இந்தியாவின் கிளிண்ட் ஈஸ்ட்வுட்.. பாக்யராஜ் பற்றி ஆங்கிலத்தில் பேட்டியளித்த தனுஷ்.. குபேரா படத்திலும்

சென்னை: கதை, திரைக்கதை, வசனம், இயக்கம், நடிப்பு கே. பாக்யராஜ் என திரையில் தோன்றினாலே ரசிகர்கள் தியேட்டருக்கு கூட்டம் கூட்டமாக கிளம்பி விடுவார்கள். சினிமாவில் கமர்ஷியலாகவே பல புரட்சிகளை செய்துக்காட்ட முடியும் என்பதை தனது புத்திக் கூர்மையால் நிகழ்த்திக் காட்டிய திரைக்கதை மன்னர் தான் பாக்யராஜ்.

எம்ஜிஆரின் வாரிசாகவே பார்க்கப்பட்ட பாக்யராஜ் இன்று அதிகாலை மாரடைப்பு காரணமாக உயிரிழந்தது ஒட்டுமொத்த தமிழ் சினிமாவையும் ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Dhanush praised Bhagyaraj like Clint Eastwood in a throwback interview goes viral

கடந்த ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளியான குபேரா படத்தில் கூட பிச்சைக்காரர் வேடம் என்றால் கூட பரவாயில்லை ஹீரோவே பிச்சைக்காரனா நடிக்கிறான், நான் நடிக்க மாட்டேனா என தனுஷ் உடன் நடித்த பாக்யராஜ் குறித்து ஆங்கில ஊடகத்திற்கு தனுஷ் அளித்த த்ரோபேக் பேட்டி ஒன்று தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

திரைக்கதை, இயக்கம், நடிப்பு: கமல்ஹாசன் மட்டுமின்றி தமிழ் சினிமாவில் ஏகப்பட்ட சகலகலா வல்லவர்கள் உள்ளனர். இயக்குநர்கள் எல்லாம் ஹீரோக்களாக முடியும் என்பதை அந்த காலத்திலேயே நிரூபித்துக் காட்டி வெற்றி ஹீரோவாகவும் இயக்குநராகவும் வலம் வந்தவர் தான் எங்கள் பாக்யராஜ் என தனுஷ் ஒரு பேட்டியில் பேசிய காட்சிகளை தற்போது அவரது ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.

உத்தம புத்திரன்: 2010ம் ஆண்டு யாரடி நீ மோகினி படத்திற்கு பிறகு மீண்டும் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் தனுஷ் நடித்த உத்தம புத்திரன் படத்தில் பாக்யராஜ் தனுஷுக்கு அப்பாவாக பக்காவான ரோலில் நடித்திருப்பார். அவரது திரைக்கதை மன்னர் யுக்தியை கதையிலும் பயன்படுத்தி எடுக்கப்பட்ட காட்சிகள் இன்னமும் ரசிகர்களை சிரிக்க வைத்து வருகிறது. மனைவியை எப்படி மதிக்க வேண்டும், குடும்பத்தை எப்படி பார்த்துக் கொள்ள வேண்டும் என அவர் சொல்லும் வசனங்கள் எல்லாம் வேறலெவல்.

இந்தியாவின் கிளின்ட் ஈஸ்ட்வுட்: திரைக்கதை மன்னர் பாக்யராஜ் இந்த வயதிலும் அவர் நடிப்பு, இயக்கம் என அசத்துவதை பார்த்து ஆச்சர்யப்பட்டுள்ளேன். 80கள் மற்றும் 90களில் அவரது ஆதிக்கம் தமிழ் சினிமாவை பெரியளவில் மாற்றியது குறிப்பிடத்தக்கது. கிளிண்ட் ஈஸ்ட்வுட் என்றே அவரை கொண்டாடலாம் என நடிகர் தனுஷ் ஆங்கில ஊடகத்துக்கு அளித்த பழைய பேட்டியை ஷேர் செய்து ரசிகர்கள் பாக்யராஜின் புகழை போற்றி வருகின்றனர்.

கடைசியாக குபேரா: கடந்த ஆண்டு தனுஷ், நாகார்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்டோர் நடித்த குபேரா படத்தில் பிச்சைக்காரர் வேடத்தில் தனுஷுக்கு குருவை போன்ற கதாபாத்திரத்தில் பாக்யராஜ் நடித்திருப்பார். படத்தை பார்த்த பலருக்கும் அவர் பாக்யராஜ் தானா? என்பதை கண்டுபிடிக்கவே நேரம் எடுத்துக் கொண்டது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X