தனுஷ் இருக்கும் விழாவில் கோர்த்துவிட பார்த்த தொகுப்பாளர்.. சூப்பராக தப்பித்த நயன்தாரா.. செம தெளிவு
சென்னை: தனுஷின் நடிப்பில் கடைசியாக வெளியான ராயன் திரைப்படம் கலவையான விமர்சனத்தையே பெற்றது. அடுத்ததாக இட்லி கடை, குபேரா உள்ளிட்ட படங்களில் நடித்துவருகிறார். மேலும் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என்ற படத்தை இயக்கி நடித்து முடித்திருக்கும் அவர்; ஹாலிவுட்டிலும் ஒரு படத்தில் கமிட்டாகியிருப்பது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே அவருக்கும் நடிகை நயன்தாராவுக்கும் இடையே மோதல் போக்கு நிலவிவரும் சூழலில்; அவர்கள் தொடர்பான வீடியோ ஒன்று ட்ரெண்டாகியுள்ளது.
தனுஷ் மிகச்சிறந்த நடிகர்களில் ஒருவராக திகழ்ந்துகொண்டிருக்கிறார். கோலிவுட்டில் ஆரம்பித்த அவரது பயணம் பல விமர்சனங்களை சந்தித்தது. ஆனால் அதையெல்லாம் காதில் போட்டுக்கொள்ளாத அவர் தனது திறமையை படிப்படியாக வளர்த்துக்கொண்டு இப்போது ஹாலிவுட்வரை சென்றிருக்கிறார். அடுத்ததாக அவர் நடிக்கவிருக்கும் ஹாலிவுட் படத்தில் சிட்னி ஸ்வீனி ஹீரோயினாக நடிக்கவிருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த விஷயம் தனுஷ் ரசிகர்களை உச்சக்கட்ட மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.

தமிழில் பிஸி: ஹாலிவுட் சென்றாலும் தமிழில் அவர் டஜன் கணக்கில் படங்கள் வைத்திருக்கிறார். இப்போது குபேரா, இட்லி கடை ஆகிய படங்களில் நடித்துவரும் அவர்; அடுத்ததாக ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் ஒரு படம், மாரி செல்வராஜ் இயக்கத்தி ஒரு படம், தமிழரசன் பச்சைமுத்து இயக்கத்தில் ஒரு படம், போர் தொழில் இயக்குநரின் இயக்கத்தில் ஒரு படம், இளையராஜா பயோபிக் என படு பிஸியாக இருந்துவருகிறார். மேலும் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என்ற படத்தை இயக்கியும் முடித்திருக்கிறார்.
தனுஷ் Vs நயன்தாரா: சூழல் இப்படி இருக்க ரஜினிகாந்த்தின் மூத்த மகள் ஐஸ்வர்யாவிடமிருந்து சமீபத்தில் விவாகரத்து பெற்றார். அதேபோல் அவருக்கும் நடிகை நயன்தாராவுக்கும் மோதல் போக்கு நிலவிவருகிறது. நயன்தாரா பற்றிய ஆவணப் படத்தில் நானும் ரௌடிதான் படத்தின் காட்சிகளை பயன்படுத்துவதற்கு தயாரிப்பாளர் என்கிற முறையில் தனுஷ் அனுமதி அளிக்கவில்லை. இருப்பினும் மூன்று நொடி காட்சிகள் அந்த ஆவணப் படத்தின் ட்ரெய்லரில் இருந்தது. இதனால் கோபமடைந்த தனுஷ் வக்கீல் நோட்டீஸ் அனுப்பினார். அதற்கடுத்து காட்டமாக ஒரு கடிதம் எழுதி அதில் தனுஷை விமர்சனம் செய்திருந்தார் நயன்.
வழக்கு தொடர்ந்த தனுஷ்: அத்தோடு நிற்காமல் அவருடைய ஆவணப் படத்தில் நானும் ரௌடிதான் படத்தின் சம்பந்தப்பட்ட காட்சிகள் 37 நொடிகள்வரை இருந்தன. இதனால் மேற்கொண்டு கொதிப்படைந்த தனுஷ்; நயனுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கு தொடர்பான விசாரணை நீதிமன்றத்தில் நடந்துவருகிறது. இப்படி கடந்த சில காலமாகவே நயனும், தனுஷும்தான் கோலிவுட்டின் ஹெட்லைன்ஸாக இருந்தார்கள். இந்தச் சூழலில் வீடியோ ஒன்று ட்ரெண்டாகியிருக்கிறது.
என்ன வீடியோ: அதாவது ஒரு நிகழ்ச்சியில் நயன்தாரா கலந்துகொண்டார். அதில் தனுஷும் வேட்டி சட்டையோடு, முறுக்கு மீசை கெட்டப்பில் கலந்துகொண்டார். சில வருடங்களுக்கு முன்பு நடந்த அந்த நிகழ்ச்சியை ம.கா.பா ஆனந்த் தொகுத்து வழங்கினார். மேடைக்கு வந்த நயனிடம், உங்களுக்கு வேட்டி சட்டை போட்ட பையனை பிடிக்குமா இல்லை கோட் போட்ட பையனை பிடிக்குமா என்று கேட்க; நயனோ வேட்டி சட்டை போட்டவரைத்தான் பிடிக்கும் என்று சொன்னார். உடனடியாக பலரும் தனுஷை பார்த்து சிரித்தார்கள். கேமராவும் அவரைத்தான் ஃபோகஸ் செய்தது.
அடுத்ததாக ஆனந்த்; நயனிடம், உங்களுக்கு முறுக்கு மீசை வைத்திருப்பவரை பிடிக்குமா இல்லை நிறைய தாடி வைத்திருப்பவரை பிடிக்குமா என்று கேட்க; சுதாரித்துக்கொண்ட லேடி சூப்பர் ஸ்டார், 'பையன் நல்ல பையனாக இருந்தால் பிடிக்கும்' என்று கூறி எஸ்கேப் ஆகிவிட்டார். இதனைப் பார்த்த நெட்டிசன்கள் நயன்தாரா செம தெளிவுதான்; வில்லங்கமான கேள்வியிலிருந்து சூப்பராக தப்பித்துவிட்டாரே என்று கமெண்ட்ஸ் செய்துவருகிறார்கள்.


Click it and Unblock the Notifications











