ஐஸ்வர்யா ரஜினிகாந்த்தை அதற்காக காதலிக்கவில்லை.. அவர் எப்படிப்பட்டவர் தெரியுமா?.. ஓபனாக பேசிய தனுஷ்

சென்னை: தனுஷும், ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யாவும் காதலித்து திருமணம் செய்துகொண்டார்கள். அவர்களுக்கு இரண்டு மகன்கள் பிறந்தார்கள். தம்பதியர் தங்களது வாழ்க்கையை சுமூகமாக நகர்த்திக்கொண்டிருந்த நிலையில் அவர்கள் இரண்டு பேரும் கடந்த வருடம் விவாகரத்து செய்துகொண்டார்கள். இது ஒருபக்கம் இருக்க நடிகை மிருணாள் தாகூருடன் தனுஷ் டேட்டிங் செய்துவருவதாக கடந்த சில நாட்களாக தகவல்கள் பரவிக்கொண்டிருக்கின்றன.

தனுஷ் நடித்த காதல் கொண்டேன் திரைப்படம் அவரது திரை வாழ்க்கையிலும் சரி தனிப்பட்ட வாழ்க்கையிலும் சரி முக்கியமான படம். நடிகராக அவரை உச்சம் கொண்டு சென்ற அந்தப் படம்தான்; ஐஸ்வர்யா ரஜினிகாந்த்தை முதன்முதலில் சந்திக்கும் வாய்ப்பை அவருக்கு ஏற்படுத்தி கொடுத்தது. அந்த சந்திப்பால் தொடர்ந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறி திருமணம் செய்துகொண்டார்கள் இரண்டு பேரும்.

நல்ல வாழ்க்கை: ஐஸ்வர்யாவை திருமணம் செய்துகொண்ட பிறகு தனுஷின் லைஃப் ஸ்டைல் ஒட்டுமொத்தமாக மாறியது என்றுதான் சொல்ல வேண்டும். முக்கியமாக ரஜினியின் மருமகன் என்ற அடையாளத்தைவிடவும் தனக்கென தனி அடையாளத்தை உருவாக்கினார். அதேபோல் அவரது நடை, உடை, பாவனை என அத்தனையும் மாறியது. அதற்கு முக்கிய காரணம் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்தான்.

Dhanush Throwback Interview About His Ex Wife Aishwarya Rajinikanth
Photo Credit:

தனுஷும் சூப்பர் துணை: தனுஷும் தன்னுடைய பங்குக்கு ஐஸ்வர்யாவுக்கு முழுக்க முழுக்க ஆதரவாக இருந்தார். அதனால்தான் ஐஸ்வர்யா முதன்முறையாக இயக்கிய 3 படத்தில் ஹீரோவாக நடித்தார். இரண்டாவதாக இயக்கிய வை ராஜா வை படத்திலும் கெஸ்ட் ரோல் ஏற்றிருந்தார். இப்படி சுமூகமாக போய்க்கொண்டிருந்த அவர்களது வாழ்க்கையில் சின்ன விரிசல் விழுந்து அது பெரிதாகி கடந்த வருடம் விவாகரத்தில் முடிந்தது.

மிருணாளுடன் டேட்டிங்?: ஐஸ்வர்யாவை பிரிந்த தனுஷ் இப்போதுவரை சிங்கிளாகத்தான் இருக்கிறார். ஆனால் கடந்த சில நாட்களாக ஒரு தகவல் ஓடிக்கொண்டிருக்கிறது. அதாவது அவரும் நடிகை மிருணாள் தாகூரும் டேட்டிங் செய்கிறார்கள் என்றும்; விரைவில் அதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடுவார்கள் என்றும் சொல்லப்படுகிறது. முக்கியமாக மிருணாளை சந்திக்க அடிக்கடி தனுஷ் செல்வதாகவும் அரசல் புரசலாக பேச்சுக்கள் எழுந்திருக்கின்றன.

தனுஷின் பேட்டி: இந்நிலையில் ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு தனுஷ் கொடுத்திருந்த பழைய பேட்டி ஒன்று ட்ரெண்டாகியிருக்கிறது. அந்தப் பேட்டியில் ஐஸ்வர்யா பற்றி பேசிய அவர், "ரஜினிகாந்த்தின் மகள் என்பதற்காக ஐஸ்வர்யாவை நான் காதலிக்கவில்லை. அவரை நான் அப்படியும் பார்க்கவில்லை. அவர் எளிமையாக இருந்தது எனக்கு பிடித்திருந்தது. அவரது அப்பா எளிமையானவர்தான். ஆனால் அவரை விட 100 மடங்கு எளிமையானவர் ஐஸ்வர்யா" என்று கூறியிருந்தார். இந்தப் பேட்டிதான் இப்போது அதிகம் ஷேர் செய்யப்பட்டுவருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X