ஐஸ்வர்யா ரஜினிகாந்த்தை மட்டப்படுத்திய தனுஷ்?.. ஆத்தாடி டைவர்ஸுக்கு முதல் புள்ளியே அதுதானா?
சென்னை: ரஜினிகாந்த்தின் மூத்த மகள் ஐஸ்வர்யாவும், நடிகர் தனுஷும் காதலித்து திருமணம் செய்துகொண்டார்கள். அவர்களது திருமணம் கடந்த 2004ஆம் ஆண்டு பிரமாண்டமாக நடைபெற்றது. திருமணத்துக்கு பிறகு அந்தத் தம்பதிக்கு இரண்டு மகன்கள் பிறந்தார்கள். குடும்பம், குழந்தைகள் என சந்தோஷமாக இருந்த அவர்களுக்குள் கடந்த சில வருடங்களுக்கு முன்னதாகவே மனஸ்தாபம் ஏற்பட தொடங்கியிருக்கிறது. போகப்போக சரியாகிவிடும் என்றுதான் அவர்களும், அவர்களது குடும்பத்தினரும் நினைத்தார்கள். ஆனால் யாரும் எதிர்பார்க்காத வகையில் இரண்டு பேரும் கடந்த வருடம் சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து மனு தாக்கல் செய்து சட்டப்பூர்வமாக டைவர்ஸ் பெற்றுவிட்டார்கள்.
சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்களால் அழைக்கப்படும் ரஜினிகாந்த்துக்கு மொத்தம் இரண்டு மகள்கள். முதல் மகள் பெயர் ஐஸ்வர்யா, இரண்டாவது மகள் பெயர் சௌந்தர்யா. இரண்டு மகள்கள் மீதும் கொள்ளை பிரியம் கொண்டிருப்பவர் ரஜினி. இதன் காரணமாக அவர்களது விருப்பத்துக்கு மாறாக எதையும் செய்யக்கூடாது என்ற முடிவோடு இருப்பவர். அதன்படிதான் சௌந்தர்யா முதலில் ஒருவரை திருமணம் செய்தார். அந்தத் திருமண வாழ்க்கை சரியாக அமையவில்லை. அதனையடுத்து விவாகரத்து பெற்ற அவர்; இரண்டாவதாக விசாகன் என்பவரை காதலித்தார். அந்தக் காதலுக்கு உடனடியாக சம்மதம் தெரிவித்து இரண்டாவது திருமணத்தையும் முன்நின்று நடத்தி வைத்தார் அவர்.

முதல் மகளுக்கும் அப்படித்தான்: இரண்டாவது மகளுக்கு முன்னதாகவே முதல் மகளின் காதலுக்கு பச்சைக்கொடி காட்டியவர் ரஜினி. அதாவது காதல் கொண்டேன் படத்தில் தனுஷ் நடித்ததை பார்த்துவிட்டு அவரை பாராட்டுவதற்காக ஐஸ்வர்யா ரஜினிகாந்த் முதலில் சந்தித்தார். அந்த முதல் சந்திப்பு ஜஸ்ட் ஃபார்மாலிட்டியாகவே முடிந்தது. ஆனால் அன்றைய நாளிலிருந்து அவர்களுக்குள் ஏற்பட்ட பழக்கம் நாளடைவில் நெருக்கமானது. அந்த நெருக்கம் அடுத்தக்கட்டத்துக்கு சென்று காதலாக மாறியது. தனுஷை காதலிப்பதாக ரஜினிகாந்த்திடமும், லதாவிடமும் நேரடியாக சென்று கூறினார் ஐஸ்வர்யா. அவர்கள் இதனை எதிர்பார்க்கவில்லை என்பதுதான் உண்மை.
கோலாகல திருமணம்: இருப்பினும் தங்களது மகள் ஆசைப்பட்டுவிட்டார் என்பதற்காகவும்; தனுஷும் உண்மையாகவே காதலிக்கிறார் என்று உறுதியானதாலும் இரண்டு பேருக்கும் திருமணம் செய்துவைக்க முடிவெடுத்தார்கள். அதன்படி கடந்த 2004ஆம் ஆண்டு தனுஷுக்கும் ஐஸ்வர்யாவுக்கும் திருமணம் கோலாகலமாக நடந்தது. அந்த சமயத்தில் ஒட்டுமொத்த கோலிவுட்டும் தனுஷ் மீது பொறாமைதான் பட்டது. ஏனெனில் அதுவரை அவர் பத்து படங்கள்கூட நடிக்கவில்லை; அதற்குள் ரஜினிகாந்த் வீட்டு மருமகன் ஆகிவிட்டாரே என்று ஓபனாகவே பேசிக்கொண்டார்கள். இருப்பினும் தனுஷோ, ஐஸ்வர்யாவோ, ரஜினிகாந்த்தோ அதனைப் பற்றியெல்லாம் துளிகூட கவலையெல்லாம் படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஜோரான காதல் வாழ்க்கை: திருமணத்துக்கு பிறகு ரஜினிகாந்த் மருமகன் என்ற அடையாளமும் தனுஷுக்கு வந்துவிட்டதால் அவர் தனது கரியரில் முழு கவனமும் செலுத்தினார். முழுக்க முழுக்க வேறு ஒரு மனிதராக திருமணத்துக்கு பிறகு மாறினார். நடிப்பு, நடனம் என அத்தனை ஏரியாக்களிலும் தன்னை அவர் மெருகேற்றிக்கொண்டார். இதன் காரணமாக ரஜினியின் மருமகன் எனும் லேபிள் கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து தனுஷ் ஒரு சிறந்த நடிகர் என்ற தனி லேபிள் கிடைத்தது. ஐஸ்வர்யாவும் தனுஷின் வளர்ச்சிக்கு தனது முழு முதல் ஆதரவை கொடுத்திருக்கிறார். இதன் காரணமாக அவர்கள் கோலிவுட்டின் ஃபேவரைட் ஜோடியாகவே வலம் வந்துகொண்டிருந்தார்கள். அவர்களுக்கு இரண்டு மகன்களும் பிறந்தார்கள்.

தனுஷும் சப்போர்ட்தான்: தனுஷுக்கு எப்படி ஐஸ்வர்யா முழு சப்போர்ட்டாக இருந்தாரோ அதேபோல் ஐஸ்வர்யாவுக்கும் தனுஷ் இருந்தார். அதாவது அவருக்குள் இருக்கும் இயக்குநர் கனவை தெரிந்துகொண்டு ஐஸ்வர்யா இயக்கத்தில் 3 படத்தில் நடித்தார். தொடர்ந்து ஐஸ்வர்யாவும் வை ராஜா வை, லால் சலாம் ஆகிய படங்களை இயக்கினார். ஆனால் துரதிர்ஷ்டவசமாக அவர் இயக்கிய எந்தப் படமும் பெரியதாக வெற்றியை பெறவில்லை. அதேசமயம் அவர் இயக்கியிருந்த முதல் படமான 3 வசூல் ரீதியாக பெரிய வெற்றியை பெறாவிட்டாலும் விமர்சன ரீதியாக அட்டகாசமான வரவேற்பை பெற்று ஐஸ்வர்யா நன்றாக இயக்கியிருக்கிறார் என்கிற பெயரையும் பெற்றுக்கொடுத்தது.
தொடங்கிய மனஸ்தாபம்: இப்படி சுமூகமாக அவர்களது திருமண வாழ்க்கை போய்க்கொண்டிருந்த சூழலில் தனுஷுக்கும், ஐஸ்வர்யாவுக்கும் இடையே மனஸ்தாபம் ஏற்பட தொடங்கியது. தனுஷின் குடும்பத்தினரை ரஜினி வீட்டில் மதிப்பதில்லை என்று முதலில் தகவல் பரவியது. அதனையடுத்து தனுஷ் நடத்தையில் கொஞ்சம் எசகு பிசகாக இருக்கிறது என்றும் பேசப்பட்டது. ஆனால் இரண்டு பேரும் பொது நிகழ்ச்சிகளுக்கு ஜோடியாக கலந்துகொள்வதையே வாடிக்கையாக வைத்திருந்தார். இதன் காரணமாக தனுஷ் - ஐஸ்வர்யா இடையே மனஸ்தாபம் என்று பரவும் தகவல்கள் எல்லாம் பெரிய வதந்தி என்ற பிம்பங்களும் உருவாக தொடங்கிவிட்டன.

பிரிவை அறிவித்த ஜோடி: ஆனால் அப்படி பிம்பம் உருவான சில காலத்திலேயே தாங்கள் இரண்டு பேரும் திருமண வாழ்க்கையிலிருந்து வெளியே வருகிறோம். இரண்டு பேரும் தனித்தனி பாதையில் பயணப்பட போகிறோம் என்று இரண்டு பேரும் சோஷியல் மீடியாவில் அறிவித்தார்கள். அவர்கள் அப்படி அறிவித்தாலும் முறைப்படி நீதிமன்றம் சென்று விவாகரத்து தாக்கல் செய்யாமல் இருந்தார்கள். இதனால் அவர்களது ரசிகர்கள் நிம்மதியடைந்தார்கள்.மேலும் குடும்பத்தினரும் அவர்களை எப்படியாவது மீண்டும் சேர்த்துவைத்துவிட வேண்டும் என்று தீவிரமான முயற்சிகளை மேற்கொண்டார்கள். எனவே எப்படியாவது அவர்கள் இரண்டு பேரும் சேர்ந்துவிடுவார்கள் என்றே பலராலும் எதிர்பார்க்கப்பட்டிருந்தது.
விவாகரத்து: ஆனால் யாரும் எதிர்பார்க்காத சூழலில் கடந்த வருடம் சென்னை குடும்பநல நீதிமன்றத்தில் அவர்கள் விவாகரத்து மனு தாக்கல் செய்து சட்டப்பூர்வமாக டைவர்ஸையும் பெற்றுவிட்டார்கள். இரண்டு மகன்களையும் கோ பேரண்ட்டிங் முறையில் வளர்ப்பதற்கு அவர்கள் முடிவு செய்திருக்கிறார்கள். எப்படியும் சேர்ந்துவிடுவார்கள் என்று ரசிகர்கள் நினைத்திருந்த ஜோடி நிரந்தரமாக பிரிந்துவிட்டது கோலிவுட்டில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் எதற்காக அவர்கள் இந்த முடிவுக்கு சென்றார்கள் என்றும் பலரும் ஆராய்ச்சியில் ஈடுபட தொடங்கினார்கள். இந்நிலையில் இரண்டு பேர் தொடர்பான வீடியோ ஒன்று ட்ரெண்டாகியிருக்கிறது.
என்ன வீடியோ?: அதாவது சிவகார்த்திகேயன் தொகுத்து வழங்கிய ஒரு நிகழ்ச்சியில் ஐஸ்வர்யாவும், தனுஷும் கலந்துகொண்டார்கள். அப்போது தனுஷ், 'நான் ஐஸ்வர்யாவை மீட் செய்யும்போது அவங்களுக்கு தமிழே தெரியாது' என்று கூறினார். உடனே சிவகார்த்திகேயன் கலாய்க்க முயல; ஐஸ்வர்யாவோ, 'ஏன் இப்போ என்னுடைய தமிழுக்கு என்ன குறைச்சல்' என்று கேட்டார். அதற்கு தனுஷோ, 'இப்போ நல்லா தமிழ் பேசுறாங்க. அதெல்லாம் நம்ம ட்ரெய்னிங்தான்' என்று சொல்ல மேற்கொண்டு கொஞ்சம் காண்டானார் ஐஸ்வர்யா. இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள்; தனுஷ் இப்படி தன்னை பொதுவெளியில் மட்டப்படுத்துகிறாரே என்று ஐஸ்வர்யா நினைத்ததுதான் அவர்களுக்குள் பிரச்னை வந்ததற்கான முதல் புள்ளியாக இருக்குமோ என்று ரசிகர்கள் கமெண்ட்ஸ் செய்ய ஆரம்பித்திருக்கிறார்கள்.


Click it and Unblock the Notifications











