எனது 5 வருட வாழ்க்கையை இரண்டே வரிகளில் தனுஷ் சொல்லிட்டார்.. சிவகார்த்திகேயன் ஓபனா பேசிட்டாரே

சென்னை: மெரீனா படத்தில் ஹீரோவாக அறிமுகமான சிவகார்த்திகேயனை அதற்கு முன்னதாகவே சினிமாவில் 3 படத்தில் அறிமுகப்படுத்தியவர் தனுஷ். அந்தப் படத்தில் சிறிய ரோல் மட்டுமே கொடுத்திருந்தார். அதனையடுத்து தொடர்ந்து ஹீரோவாக நடித்த எஸ்கே இப்போது டாப் 5 ஹீரோக்களில் ஒருவராக விளங்கிக்கொண்டிருக்கிறார். அவரது நடிப்பில் கடைசியாக வெளியான அமரன் திரைப்படம் உலகம் முழுவதும் 300 கோடி ரூபாய்வரை வசூலித்து சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.

சிவகார்த்திகேயன் இப்போது பெரிய கமர்ஷியல் ஹீரோவாக வளர்ந்துவிட்டார். அவரது நடிப்பில் கடந்த வருடம் வெளியான அமரன் திரைப்படம் உலகளவில் 350 கோடி ரூபாய்வரை வசூலித்து சாதனை படைத்தது. மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாறை அடிப்படையாக கொண்டு உருவான அந்தப் படத்தில் சாய் பல்லவி உள்ளிட்டோர் நடித்திருந்தார்கள். கமல் ஹாசன் தயாரித்திருந்தார். படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதன் காரணமாக சிவாவின் மார்க்கெட்டும் உச்சத்துக்கு சென்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

Dhanush And Sivakarthikeyan s Throwback Video has attracted attention among fans

பராசக்தி: எஸ்கே இப்போது சுதா கொங்கரா இயக்கத்தில் பராசக்தி படத்தில் நடித்துவருகிறார். படத்தின் ஷூட்டிங் தற்போது இலங்கையில் மும்முரமாக நடந்துவருகிறது. இதில் அவருடன் ரவி மோகன், அதர்வா உள்ளிட்டோரும் நடித்துவருகிறார்கள். இலங்கையில் நடக்கும் ஷூட்டிங்கின் வீடியோகூட இன்று வெளியாகி பயங்கரமாக ட்ரெண்டாகியிருக்கிறது. இதற்கிடையே ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மதராஸி என்ற படத்தில் நடித்து முடித்திருக்கிறார் அவர். அதன் டீசர் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

Take a Poll

தனுஷால் சினிமா: சிவா முதலில் சின்னத்திரையில்தான் தோன்றினார். ஏகன் படத்தில் ஒரு காட்சியில் நடித்திருந்தார். பிறகு அட்லீ இயக்கிய குறும்படம் ஒன்றில் நடித்தார். சூழல் இப்படி இருக்க அவர் மீது தனுஷின் கவனம் சென்றது. அதனைத் தொடர்ந்து தனது முன்னாள் மனைவி இயக்கிய முதல் படமான 3ல் சிவாவுக்கு ஒரு ரோல் கொடுத்தார். அதில் தனக்கு கொடுக்கப்பட்ட ரோலை கனகச்சிதமாக செய்தார். இதனைப் பார்த்த தனுஷோ, உங்களுக்கு சிறிய ரோல் கொடுத்துவிட்டேன். நீங்கள் ஹீரோவாக நடிக்க வேண்டும் என்று அவரை வைத்து எதிர் நீச்சல் படத்தை தயாரிக்கவும் செய்தார்.

Dhanush And Sivakarthikeyan s Throwback Video has attracted attention among fans

சூப்பர் ஹிட்: சிவாவின் கரியரில் எதிர் நீச்சல் படத்துக்கும் மிகப்பெரிய பங்கு இருக்கிறது. துரை செந்தில்குமார் இயக்கியிருந்த அந்தப் படமும் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது. பாடல்கள், எமோஷன், காதல் என அத்தனை ஏரியாக்களிலும் படம் ஜொலித்தது. இந்தப் படத்துக்கு பிறகு சிவகார்த்திகேயன் மீது கோலிவுட்டின் கவனம் பலமாகவே திரும்பியது. முக்கியமாக சில படங்களிலேயே காணாமல் போய்விடுவார் என்று எதிர்பார்த்த அனைவருமே எதிர் நீச்சலை பார்த்து வாயடைத்துப் போனார்கள் என்பதுதான் உண்மை.

தனுஷுடன் பிரச்னை: இப்படி சிவகார்த்திகேயனின் வளர்ச்சியில் தனுஷுக்கு பெரிய பங்கு இருக்கிறது. ஆனால் கடந்த சில வருடங்களாக தனுஷுக்கும், சிவாவுக்கும் பிரச்னை என்று சொல்லப்பட்டது. அதுகுறித்து இரண்டு பேரும் அமைதியே காத்துவருகிறார்கள். அதேசமயம் தயாரிப்பாளர் ஆகாஷின் திருமணத்தில் கலந்துகொண்ட இரண்டு பேரும் உற்சாகமாக நடனமாடினார்கள். அதனைப் பார்த்த ரசிகர்கள் இரண்டு பேருக்கும் பிரச்னை என்று யார் சொன்னது என்று கேள்விகளை முன்வைத்தார்கள்.

ட்ரெண்டாகும் வீடியோ: அதேசமயம் அதெல்லாம் ஒரு நாகரீகத்துக்காக பொதுவெளியில் அப்படி நடந்துகொண்டார்கள்; அவர்களுக்குள் பிரச்னை இருப்பது உண்மைதான் என்று ஒருதரப்பினர் தொடர்ந்து சொல்லிகொண்டே இருக்கிறார்கள். இந்நிலையில் பழைய வீடியோ ஒன்று ட்ரெண்டாகியிருக்கிறது. அதாவது எதிர் நீச்சல் படத்துக்காக 'பூமி என்னை சுத்துதே' பாடலை தனுஷ்தான் எழுதியிருந்தார். அந்தப் பாடல் உருவாக்கப்படும்போது எடுக்கப்பட்ட வீடியோவில், தனுஷ், 'டேமேஜான பீஸு நானு ஜோக்கர் இப்போ ஹீரோ ஆனேன்'என்று வரியை சொல்கிறார். உடனே சிவாவோ, 'எனது ஐந்து வருட வாழ்க்கையை இரண்டே வரிகளில் சொல்லிட்டீங்க சார்' என்று சொல்கிறார். இந்த வீடியோதான் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்திருக்கிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X