உண்மையை சொன்னா அவ்ளோதான்.. எச்சரித்த ஐஸ்வர்யா.. அதை பற்றி கவலை இல்லைனு பதிலடி கொடுத்த தனுஷ்
சென்னை: ரஜினிகாந்த்தின் மூத்த மகள் ஐஸ்வர்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்ட தனுஷ்; கடந்த வருடம் சட்டப்பூர்வமாக விவாகரத்து பெற்று அவரிடமிருந்து பிரிந்தார். இந்த ஜோடியின் விவாகரத்து முடிவு ரசிகர்களிடையேயும், அவர்களது குடும்பத்தினருடமும் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. எப்படியாவது அவர்களை சேர்த்து வைத்துவிட ரஜினிகாந்த்தும் பல முயற்சிகளை மேற்கொண்டார். ஆனால் அந்த முயற்சிகளுக்கு எந்தப் பலனும் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
காதல் கொண்டேன் படத்தில் நடித்த தனுஷை பாராட்டுவதற்காக நேரில் முதன்முறையாக சந்தித்தார் ஐஸ்வர்யா. அப்போது அவர்களுக்குள் ஏற்பட்ட பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. பிறகு திருமணம் செய்ய முடிவெடுத்த தனுஷ்; தனது வீட்டாரிடமும், நண்பர்களிடமும் கூறினாராம். அப்படி சுசித்ராவிடமும் கூறியபோது இந்தத் திருமணம் வேண்டாம் என்று அவர் தடுத்ததாக சுசித்ராவே ஒரு பேட்டியில் பேசியிருக்கிறார். ஆனால் ஐஸ்வர்யா மீது இருக்கும் காதலால் திருமணம் செய்துகொள்வது என்கிற உறுதியான முடிவில் இருந்தார் தனுஷ்.

நடந்த திருமணம்: இது ஒருபக்கம் இருக்க ஐஸ்வர்யாவின் வீட்டிலும் உடனடியாக சம்மதம் கிடைக்கவில்லை. ஆனால் மகளின் உறுதித்தன்மையை பார்த்த ரஜினியும், லதாவும் திருமணத்துக்கு ஒத்துக்கொண்டார்கள். அதன்படி கடந்த 2004ஆம் ஆண்டு அவர்களுக்கு திருமணம் நடைபெற்றது. அந்தத் திருமணம் நடந்தபோது திரைத்துறையில் பலரும் ஆச்சரியம்தான் பட்டார்கள். சினிமாவுக்குள் வந்து சில வருடங்களிலேயே சூப்பர் ஸ்டார் வீட்டு மருமகன் ஆகிவிட்டாரே என்று அனைவருமே புருவம் உயர்த்தினார்கள்.
வளர்ந்த திறமை: ரஜினி தன்னை மருமகனாக தேர்ந்தெடுத்ததை தவறு என்று ஆக்கிவிடக்கூடாது என நினைத்த தனுஷ்; தன்னுடைய திறமையை அசுரத்தனமாக வளர்த்து தனக்கென தனி அடையாளம் ஒன்றை உருவாக்கினார். இதன் காரணமாக அவருக்கும் ரசிகர்கள் பன்மடங்கு பெருகினார்கள். நடிப்பு மட்டுமின்றி இயக்கம், பாடல்கள் பாடுவது, எழுதுவது என அனைத்து ஏரியாக்களிலும் கலக்க ஆரம்பித்தார் தனுஷ். இப்போது பாலிவுட், ஹாலிவுட்வரை சென்றிருக்கிறார்.
விவாகரத்து: திருமணத்துக்கு பிறகு இரண்டு பேரும் தங்களது வாழ்க்கையை சுமூகமாகத்தான் நகர்த்திக்கொண்டிருந்தார்கள். ஆனால் யார் கண் பட்டதோ தெரியவில்லை; இரண்டு பேருக்கும் மனஸ்தாபம் உருவானது. நாட்கள் செல்ல செல்ல அந்த மனஸ்தாபம் குறைந்துவிடும் என்று எதிர்பார்த்தால் அதிகரிக்கவே செய்தது. எனவே பிரிந்துவிடுவதாக முடிவெடுத்தார்கள். எப்படியாவது அவர்களை சேர்த்துவைத்துவிட ரஜினிகாந்த் குடும்பமும், தனுஷ் குடும்பமும் ரொம்பவே மெனக்கெட்டார்கள். ஆனால் இரண்டு பேரும் விவாகரத்து மனுத்தாக்கல் செய்து; மனம் ஒத்து பிரிந்துவிட்டார்கள். அவர்களது பிரிவு பலரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவர்களது மகன்கள் கோ பேரண்ட்டிங் முறையில் இரண்டு பேரிடமும் வளரவிருக்கிறார்கள்.

ட்ரெண்டாகும் பேட்டி: அவர்களின் பிரிவுக்கு முக்கிய காரணமே இரண்டு தரப்பிடமிருந்து வெளிப்பட்ட ஈகோதான் என்று சொல்லப்படுகிறது. இந்நிலையில் தனுஷ் - ஐஸ்வர்யா தொடர்பான வீடியோ ஒன்று ட்ரெண்டாகியிருக்கிறது. அதாவது 3 பட சமயத்தில் ஒரு நிகழ்ச்சியில் அவர்கள் கலந்துகொண்டார்கள். அப்போது ஒய் திஸ் கொலவெறி பாடலில் பெண்களை ஓவராக தாக்கியிருக்கிறார்களே என்று தொகுப்பாளினி ஐஸ்வர்யாவிடம் கேட்டார். அதற்கு பதிலளித்த ஐஸ்வர்யா, "அவர்கள் ஒரு அளவுக்கு உண்மையை சொல்கிறார்கள். ஆனால் நாம் முழுவதுமாக உண்மையை வெளியில் சொன்னால் அவர்களால் தாங்க முடியாது" என்றார்.
தனுஷின் பதிலடி: அதற்கு உடனடியாக ரியாக்ட் செய்த தனுஷோ, "நீங்கள் ஓரளவுக்கு உண்மையாக சொல்லுங்க, முழுசா உண்மையை சொல்லுங்க, முழுசா பொய் சொல்லுங்க. எங்களுக்கு அதைப் பற்றியெல்லாம் கவலை இல்லை. பாதிக்கப்பட்ட நாங்கள் பாடல் பாடுகிறோம். உங்களுக்கு என்ன பிரச்னை. பிடித்தால் கேளுங்கள் இல்லையென்றால் செல்லுங்கள்" என்றார்.


Click it and Unblock the Notifications











