ஐஸ்வர்யா இருக்காங்களே.. வயித்தெரிச்சல கெளப்பாதிங்க.. எல்லாம் தண்டம்..தனுஷ் என்ன இப்படி சொல்லிட்டாரு?

சென்னை: தனுஷும் ஐஸ்வர்யாவும் கடந்த வருடம் சட்டப்பூர்வமாக விவாகரத்து பெற்றுவிட்டார்கள். அவர்களை எப்படியாவது சேர்த்து வைத்துவிட வேண்டுமென்று இரண்டு குடும்பத்தினரும் முயற்சி செய்தார்கள். ஆனால் அது நடக்கவில்லை. முக்கியமாக ஐஸ்வர்யாவின் திருமண வாழ்க்கை இத்தனை வருடங்கள் கழித்து இப்படி ஆகிவிட்டதே என்று ரஜினிகாந்த் மன உளைச்சலில் இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் இரண்டாவது திருமணம் நடக்குமா என்ற கேள்வியும் எழுந்திருக்கிறது.

ரஜினியின் மூத்த மகளான ஐஸ்வர்யாவும், தனுஷும் கடந்த 2004ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்துகொண்டார்கள். அவர்களுக்கு யாத்ரா, லிங்கா என்கிற இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். திருமணத்துக்கு பிறகு அவர்களது வாழ்க்கை சுமூகமாக போய்க்கொண்டிருந்த சூழலில் ஏதோ சில காரணங்களால் அவர்களுக்குள் மனஸ்தாபம் உருவாக ஆரம்பித்தது. அந்த மனஸ்தாபத்தை மேலும் வளர்க்கும் விதமாக விரும்பத்தகாத சில நிகழ்வுகளும் தொடர்ந்து நடந்துகொண்டே இருந்தன.

Throwback Stories Dhanush Aishwarya

என்ன நடந்தது?: அதாவது முதலில் தனுஷ் மீது குறை சொல்லப்பட்டது. அவர் மற்ற பெண்களுடன் நெருக்கமாக இருக்கிறார்; அதுதான் இந்த பிரிவுக்கு முதல் விதை என்று சொன்னார்கள். ஆனால் அதில் உண்மை இல்லை; தனுஷின் தந்தைக்கோ, தாய்க்கோ ரஜினியின் வீட்டில் சுத்தமாக மரியாதை கிடைப்பதில்லை; இது தனுஷை ரொம்பவே பாதித்துவிட்டது அதன் காரணமாக இரண்டு பேருக்கும் தொடர்ந்து சண்டை வர ஆரம்பித்ததாக இன்னொரு தரப்பினர் கூறியதும் கவனிக்கத்தக்கது.

மிகப்பெரிய பங்களா: முக்கியமாக போயஸ் கார்டனில் பல கோடி ரூபாய் மதிப்பில் தனுஷ் பங்களா கட்டியதற்கு காரணமே; உங்களுக்கு நாங்கள் ஒன்றும் குறைந்தவர்கள் இல்லை என்று ரஜினி தரப்புக்கு உணர்த்தத்தான் என்றும் பேச்சு எழுந்ததும் குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே தனுஷுக்கும், ஐஸ்வர்யாவுக்கும் ஈகோ எப்போதுமே இருந்திருக்கிறது என்றும் தகவல்கள் வெளியாகின. இப்படி ஏகப்பட்ட காரணங்களை யூகங்களாக திரைத்துறையில் இருப்பவர்கள் எப்போதும் சொல்வதுண்டு.

விவாகரத்து: தாங்கள் பிரிவதாக சில வருடங்களுக்கு முன்பு அவர்கள் அறிவித்தாலும் விவாகரத்து மனு தாக்கல் செய்யாமல்தான் இருந்தார்கள். எனவே அவர்களை எப்படியாவது சேர்த்து வைக்க குடும்பத்தினர் முயன்றார்கள். ஆனால் அது நடக்கவில்லை. கடந்த வருடம் இரண்டு பேரும் சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் சட்டப்பூர்வமாக விவாகரத்து பெற்றார்கள். இந்நிலையில் யாரடி நீ மோகினி படத்தின் சமயத்தில் தனுஷ் கொடுத்த பேட்டி ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியிருக்கிறது.

தனுஷின் பேட்டி: அவர் அளித்த அந்தப் பேட்டியில் அவரிடம் உங்கள் படங்களை உங்களது குழந்தைகள் கொண்டாடுவார்களா என்று கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், "ஏங்க வயித்தெரிச்சல கெளப்பாதிங்க. ஊர் முழுக்க எனக்கு கட் அவுட் இருக்கும். அதையெல்லாம் ஐஸ்வர்யா பார்த்துவிட்டு சாதாரணமாக கடந்து போய்டுவாங்க. ஆனால் அவங்க அப்பா போஸ்டர் ஏதோ ஒரு இடத்தில் இருந்தாலும் அதை பார்த்துவிட்டு, 'ஐயோ டாடி' என்று சந்தோஷமா சொல்வாங்க.

அப்போதெல்லாம் நான் அவங்களிடம் எனக்கும் குழந்தை பிறக்கும்; அப்போ உன்னை போலவே அதுவும் என்னை பார்த்து ஐயோ டாடி என்று செய்யும் என்பேன். ஆனால் எல்லாம் தண்டம். ரஜினி நடித்த சிவாஜி பட பாட்டு வந்தாதான் என் மகன் துள்ளி குதிக்கிறான். அந்த ஈர்க்குற விஷயம் எல்லாம் அதுவா வரணும்" என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X