பாரதிராஜாவின் இந்த கதை தெரியுமா? ஜெயகாந்தனையே ஒருமையில் விமர்சித்திருக்காரே
சென்னை: தமிழ் திரையுலகை மொத்தமாக வருத்ததில் ஆழ்த்தி உள்ளது இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் மறைவு. கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் அவரது மகன் மனோஜ் பாரதிராஜாவின் மறைவில் இருந்து மீளா துயரில் இருந்த பாரதிராஜா, வயது மூப்பு, உடல்நலக் கோளாறு என பலவும் அவரை வாட்டி எடுக்க, ஜூன் 10ஆம் தேதி மறைந்தார். அவருக்கு வயது 84 . அவரது மறைவுக்கு பிரபலங்கள், ரசிகர்கள், திரை உலகினர் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.
இப்படி இருக்கையில், அவரது திரை வாழ்க்கை குறித்த தகவல்கள் குறித்து தெரிந்து கொள்ள ரசிகர்கள் பலரும் ஆர்வம் காட்டி வருகிறார்கள். அப்படி இருக்கையில் அவரது திரை வாழ்க்கையின் ஆரம்ப காலகட்டத்தில், மறைந்த தமிழ் எழுத்தாளர் ஜெயகாந்தனை சந்தித்து பேசிய போது ஏற்பட்ட மன கஷ்டம் மற்றும் ஏமாற்றத்தால் ஜெயகாந்தனை ஒருமையில் விமர்சித்துள்ளார்.
ஆமாம், பாரதிராஜா தமிழ் திரையுலகில் காலடி எடுத்து வைக்க போராடிக் கொண்டிருந்த காலகட்டம் அது. நடிகராக மாற வேண்டும் என்ற எண்ணத்தில் தனது வீட்டை விட்டு வெளியேறி சென்னைக்கு வந்திருந்தாலும், அதன் பின்னர் தனக்கான வாய்ப்பை உருவாக்கிக் கொள்ள, இயக்குநர் அவதாரம் எடுத்தார். இயக்குநர் இமயம் பாரதிராஜா, இசைஞானி இளையராஜா உள்ளிட்டோர் சினிமாவில் ஒரு சேர வாய்ப்பு தேடிக் கொண்டு இருந்தனர்.

ஜெயகாந்தன்: அப்போது எழுத்தாளர் ஜெயகாந்தனைச் சந்தித்து தங்களுக்காக சினிமாவில் யாரிடமாவது சிபாரிசு செய்யச் சொல்லி கேட்கலாம் என்று அவரது வீட்டிற்கே சென்றுள்ளனர். அங்கு சென்றவர்கள், சினிமாவில் வாய்ப்பு தேடி நாங்கள் உங்களை நம்பி வந்திருக்கிறோம் என்று கூறி உள்ளனர். இதைக் கேட்ட எழுத்தாளர் ஜெயகாந்தனோ, " என்னுடைய அனுமதி இல்லாமல், யாரைக் கேட்டு நீங்கள் என்னை நம்பி வந்தீர்கள்? நீங்கள் முதலில் உங்களை நம்ப வேண்டும் என்று காட்டமாக பேசி உள்ளார். ஜெயகாந்தனிடம் இருந்து இப்படி ஒரு பதில் வரும் என்று எதிர்பார்க்காத பாரதிராஜா, இளையராஜா உள்ளிட்டவர்களுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்தது.
ஒருமையில் விமர்சித்த பாரதிராஜா: ஜெயகாந்தன் வீட்டில் கொடுத்த காபியை குடித்தும் குடிக்காமலும் உடனே அங்கிருந்து வெளியேறி உள்ளனர். அங்கிருந்து வந்த கொஞ்ச தொலைவிலேயே, ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்து, " என்னய்யா இந்தாளு (ஜெயகாந்தன்) மேடையில் பேசும்போது மட்டும் பாட்டாளி வர்க்கம், ஏகாதிபத்திய எதிர்ப்பு, வர்க்கப் போராட்டம் என்று எல்லாம் பேசுகிறான், இங்கு என்னடா என்றால் ஆறுதலாக கூட ஒரு வார்த்தை சொல்ல மாட்டேங்குறான் என்று திட்டி உள்ளார்.

அதட்டிச் சொன்ன இளையராஜா: இதையெல்லாம் கேட்டு சிரித்துக் கொண்டிருந்த இளையராஜாவோ, என்னதான் இருந்தாலும் அவர் சொன்னதில் மிகவும் முக்கியமான விஷயம் உள்ளது. அவர் உங்களை நம்புங்கள் என்று சொல்லி உள்ளார். சொன்னது யாரோ கிடையாது, அது ஜெயகாந்தன் என்று அதட்டிக் கூறியதாக இசைஞானி இளையராஜா நிகழ்ச்சி ஒன்றில் பகிர்ந்து கொண்டார். பாராதிராஜாவின் மறைந்த நிலையில் அவர் குறித்த சுவாரஸ்யமான தகவல்களில் இந்த சம்பவம் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.


Click it and Unblock the Notifications