உருவ கேலி செய்த சிவகார்த்திகேயன்.. மேடையில் வைத்து செய்த தனுஷ்.. ட்ரெண்டாகும் வீடியோ
சென்னை: சிவகார்த்திகேயன் கடைசியாக ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் அமரன் படத்தில் நடித்திருந்தார். அவருக்கு ஜோடியாக சாய் பல்லவி நடித்திருந்தார். பெரும் எதிர்பார்ப்போடு வெளியான அந்தப் படம் பெரும் வெற்றி பெற்றது. அடுத்ததாக ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில், வெங்கட் பிரபு இயக்கத்தில், சுதா கொங்கரா இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார். இந்தச் சூழலில் அவரது பழைய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளது.
சிவகார்த்திகேயன் சின்னத்திரையில் நடந்த ரியாலிட்டி ஷோ ஒன்றில் போட்டியாளராக கலந்துகொண்டு வெற்றி பெற்றார். அதற்கு அதே சேனலில் தொகுப்பாளராக வாய்ப்பு கிடைத்தது. அதனை பயன்படுத்திக்கொண்ட அவர் தனது தரமான கவுண்ட்டர்களாலும், கலகலப்பான பேச்சாலும் தமிழ்நாடு ரசிகர்களிடையே இடம் பிடித்தார். தொடர்ந்து அவரை துணை கதாபாத்திரத்தில் நடிக்க வைத்து தனுஷ் சினிமாவுக்குள் அழைத்து வர; ஹீரோவாக பாண்டிராஜ் மெரினா படத்தில் அறிமுகம் செய்தார்.

வரிசையான ஹிட்டுகள்: மெரினா ஓரளவு வரவேற்பை பெற்றாலும் சிவாவுக்கு வாய்ப்புகள் தொடர்ந்து கிடைத்தன. அதன்படி அவர் நடித்த மனம் கொத்தி பறவை உள்ளிட்ட படங்கள் நல்ல வரவேற்பை பெற; அவரது திரையுலக வாழ்க்கையை ரஜினிமுருகன், வருத்தப்படாத வாலிபர் சங்கம் ஆகிய படங்கள் ஒட்டுமொத்தமாக புரட்டி போட்டன. இரண்டு படங்களுமே அவருக்கு கமர்ஷியல் ரீதியாக மெகா ப்ளாக் பஸ்டர் படங்களாக மாறின. இதன் காரணமாக அனைவராலும் கவனிக்கப்பட்ட நடிகராக மாறினார் அவர்.
100 கோடி ரூபாய் க்ளப்: சூழல் இப்படி இருக்க நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் டாக்டர் படத்தில் நடித்தார் அவர். அந்தப் படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது. மேலும் நூறு கோடி ரூபாயை வசூலித்து கெத்து காண்பித்தது. அதனையடுத்து அவர் நடித்த டான் படமும் நூறு கோடி ரூபாய் அள்ளியது. தொடர்ந்து இரண்டு படங்கள் நூறு கோடி ரூபாய் க்ளப்பில் சேர்ந்துவிட்டதால் தமிழின் டாப் 10 நடிகர்களில் ஒருவராக இடம்பிடித்தார். அதற்கு பிறகு நடித்த மாவீரன், அயலான் ஆகிய திரைப்படங்களும் சூப்பர் ஹிட்டுகள்.
அமரன்: இப்படி அசுர வேகத்தில் வளர்ந்த சிவகார்த்திகேயனுக்கு அமரன் படம் அடுத்தக்கட்ட பாய்ச்சலை கொடுத்திருக்கிறது. விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் படம் செம ரெஸ்பான்ஸை பெற; வசூலில் 300 கோடி ரூபாய் க்ளப்பில் சேர்ந்துவிட்டது. இதனால் சிவகார்த்திகேயன் அடுத்த விஜய் என்றெல்லாம் அவரது ரசிகர்கள் சொல்ல ஆரம்பித்திருக்கிறார்கள். அடுத்ததாக ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்துவருகிறார். இது தவிர்த்து சிபி சக்கரவர்த்தி, வெங்கட் பிரபு, சுதா கொங்கரா ஆகியோரின் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார் அவர்.
ட்ரெண்டாகும் வீடியோ: இந்நிலையில் சிவகார்த்திகேயனின் பழைய வீடியோ ஒன்று ட்ரெண்டாகியுள்ளது. அதாவது அவர் சினிமாவுக்கு வந்த புதிதில் அவ்வப்போது ஆங்கரிங்கும் செய்தும்வந்தார். அந்தவகையில் தனுஷ், அனிருத் ஆகியோர் பங்கேற்ற நிகழ்ச்சி ஒன்றை அவர் தொகுத்து வழங்கினார். அந்நிகழ்ச்சியில் அனிருத்தின் உடலை கிண்டல் செய்யும் விதமாக, 'இதோ பாருங்க ப்பா நான் ஏதோ துணி காயப்போட்டிருக்காங்கனு நினைச்சிட்டேன்' என கூற; அருகில் இருந்த தனுஷோ, 'சிவா இது எனக்கும் பொருந்தும்' என்று கூறுகிறார். இதனை பார்த்த ரசிகர்கள் உருவ கேலி செய்த சிவகார்த்திகேயனை தனுஷ் வைத்து செஞ்சிட்டாரே என்று கமெண்ட்ஸ் செய்துவருகின்றனர்.
முன்னதாக சிவகார்த்திகேயனின் வளர்ச்சி தனுஷுக்கு பிடிக்கவில்லை என்றும்; இருவருக்கும் பேச்சுவார்த்தை இல்லை என்றும் ஒரு தகவல் ஓடியது. ஆனால் சில நாட்களுக்கு முன்பு இட்லி கடை படத்தின் தயாரிப்பாளர் திருமணத்தில் சிவாவும், தனுஷும் சந்தித்துக்கொண்டு சிரித்து பேசிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











