Rajinikanth - அய்யோ இந்த வாழ்க்கையே பிடிக்கல.. வீட்டை அடித்து நொறுக்கிய ரஜினி.. உறைந்து போன மனைவி
சென்னை: Rajinikanth (ரஜினிகாந்த்) வாழ்க்கை மீது விரக்தி கொண்ட ரஜினிகாந்த் தனது வீட்டில் உள்ள பொருட்களை அடைத்து உடைத்த சம்பவம் தெரியவந்திருக்கிறது.
நடிப்பின் மீது இருக்கும் ஆர்வத்தால் நடத்துனர் பணியை உதறிவிட்டு சென்னையில் இருக்கும் சினிமா கல்லூரியில் இணைந்து நடிப்பு பயின்றார். அந்த சமயத்தில் பாலசந்தரின் கண்களில் பட; ரஜினியின் வேகமும், நடையும், கண்களும் பாலசந்தருக்கு பிடித்துப்போக அபூர்வ ராகங்கள் படத்தின் மூலம் அவரை அறிமுகப்படுத்தினார். அந்தப் படத்தில் சின்ன கேரக்டரில் நடித்த அவர் அடுத்ததாக மூன்று முடிச்சு படத்தில் நடித்ததன் மூலம் கவனம் ஈர்த்து தொடர்ந்து வில்லனாகவும், மற்ற கதாபாத்திரங்களிலும் நடித்தார்.

பைரவி: ரஜினிகாந்த் முதன்முதலில் பைரவி படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார். அந்தப் படத்திலிருந்து தொடர்ந்து ஹீரோவாகவே நடித்து வந்த அவர் தனக்கென தனி ஸ்டைல், பாடி லாங்குவேஜ், வசன உச்சரிப்பு, நடை என அனைத்தையும் உருவாக்கிக்கொண்டார். அதுவரை ஸ்லோமோஷனில் இருந்துகொண்ட தமிழ் சினிமா ஹீரோக்களுக்கு மத்தியில் ரஜினியின் ஃபாஸ்ட் பார்வேர்ட் ரசிகர்களுக்கு உடனடியாக பிடித்துப்போனது.
சூப்பர் ஸ்டார்: ரஜினி போகப்போக அனைவரையுமே கவர்ந்துவிட்டார். அதனால் அவருக்கு சூப்பர் ஸ்டார் என்ற பட்டமும் கிடைத்தது. தொடர்ந்து பல படங்களை ஹிட் படங்களாக கொடுத்த ரஜினிகாந்த் கடைசியாக ஜெயிலர் படத்தில் நடித்தார். அந்தப் படமும் மெகா ஹிட்டானது. இதுவரை 170 படங்களில் நடித்திருக்கிறார். இன்றுவரை அவர்தான் ஒரே சூப்பர் ஸ்டார் என்று அவரது ரசிகர்கள் கூறுகின்றனர்.
அடாவடி ரஜினிகாந்த்: தன்னுடைய ஆரம்பகட்டத்தில் தன் அடாவடி நடவடிக்கைகளால் பல சர்ச்சைகள சந்தித்திருக்கிறார். ஏர்போர்ட்டில் முழு மது போதையில் அதிகாரியை தாக்கி கைதானது; தனது மனதில் பட்டதை யாருக்கும் அஞ்சாமல் பட்டென பேசுவது; தனது திருமணத்துக்கு வந்தால் செருப்பால் அடிப்பேன் என பத்திரிகையாளர்களிடம் கூறியது என இப்போது அடக்கி வாசிக்கும் ரஜினி ஆரம்பத்தில் அடாவடி செய்தவர்.
எதிர்பார்க்காதது: ரஜினியை பொறுத்தவரை தனது வாழ்க்கையில் பெரிதாக எந்த லட்சியத்தையும் வைத்திருக்காதவர். படங்களில் நடிக்க வேண்டும் மாதம் 30,000 ரூபாய் சம்பாதிக்க வேண்டும். அதில் கொஞ்சம் சேமிப்பு மீதம் செலவு என்ற கொள்கையில் இருந்தவர். ஆனால் ரஜினி இப்போது அடைந்திருக்கும் உயரம் அவரே எதிர்பார்க்காததுதான். அதை அவரே சில முறை வெளிப்படுத்தியிருக்கிறார். இந்தச் சூழலில் தனது வீட்டை அவர் அடித்து நொறுக்கிய சம்பவம் தெரிய வந்திருக்கிறது.
என்ன நடந்தது?: அதாவது நினைத்த இடத்துக்கு நினைத்த நேரத்தில் செல்ல வேண்டும் என்ற எண்ணம் உடையவர் ரஜினி. ஆனால் அவருக்கு கிடைத்த புகழ் அவரது எண்ணத்தை புதைத்திருக்கிறது. எங்கு சென்றாலும் கூட்டம்; ஒரு நாளுக்கு பல படங்கள் நடிப்பது என படு பிஸியாக இருந்தார். அந்த சமயத்தில் என்ன செய்வதென்று தெரியாமல் விரக்தியின் உச்சத்துக்கே சென்றிருக்கிறார் ரஜினி.
ஒருகட்டத்தில் அவரது விரக்தி கோபமாக மாறியிருக்கிறது. இதனால் ஒரு நாள் தனது வீட்டில் உள்ள அனைத்து பொருட்களையும் சகட்டுமேனிக்கு அடித்து நொறுக்கினாராம் ரஜினி. யாருமே பக்கத்தில்கூட நெருங்க முடியவில்லையாம். எனக்கு இந்த வாழ்க்கை பிடிக்கவில்லை எல்லாமே போதும் என கத்திக்கொண்டே அடித்து நொறுக்கியிருக்கிறார். இதனால் அதிர்ச்சியில் உறைந்து போன மனைவி லதா ரஜினியின் குருநாதரான பாலசந்தருக்கு ஃபோன் போட்டிருக்கிறார்.
என்னை மட்டும் ஏன் விட்ட?: விஷயம் தெரிந்ததும் பதறியடித்து வீட்டுக்கு வந்த பாலசந்தர் ரஜினியின் ரூமை பார்த்திருக்கிறார். அலங்கோலமாக கிடந்திருக்கிறது. ஆனால் பாலசந்தரின் புகைப்படம் மட்டும் தொங்கிக்கொண்டிருந்ததாம். அதனைப் பார்த்த இயக்குநர், என்னை மட்டும் ஏன் விட்ட. அதையும் உடைச்சிருக்க வேண்டியதுதானே என கேட்டிருக்கிறார்.
உடனே சாந்தமான ரஜினிகாந்த், சிவாஜி ராவாக எங்கேயோ நிம்மதியாக இருந்தேன். ஏன் எனக்கு இவ்வளவு புகழை வாங்கிக்கொடுத்தீங்க என சொல்ல; அதற்கு பாலசந்தரோ வாய்ப்புக்கு ஒவ்வொருவனும் அவ்வளவு அலைகிறான். உனக்கு வாய்ப்பு கிடைத்து புகழும் கிடைத்திருக்கிறது. அதை ஒழுங்காக பயன்படுத்து என சொல்லியிருக்கிறார். அதன் பிறகுதான் ரஜினிகாந்த் முழுமையாக அமைதியாகி நார்மல் மோடுக்கு வந்தாராம்.


Click it and Unblock the Notifications











