள் எல்லாம் இல்லை என்று நயனும்; நயன்தாராவுக்கும் எனக்கும் பிரச்னை இருந்தது உண்மைதான் என்று திரிஷாவும் கூறியிருப்பது நினைவுகூரத்தக்கது. இந்தச் சூழலில் அவர்கள் குறித்து சம்பவம் ஒன்று தெரியவந்திருக்கிறது.

என்ன நடந்தது?: அதாவது ஒருமுறை திரிஷாவும், நயன்தாராவும் ஒரே காரில் இருந்தார்களாம். அவர்களுடன் நடன அமைப்பாளர் பிருந்தா மாஸ்டரும் இருந்தாராம். விடிய விடிய மூன்று பேரும் காருக்குள் இருந்தபடியே பேசிக்கொண்டும், சில இடங்களுக்கு சென்றும் இருந்திருக்கின்றனர். ஒருகட்டத்தில் மணி அதிகாலை 5 ஆனதை பார்த்து வீட்டில் விட்டுவிடுங்கள் என்று பிருந்தா கூறினாராம். உடனே திரிஷாவும், நயனும் காரை எடுத்துக்கொண்டு சரி வாருங்கள் போவோம் என்று சொல்லிவிட்டு; வேறு பாதையில் சென்றார்களாம்.

உடனே பயந்துபோன பிருந்தா என்ன கார் வேற ரூட்டில் போகுது என்று கேட்க; இவர்களோ, 'எங்களுக்கு ஷூட்டிங் ஸ்பாட்டில் எவ்வளவு கஷ்டமான நடன ஸ்டெப்புகளை கொடுப்பீர்கள். இனி அப்படி கொடுக்கமாட்டேன் என்று சொல்லுங்கள் வீட்டுக்கு விடுகிறோம்' என்று கூறினார்களாம். பிருந்தாவும் சரி என்று சொன்ன பிறகு விட்டில் விட்டார்களாம். ஆனால் மறுபடியும் இவர்களுடன் பிருந்தா பணியாற்றும்போது மீண்டும் கஷ்டமான ஸ்டெப்புகளையே கொடுத்தாராம். இதனை பிருந்தா ஜாலியாக ஒரு முறை பேட்டியில் பகிர்ந்துகொண்டார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X