ரஜினிலாம் எனக்கு பொண்ணு கொடுக்கல.. ஐஸ்வர்யா பற்றி தனுஷ் ஓபனாக இப்படி சொல்லிட்டாரே!
சென்னை: கஸ்தூரி ராஜாவின் மகன் என்ற அடையாளத்தோடு சினிமாவுக்குள் அறிமுகமான தனுஷ் தற்போது தனக்கென தனி அடையாளத்தை பெற்றிருக்கிறார். அதற்கு முழு காரணமும் அவர் மட்டும்தான். காதல் கொண்டேன் படத்தில் நடித்ததற்காக தனுஷை பாராட்டினார் ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா. அப்போது இரண்டு பேருக்கும் ஏற்பட்ட பழக்கம் காதலாகி திருமணத்தில் முடிந்தது. ஆனால் இரண்டு பேரும் கடந்த வருடம் சட்டப்பூர்வமாக விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டார்கள்.
இயக்குநர் கஸ்தூரி ராஜாவின் மகனான தனுஷ் துள்ளுவதோ இளமை படத்தில் நடிக்க ஆரம்பித்தார். அந்தப் படத்தை முதலில் கஸ்தூரி ராஜா இயக்க பாதியிலிருந்து செல்வராகவன் இயக்கினார். படம் பெரிதாக போகாவிட்டாலும் யுவனின் இசை அந்தப் படத்துக்கு வெளிச்சம் பாய்ச்சியது. அந்தப் படத்துக்கு பிறகு காதல் கொண்டேன் படத்தில் நடித்தார் தனுஷ். அப்படம்தான் அவருக்கும், செல்வராகவனுக்கும் பெரிய அடையாளத்தை பெற்றுக்கொடுத்தது. தனுஷ் நல்ல நடிகர் என்ற பெயரையும் வாங்கினார்.

முன்னணி ஹீரோ: அதனையடுத்து வரிசையாக படங்களில் நடித்து ஹிட் கொடுத்தார் தனுஷ். ஒருகட்டத்தில் தமிழ் மட்டுமின்றி பாலிவுட், ஹாலிவுட் என வளர்ந்த அவர் ஆடுகளம், அசுரன் ஆகிய படங்களுக்காக தேசிய விருதினையும் வென்றார். அதுமட்டுமின்றி இந்திய அளவில் மிகச்சிறந்த நடிகர் என்ற பெயரையும் அவர் பெற்றிருக்கிறார். கடைசியாக அவரது நடிப்பில் ராயன் வெளியானது. அடுத்ததாக குபேரா, இட்லி கடை ஆகிய படங்கள் வெளியாகவிருக்கின்றன. இவை தவிர்த்து டஜன் கணக்கில் தனது கைகளில் படத்தை வைத்திருக்கிறார் அவர்.
திருமணம்: இதற்கிடையே காதல் கொண்டேன் படத்தில் நன்றாக நடித்ததற்காக ரஜினியின் மூத்த மகள் தனுஷை பாராட்டி பொக்கே வழங்கினார். அப்போது இரண்டு பேருக்கும் ஏற்பட்ட பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. முதலில் இந்தக் காதலுக்கு ரஜினியின் வீட்டில் கடுமையான எதிர்ப்பு வந்ததாக கூறப்படுவதுண்டு. ஆனால் ஐஸ்வர்யா தொடர்ந்து பிடிவாதமாக இருந்ததால் இந்தத் திருமணத்துக்கு ரஜினிகாந்த்தும் அவரது மனைவி லதாவும் ஒத்துக்கொண்டார்கள் என்றும் சொல்லப்படுவதுண்டு.
சூப்பர் ஜோடி: அதனையடுத்து கடந்த 2004ஆம் ஆண்டு தனுஷுக்கும் ஐஸ்வர்யாவுக்கும் திருமணம் நடைபெற்றது. திருமணத்துக்கு பிறகு இரண்டு பேரும் உச்சபட்ச காதலோடு தங்களது வாழ்க்கையை நகர்த்திவந்தார்கள். அவர்களுக்கு யாத்ரா, லிங்கா என்ற இரண்டு மகன்களும் இருக்கிறார்கள். தனுஷை வைத்து ஐஸ்வர்யா 3 என்ற படத்தை இயக்கி இயகுநராக அறிமுகமானார். அடுத்ததாக அவர் இயக்கிய வை ராஜா வை படத்திலும் தனுஷ் கெஸ்ட் ரோலில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
விவாகரத்து: இப்படி இருவரும் ஒருவருக்கொருவர் அனுசரனையோடு சென்றுகொண்டிருந்த சூழலில் சில வருடங்களுக்கு முன்பு அவர்கள் தங்களது சமூக வலைதள பக்கத்தில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்கள். அதில், தாங்கள் இருவரும் பிரிந்து வெவ்வேறு வழிகளில் தனித்தனியாக பயணப்பட முடிவெடுத்திருக்கிறோம் என்று கூறினார்கள். இருப்பினும் அவர்கள் இரண்டு பேருமே விவாகரத்து கோரி நீதிமன்றத்தை நாடாமல் இருந்தார்கள். எனவே கண்டிப்பாக சேர்வார்கள் என்று ரசிகர்கள் கருதினார்கள்.
தனுஷின் பேட்டி: ஆனால் கடந்த வருடம் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்து சட்டப்பூர்வமாக விவாகரத்து பெற்றுவிட்டார்கள். இந்நிலையில் தனுஷ் கொடுத்த பழைய பேட்டி ஒன்று சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியிருக்கிறது. அதாவது 3 பட சமயத்தில் தனுஷையும், ஐஸ்வர்யாவையும் சிவகார்த்திகேயன் பேட்டி எடுத்தார். அப்போது தனுஷிடம் சிவா, 'காதல் கொண்டேன் படத்தை பார்த்துவிட்டு ரஜினி உங்களை அழைத்து கை கொடுத்தார். பிறகு அவருடைய மகளை கட்டிக்கொடுத்தார்' என்று கூறினார். அதற்கு தனுஷோ, 'அந்தப் படத்தை பார்த்துவிட்டு எனது நடிப்பை ரஜினி சார் பாராட்டியது உண்மைதான். ஆனால் பொண்ணு அதுவாவே நம்மிடம் விழுந்துவிட்டது' என்றார். இந்தப் பேட்டிதான் தற்போது திடீரென சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியிருக்கிறது.


Click it and Unblock the Notifications











