மச்சான்களைப் பார்த்து தெறித்து ஓடும் தனுஷ்.. அட குடும்பத்துக்குள்ள இப்படியெல்லாம் நடக்குதா?
சென்னை: நடிகர் தனுஷ், தமிழ் சினிமா நடிகர் என்ற அளவீட்டில் அவரை அடக்குவது சிரமம். தமிழ், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் என அனைத்து மொழிப் படங்களிலும் நேரடியாக நடிக்கும் திறமையான நடிகர். இது மட்டும் இல்லாமல், இயக்குநர், கதாசிரியர், பாடலாசிரியர், பாடகர், தயாரிப்பாளர் என தனுஷ், பல துறைகளில் ஜாம்பவானாக உள்ளார். இன்று வருக்கு 42வது பிறந்த நாள். அவரது பிறந்த நாளில் அவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் தனுஷ் தனது மச்சான்களைப் பார்த்து பயப்படுவது குறித்து இந்த தொகுப்பில் காணலாம்.
இன்று அதாவது ஜூலை 28ஆம் தேதி தனுஷ்க்கு பிறந்த நாள் என்பதால் அவரது இயக்கத்தில் அவரே நடித்தும் உருவான படமான இட்லி கடை படத்தில் இருந்து முதல் பாடல் வெளியிடப்பட்டது. என்ன சுகம் என்ற அந்த பாடலை தனுஷ் எழுதி, ஸ்வேதா மோகனுடன் இணைந்து பாடியும் உள்ளார். ஏற்கனவே இவர்கள் இருவரும் வாத்தி படத்தில் வா வாத்தி பாடலைப் பாடி இருந்தார்கள். அந்த பாடல் செம ஹிட் அடித்தது. அதேபோல் இந்த பாடலும் ஹிட் அடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜி.வி. பிரகாஷ் குமார் இசையில் இந்த பாடல் மிகவும் சிறப்பாக உள்ளதாக ரசிகர்கள் விமர்சித்து வருகிறார்கள். தனுஷ்க்கு இன்று பிறந்த நாள் என்பதால் அவர் கமிட் ஆகியுள்ள படங்களில் இருந்து ஏதாவது அப்டேட்கள் வரும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டு உள்ளார்கள்

சினிமா வாழ்க்கை: 12ஆம் வகுப்பு வரை படித்த தனுஷ், அதன் பின்னர் தனது அண்ணன் செல்வராகவனின் அறிவுரை மற்றும் அழுத்தத்தினால் திரைத்துறையில் நடிக்க வந்தார். ஆரம்ப காலத்தில் கடுமையான உருவக்கேலிகளை எதிர்கொண்ட தனுஷ், அவை ஒவ்வொன்றுக்கும் தனது திறமை மூலம் பதிலடி கொடுத்து, தமிழ் சினிமாவில் பன்முக கலைஞனாக மாறி நிற்கிறார். தனுஷ் வளர்ந்த பின்னரும் அவர் மீதான விமர்சனங்கள் என்பது, பெரும்பாலும் அவதூறாகவே உள்ளது. இந்த அவதூறுகளை கண்டுகொள்ளாமல் அடுத்தடுத்து படங்களில் கமிட் ஆகி கொண்டே உள்ளார் தனுஷ்.
ம்ச்சான்கள்: இப்படியான தனுஷ்க்கு அவரது சகோதரிகளின் கணவர்களைப் பார்த்தால் பயம் என்றால் நம்ப முடிகிறதா. ஆனால், அப்படியான சம்பவங்கள் அடிக்கடி அவர்களது குடும்பத்தில் நடக்குமாம். அதாவது, தனுஷின் சகோதரிகளான கார்த்திகா தேவி மற்றும் விமலா கீதா என இருவரும் மருத்துவர்கள். இவர்களின் கணவர்களும் மருத்துவர்கள். இவர்களின் குடும்பத்தில் யாருக்காவது உடல்நிலை சரியில்லை என்றால், தனுஷின் மச்சான்கள் தான் சிகிச்சை அளிப்பார்களாம்.

தெறித்து ஓடும் தனுஷ்: சிகிச்சையின் ஒரு பகுதி ஊசி என்பதால், தனுஷ்க்கு ஊசி என்றாலே பயம். தனுஷ்க்கு மட்டும் இல்லை செல்வராகவனுக்குமே ஊசி என்றால் பயமாம். இதில் தனுஷ் இவர்கள் இருவரைப் பார்த்தலே தெறித்து ஓடும் அளவுக்கு இருப்பாராம் என சில ஆண்டுகளுக்கு முன்னர் கஸ்தூரி ராஜா, அவரது மனைவி விஜயலட்சுமி, மகள்கள் கார்த்திகா தேவி மற்றும் விமாலா தேதி ஆகியோர் ஒன்றாக இணைந்து அளித்த பேட்டியில் பகிர்ந்து கொண்டுள்ளார்கள். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. இதில் காத்திகா தேவியின் கணவர் கார்த்திக் அஞ்சி ராயன் படத்தில் காவல் அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.


Click it and Unblock the Notifications











