உங்க தாத்தாதான் சூப்பர் ஸ்டார் அப்பா இல்ல.. மகனிடம் தனுஷ் இப்படியும் சொல்லிருக்காரே
சென்னை: ரஜினிகாந்த்தின் மூத்த மகள் ஐஸ்வர்யாவை தனுஷ் காதலித்து திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு யாத்ரா, லிங்கா என்ற இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். சூழல் இப்படி இருக்க தாங்கள் பிரிவதாக சில வருடங்களுக்கு முன்பு அறிவித்துவிட்டு சமீபத்தில் விவாகரத்தும் பெற்றுக்கொண்டனர் தனுஷும், ஐஸ்வர்யாவும். இந்த விவகாரம் கோலிவுட்டில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருப்பது என்பது குறிப்பிடத்தக்கது.
காதல் கொண்டேன் படத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியதற்காக தனுஷை பாராட்ட முதன்முதலில் சந்தித்தார் ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா. அப்போது அவர்களுக்குள் ஏற்பட்ட பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. அந்தக் காதலுக்கு முதலில் ரஜினி வீட்டில் சம்மதம் கிடைக்கவில்லை என்றும்; பிறகு மகளின் பிடிவாதத்தால் ரஜினியும், அவரது மனைவியும் ஒத்துக்கொண்டார்கள் என்றும் ஒரு தகவல் உண்டு. அதனையடுத்து கடந்த 2004ஆம் ஆண்டு இரண்டு பேருக்கும் திருமணம் நடந்தது.

காதலோடு வாழ்க்கை: இரண்டு பேரும் திருமணத்துக்கு பிறகு உச்சக்கட்ட காதலோடு தங்களது வாழ்க்கையை நகர்த்திக்கொண்டிருந்தார்கள். அவர்களுடைய காதலின் அடையாளமாக யாத்ரா, லிங்கா என்ற இரண்டு மகன்களும் பிறந்தார்கள். மேலும் ஐஸ்வர்யாவுக்குள் இருக்கும் இயக்குநர் ஆசையை புரிந்துகொண்டு அவர் இயக்கிய முதல் படமான 3 படத்தில் தனுஷ் ஹீரோவாக நடித்தார். அடுத்ததாக இயக்கிய வை ராஜா வை படத்தில் கெஸ்ட் ரோலிலும் நடித்துக்கொடுத்தார் தனுஷ்.
பிரிந்த ஜோடி: பல வருடங்கள் ஒன்றாக வாழ்ந்துவந்த அவர்கள் சில வருடங்களுக்கு முன்பு பிரிவதாக அறிவித்தார்கள். இருந்தாலும் நீதிமன்றத்தில் விவாகரத்து மனு தாக்கல் செய்யாமல் இருந்தார்கள். இதன் காரணமாக அவர்களை எப்படியாவது சேர்த்து வைத்துவிடலாம் என்று குடும்பத்தினரும் எவ்வளவோ முயன்று பார்த்தார்கள். மேலும் டைவர்ஸ் அப்ளை செய்யாததன் காரணமாக தனுஷும், ஐஸ்வர்யாவும் கட்டாயம் மீண்டும் சேர்ந்துவிடுவார்கள் என்று ரசிகர்களும் நம்பிக்கொண்டிருந்தனர்.
விவாகரத்து: ஆனால் யாரும் எதிர்பார்க்காத வகையில் சில மாதங்களுக்கு முன்பு அவர்கள் சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து மனுத்தாக்கல் செய்தார்கல். அப்போதுகூட முதல் இரண்டு விசாரணைகளுக்கு அவர்கள் ஆஜராகவில்லை. ஆனால் மூன்றாவது விசாரணைக்கு ஆஜராகி விவாகரத்துக்கு தாங்கள் பரிபூரண சம்மதம் கொடுப்பதாக கூறி விவாகரத்தையும் பெற்றுக்கொண்டார்கள். இது தமிழ் திரையுலகில் உச்சக்கட்ட அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதுமட்டுமின்றி ரஜினிக்கு இந்த வயதில் இப்படி ஒரு மன உளைச்சலா என்று ரசிகர்களும் உச் கொட்டி வருகின்றனர்.
தனுஷ் பேட்டி: இந்நிலையில் தனுஷ் கொடுத்திருக்கும் பழைய பேட்டி ஒன்று ட்ரெண்டாகியிருக்கிறது. யாரடி நீ மோகினி பட சமயத்தில் நயன்தாராவுடன் அவர் தனியார் ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், "எனது மகன் காஸ்ட்லி பொருட்களை மட்டும்தான் உடைப்பேன் என்பதில் ரொம்பவே தெளிவாகவே இருக்கிறார். விலை குறைந்த பொருட்களை எல்லாம் அவர் தொட மறுக்கிறார். நான்கூட அவரிடம், 'டேய் உங்க தாத்தாதான் சூப்பர் ஸ்டார்.. உங்க அப்பா இல்லை'என்று சொல்வேன். அவர் கேட்பதாக இல்லை. எனது அம்மாவிடம் சென்று சொன்னால் அவரோ என்னிடம், நீயும் சின்ன வயதில் இப்படித்தானே இருந்த என்று சொல்லி வாயை அடைத்துவிடுகிறார்" என்றார்.


Click it and Unblock the Notifications











