Dhanush - உனக்கென்னடா தெரியும்?.. ஒழுங்கா நடி..தனுஷை அதட்டி அந்தப் படத்தில் நடிக்க வைத்த எழுத்தாளர்

சென்னை: Dhanush (தனுஷ்) புதுப்பேட்டை படத்தில் நடிப்பதற்கு மறுப்பு தெரிவித்த தனுஷை எழுத்தாளர் பாலகுமாரன் சம்மதிக்க வைத்திருக்கிறார்.

துள்ளுவதோ இளமையில் அறிமுகமான தனுஷ் முதல் படத்தில் ஏகப்பட்ட கிண்டல்களை சந்தித்தவர். குறிப்பாக அவரது உருவத்தை வைத்து பலரும் கிண்டல் செய்தார்கள். அதனையடுத்து காதல் கொண்டேன் படத்தில் நடித்ததன் மூலம் தான் கிண்டலுக்குட்பட்டவன் இல்லை பாராட்டு பெற வேண்டியவன் என்பதை தனது நடிப்பின் மூலம் நிரூபித்தார். தனுஷை பார்த்து கைகொட்டி சிரித்தவர்கள் எல்லாம் அந்தப் படத்துக்கு பிறகு கைத்தட்டி ரசித்தனர்.

Dhanush Shares About Balakumaran and pudhupettai movie

ஹாலிவுட்: தொடர்ந்து பல படங்களில் நடித்து தனது திறமையை வளர்த்த தனுஷ் ஆடுகளம் படத்துக்காக தேசிய விருதையும் தட்டி தூக்கினார். அதனால் இந்தியா முழுவதும் பிரபலமான நடிகராக மாறினார். மேலும் பாலிவுட்டிலும் அவருக்கு கதவுகள் திறந்தன. அங்கும் தனது நடிப்பு திறமையை காண்பித்து ஹாலிவுட் படத்திலும் நடித்துவிட்டார் தனுஷ். தற்போது இந்தியாவின் மிகச்சிறந்த நடிகர்களில் ஒருவர் என்ற பெயரை பெற்றிருக்கிறார் அவர்.

கேப்டன் மில்லர்: அவரது நடிப்பில் கடைசியாக வாத்தி படம் வெளியாகி தோல்வியடைந்தது. அதனையடுத்து அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லர் படத்தில் நடித்திருக்கிறார். நிச்சயம் இந்தப் படம் தனுஷின் கரியரில் சிறந்த படமாக இருக்கும் என கருதப்படுகிறது. மேலும் படம் பீரியட் கால படமாக உருவாவது குறிப்பிடத்தக்கது. ஷூட்டிங் முடிந்து இறுதிக்கட்ட பணிகள் ஜரூராக நடந்துவருகின்றன.

தனுஷ் 50: நடிகராக மட்டுமின்றி இயக்குநராகவும் அவதாரம் எடுத்து பவர் பாண்டி படத்தை இயக்கினார். தான் இயக்க டிப்பார்ட்மெண்ட்டிலும் கிங் என்பதை அந்தப் படத்தின் வெற்றி மூலம் உணர்த்தினார். அடுத்ததாக தனது 50ஆவது படத்தை தானே இயக்கி நடிக்கிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். சந்தீப் கிஷன், காளிதாஸ், அபர்ணா பாலமுரளி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். படத்தின் ஆரம்பக்கட்ட பணிகள் மும்முரமாக தொடங்கியிருக்கிறது.

Dhanush Shares About Balakumaran and pudhupettai movie

புதுப்பேட்டை: இப்படி தவிர்க்க முடியாத கலைஞராக வளர்ந்திருக்கும் தனுஷ் வளரும் சூழலில் அவருக்கு கை கொடுத்த படங்களில் ஒன்று புதுப்பேட்டை. செல்வராகவன் இயக்கத்தில் கடந்த ஆம் ஆண்டு படம் வெளியானது. புதுப்பேட்டையை அப்போது யாரும் கொண்டாடவில்லை என்றாலும் காலங்கடந்து இப்போது கொண்டாடப்பட்டுக்கொண்டிருக்கிறது. கொக்கி குமார் கதாபாத்திரமும் தனுஷுக்கு லைஃப் டைம் செட்டில்மெண்ட்டாக அமைந்துவிட்டது. ஆனால் அதில் நடிக்க தனுஷ் முதலில் ஒத்துக்கொள்ளாத விஷயம் தெரியவந்திருக்கிறது.

என்னால் முடியாது: அதாவது, புதுப்பேட்டை கதையை அவரிடம் செல்வராகவன் சொன்னபோது தனுஷோ, "என்ன இந்த கேரக்டர என்னை பண்ண சொல்ற. ஒரு தாதா; குழந்தைக்கு அப்பா; அவன் இன்னொரு தாதாவை போட்டு தள்ளுறான். இதெல்லாம் எப்படி எனக்கு செட் ஆகும். வெயிட்டேஜ் ரொம்ப அதிகமா இருக்கு. நீ வேற யாரையாவது பெரிய ஸ்டாரை வைத்து பண்ணு என சொல்லியிருக்கிறார். அதற்கு செல்வாவும் நீ சொல்றதில் பாயிண்ட் இருக்கு என கூறியிருக்கிறார்.

அதட்டிய பாலகுமாரன்: இதனை கேள்விப்பட்ட எழுத்தாளர் பாலகுமாரன் தனுஷை அழைத்து, 'டேய் என்னடா சொல்ற. நீ நடிக்கமாட்டேனு சொல்றியாமே. நீ நேர்ல போயி பார்த்துருக்கியா. தாதாலாம் எப்டி இருப்பானுங்க தெரியும். ஒல்லியா இவ்ளூண்டுதான் இருப்பான். நீ நடி அதுதான் ஒரிஜினலாக இருக்கும்' என கூறி சம்மதிக்க வைத்திருக்கிறார். அன்று பாலகுமாரன் இல்லை என்றால் இன்று கொக்கி குமார் இல்லை என்பதுதான் நிஜம். இந்தத் தகவலை தனுஷ் ஒரு பேட்டியில் பகிர்ந்துகொண்டார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X