என் குடும்பமே வேண்டாம் என்றுதான் சொன்னார்கள்.. யாருமே சப்போர்ட் செய்யவில்லை.. தனுஷ் ஓபன் டாக்
சென்னை: தனுஷ் நடிப்பில் கடைசியாக வெளியான ராயன், குபேரா ஆகிய இரண்டு திரைப்படங்களுமே சுமாரான வரவேற்பைதான் பெற்றது. இப்போது அவர் இட்லி கடை, தேரே இஷ்க் மெய்ன் ஆகிய படங்களில் நடித்திருக்கிறார். இவை தவிர்ஹ்ட்து மாரி செல்வராஜ் இயக்கத்தில் ஒருபடம், போர் தொழில் இயக்குநருடன் ஒரு படம் என பிஸியாக இருக்கிறார். இந்நிலையில் அவர் கொடுத்த பேட்டி ஒன்று ட்ரெண்டாகியிருகிறது.
நடிகர், இயக்குநர் பல முகங்களை கொண்டவர் தனுஷ். அவர் தனது 50ஆவது படமான ராயன் படத்தை தானே இயக்கி நடித்திருந்தார். பெரிய எதிர்பார்ப்போடு படம் வெளியானாலும் தோல்வியையும், ட்ரோலையும் சந்தித்தது. தொடர்ந்து தனது சகோதரி மகன் பவிஷை வைத்து நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் திரைப்படத்தை இயக்கினார். ஆனால் டிராகன் படத்துக்கு போட்டியாக களமிறங்கி மண்ணை கவ்வியது அந்தப் படம்.
குபேரா: இப்படிப்பட்ட சூழல்நிலையில்தான் சேகர் கம்முல்லா இயக்கத்தில் குபேரா படத்தில் நடித்தார் தனுஷ். இந்தப் படத்தின் மீதும் அவரும், அவரது ரசிகர்களும் அதீத எதிர்பார்ப்பை வைத்திருந்தார்கள். ஆனால் இப்படமோ தமிழ்நாட்டில் பெரிய வரவேற்பை பெறவில்லை. அதேசமயம் ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் நல்ல ரெஸ்பான்ஸை பெற்றது குறிப்பிடத்தக்கது. அங்கு விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் சக்கைப்போடு போட்டது படம்.
இட்லி கடை: இதற்கிடையே இட்லி கடை படத்தை இயக்கி நடித்திருக்கிறார். அவருக்கு ஜோடியாக நித்யா மேனன் நடிக்க; முக்கியமான் ரோலில் அருண் விஜய்யும் நடித்திருக்கிறார். இப்படம் முதலில் ஏப்ரல் மாதம் வெளியாவதாக இருந்தது. ஆனால் படக்குழு முடிவு செய்திருந்த தேதியில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. எனவே படத்தின் ரிலீஸ் தள்ளிப்போனது. அப்படம் விரைவில் வெளியாகவிருக்கிறது. சிங்கிளும் 27ஆம் தேதி ரிலீஸாகிறது.

ஹிந்தியில் தனுஷ்: ஹிந்தியை பொறுத்தவரை அவர் ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் தேரே இஷ்க் மெய்ன் என்ற படத்திலும் நடித்து முடித்திருக்கிறார். மேலும் மாரி செல்வராஜ், லப்பர் பந்து இயக்குநர் தமிழரசன் பச்சைமுத்து, அமரன் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி, போர் தொழில் இயக்குநர் உள்ளிட்டோரின் இயக்கத்திலும் நடிக்கவிருக்கிறார் அவர். அவர் கமிட்டாகியிருக்கும் இயக்குநர்கள் எல்லோருமே மெகா ஹிட்டுகளை கொடுத்தவர்கள் என்பதால் அடுத்தடுத்த படங்கள் மீது அதீத நம்பிக்கையை ரசிகர்கள் வைத்திருக்கிறார்கள்.
தனுஷின் பேட்டி: இந்நிலையில் தனுஷ் கொடுத்த பேட்டி ஒன்று ட்ரெண்டாகியிருக்கிறது. அவர் சில வருடங்களுக்கு முன்பு அளித்த பேட்டியில், "பொல்லாதவன் படத்தின் கதையை பல தயாரிப்பாளர்கள் நிராகரித்தார்கள். எனக்கு கதை பிடித்திருந்தாலும் என்னுடன் இருப்பவர்களும் சரி; எனது குடும்பத்தை சேர்ந்தவர்களும் சரி; பொல்லாதவன் படத்தை செய்ய வேண்டாம் என்றுதான் சொன்னார்கள். யாருமே அப்படத்துக்கு சப்போர்ட் செய்யவில்லை.
நம்பிக்கை இருந்தது: இருந்தாலும் படத்தில் எனக்கு நம்பிக்கை இருந்தது. வெற்றிமாறனிடம், 'யாருமே இந்தப் படத்தில் என்னை நடிக்குமாறு சொல்லவில்லை. எல்லோருமே நடிக்க வேண்டாம் என்றுதான் சொல்கிறார்கள். இப்படம் வெற்றி பெற்றால் நாம் கெத்தாக இருக்கலாம். ஒருவேளை தோற்றுவிட்டால் அப்போவே சொன்னேன்ல என்று சொல்வார்கள். இருந்தாலும் இந்தப் படத்தின் நம்பிக்கை இருக்கிறது என கூறினேன்" என்றார்.


Click it and Unblock the Notifications











