சிவகார்த்திகேயனுடன் சண்டையா?.. முற்றுப்புள்ளி வைத்த தனுஷ்.. செம சர்ப்ரைஸ்.. ஸ்பாட் விசிட்டாம்

சென்னை: தனுஷ் கைகளில் இப்போது ஏகப்பட்ட படங்கள் இருக்கின்றன. தற்போதைய தேதியில் கோலிவுட்டில் அதிக படங்களை கைகளில் வைத்திருக்கும் ஹீரோ என்றால் அவர் தனுஷ்தான். அந்த அளவுக்கு படங்கள் இருக்கின்றன. இதற்கிடையே இப்போது டாப் ஹீரோக்களில் ஒருவராக இருக்கும் சிவகார்த்திகேயனையும் சினிமாவுக்குள் அழைத்து வந்தவர் தனுஷ்தான். ஆனால் சமீப காலமாக அவர்களுக்குள் மனஸ்தாபம் ஏற்பட்டுவிட்டதாக தகவல்கள் தொடர்ந்து பரவிக்கொண்டிருக்கின்றன.

தனுஷின் நடிப்பில் கடைசியாக ராயன், கேப்டன் மில்லர் ஆகிய திரைப்படங்கள் வெளியாகின. அவற்றில் கேப்டன் மில்லருக்கு போட்டியாக சிவகார்த்திகேயனின் அயலான் திரைப்படமும் வெளியானது. இரண்டு படங்களில் எந்தப் படம் வெல்லும் என்ற எதிர்பார்ப்பு ஒட்டுமொத்த கோலிவுட்டிலும் இருந்த சூழலில்; அசால்ட்டாக பந்தயம் அடித்தது அயலான். இதனால் தனுஷின் ரசிகர்கள் கொஞ்சம் அப்செட்டிலேயே இருந்தார்கள். அந்த அப்செட்டை அதிகப்படுத்தும்படிதான் அமைந்தது ராயன் படத்தின் ரிசல்ட்டும். இத்தனைக்கு அது தனுஷுக்கு 50ஆவது படமாகும்.

தனுஷின் குபேரா: இப்போது அவர் சேகர் கம்முல்லா இயக்கத்தில் குபேரா படத்தில் நடித்து முடித்திருக்கிறார். ஏற்கனவே தெலுங்கில் தனது மார்க்கெட்டை வளர்ப்பதற்காக அவர் நடித்த வாத்தி படம் வாரிவிட்டது. எனவே குபேரா படமும் அந்த லிஸ்ட்டில் சேருமா இல்லை ஹிட் லிஸ்ட்டில் இணையுமா என்ற கேள்வி ரசிகர்களிடம் எழுந்திருக்கிறது. குபேராவில் தனுஷுடன் நாகார்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள்.

Dhanush Visited Sivakarthikeyan s Movie Shooting Spot

தனுஷின் லைன் அப்: கோலிவுட்டில் இப்போது அதிக படங்களை வைத்திருப்பது தனுஷ்தான். அடுத்ததாக அவர் ஹிந்தியில் தேரே இஷ்க் மெய்ன், ஹாலிவுட்டில் ஒரு படம், லப்பர் பந்து இயக்குநருடன் ஒரு படம், அமரன் இயக்குநருடன் ஒரு படம், போர்தொழில் இயக்குநருடன் ஒரு படம், இளையராஜாவின் பயோபிக், இட்லி கடை என பல படங்களை வைத்திருக்கிறார். இவற்றில் இட்லி கடை படத்தை அவரே இயக்கி நடிக்கவும் செய்கிறார். அப்படமானது முதலில் ஏப்ரல் பத்தாம் தேதி ரிலீஸாகவிருந்தது. ஆனால் சில காரணங்களால் அந்தப் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி போயிருக்கிறது.

நெருக்கமான தனுஷ், சிவகார்த்திகேயன்: இதற்கிடையே தற்போது டாப் ஹீரோக்களில் ஒருவராக இருக்கும் சிவகார்த்திகேயனை சினிமாவுக்குள் அழைத்து வந்தவர் என்றால் அவர் தனுஷ்தான். தான் நடித்த 3 படத்தில் சிறிய ரோல் கொடுத்தார். அதற்கு பிறகு அவரை வைத்து எதிர்நீச்சல் என்ற படத்தை தயாரித்தார். இப்படி சிவாவின் வளர்ச்சியில் தனுஷின் பங்கு அளப்பரியது. ஆனால் கடந்த சில காலங்களாக இருவருக்குள்ளும் பிரச்னை என்று பேசப்படுகிறது.கொட்டுக்காளி படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில்கூட சிவகார்த்திகேயன் பேசியது தனுஷை பற்றிதான் என்ற பேச்சும் எழுந்தது.

Dhanush Visited Sivakarthikeyan s Movie Shooting Spot

ஜீவா ரவி பேட்டி: இந்நிலையில் சிவகார்த்திகேயன் மற்றும் தனுஷ் குறித்து நடிகர் ஜீவா ரவி ஒரு பேட்டியில் பேசியிருக்கிறார். அவர் அளித்த அந்தப் பேட்டியில், "சிவகார்த்திகேயனுக்கு இருக்கும் திறமை மீது தனுஷுக்கு நிறைய மரியாதை உண்டு. 3 படத்தில் சிவகார்த்திகேயன் கண்டிப்பாக இருக்க வேண்டும் என தனுஷ் விடாப்பிடியாக இருந்தார். தனுஷ் மீதும் சிவகார்த்திகேயனுக்கு மிகப்பெரிய மரியாதையும் அன்பும் உண்டு. ஊர் ரெண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம் என்று சொல்வார்கள். ஆனால் இவர்கள் விஷயத்தில் கூத்தாடிகள் ரெண்டு பட்டால் ஊர் சந்தோஷப்படுகிறது. பத்து பேர் பத்து விதமாக சொல்லத்தான் செய்வார்கள்.

ஷூட்டிங் ஸ்பாட் வந்த தனுஷ்: கமல் ஹாசனையும், ரஜினியையும் எப்படி கே.பாலசந்தர் அறிமுகப்படுத்தியதற்கு பெருமைப்படுவாரோ அதேபோல் சிவாவை அறிமுகப்படுத்தியதை நினைத்து தனுஷ் பெருமைப்படுவார். ஒருமுறை சிவகார்த்திகேயனுடன் ஒரு படத்தில் நடித்துக்கொண்டிருந்தேன். அப்போது அந்த ஸ்பாட்டுக்கு தனுஷ் வந்திருந்தார். சிவா நடித்ததை பார்த்து அவரை வெகுவாக பாராட்டினார். அவர்கள் இரண்டு பேருக்குள்ளும் எந்தவிதமான சண்டையும் இல்லை" என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X