சீரியல் இயக்கிய சியான் விக்ரம்.. அட இது வேற நடந்திருக்கா?.. என்ன தொடர் தெரியுமா?

சென்னை: கோலிவுட்டின் திறமையான நடிகர்களில் ஒருவரான விக்ரம்; இன்னும் அவருக்கான உயரத்தை தொடாமல் இருக்கிறார். தேசிய விருதெல்லாம் வாங்கியிருக்கிறார்தான். ஆனாலும் சமீப காலமாக அவரது படங்கள் வணிக ரீதியாக பெரிய வெற்றியை பெறவில்லை. பெரிதும் எதிர்பார்த்த தங்கலான், வீர தீர சூரன் படங்கள் எல்லாம் சுமாரான வரவேற்பையே பெற்றன. அடுத்ததாக அவர் போடி ராஜ்குமார், பிரேம்குமார், ஆனந்த் சங்கர் ஆகியோரின் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார்.

தமிழ் சினிமாவில் தவிர்க்கவே முடியாத ஹீரோக்களில் ஒருவர் விக்ரம். அவரது நடிப்பில் கடைசியாக வீர தீர சூரன், தங்கலான் ஆகிய படங்கள் வந்தன. தங்கலான் படம் ரசிகர்களுக்கு அவ்வளவு எளிதாக புரியவில்லை. அதன் காரணமாக தோல்வியை சந்தித்தது. அடுத்ததாக வந்த வீர தீர சூரன் முழுக்க முழுக்க கமர்ஷியல் படமாக அமைந்திருந்தாலும் சுமாரான வரவேற்பையே பெற்றது. இந்தப் படத்தின் மீது விக்ரம் ரசிகர்கள் மட்டுமின்றி விக்ரமே பெரிய நம்பிக்கையை வைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Did You Know Vikram Directed a Serial Unknown Throwback Surfaces Amid Film Struggles
Photo Credit:

அடுத்த படங்கள்: அடுத்ததாக அவர் போடி ராஜ்குமார், பஆனந்த் சங்கர் ஆகியோரின் இயக்கத்தில் தலா ஒரு படத்தில் நடிக்கிறார். அதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில்தான் வந்தது. இந்த இயக்குநர்களில் போடி ராஜ்குமார் மட்டும் புதுமுகம். அவர் மீது அதீத நம்பிக்கை வைத்து இயக்கத்தில் நடிக்க சியான் கமிட்டாகியிருக்கிறாராம். அதேபோல் பிரேம்குமார் இயக்கத்திலும் ஒரு படத்தில் நடிக்க கமிட்டானார். மனிதர்களின் மென் உணர்வுகளை பேசும் படைப்பாளி பிரேம்குமார். எனவே அவருடன் விக்ரம் சேர்ந்திருப்பதாக வந்த தகவல் அனைவருக்கும் ஆச்சரியத்தையும், மகிழ்ச்சியையும் கொடுத்தது.

கைவிடப்பட்ட படங்கள்?: ஆனால் அந்த அறிவிப்பு சில வாரங்களிலேயே படம் கைவிடப்பட்டதாகவும் தகவல்கள் வந்தன. ஆனால் அதுகுறித்து அதிகாரப்பூர்வமாக இதுவரை அறிவிப்பு வரவில்லை. அதேபோல் மடோன் அஷ்வின் இயக்கத்திலும் அவர் நடிப்பதாக இருந்த படமும் ட்ராப் ஆகிவிட்டதாம். இப்படி இரண்டு மிகச்சிறந்த படைப்பாளர்கள் இயக்கத்தில் நடிக்காமல் மிஸ் ஆனது விக்ரம் ரசிகர்களுக்கு பெரிய வருத்தத்தை கொடுத்தது. இப்படியே போய்க்கொண்டிருந்தால் என்ன ஆகுமோ எனவும் அவர்கள் புலம்ப ஆரம்பித்திருக்கிறார்கள்.

பல திறமைகள்: விக்ரமுக்கு நடிப்பு மட்டுமின்றி பாடுவதிலும் அதீத திறமை இருக்கிறது. கந்தசாமி உள்ளிட்ட படங்களில் பாடல்களை பாடியிருக்கிறார். மேலும் தன்னுடைய சில படங்களில் கதை, திரைக்கதை ஏரியாவிலும் அவ்வப்போது கொஞ்சம் வேலை செய்வார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அவர் இயக்கிய சீரியல் பற்றி உங்களுக்கு தெரியுமா?. அதாவது 90களிலிருந்தே விக்ரம் திரைத்துறையில் இருக்கிறார். சின்னத்திரையிலும் பணியாற்றியிருக்கிறார். அப்படி அவர் பணியாற்றிய சீரியல்தான் தூர்தர்ஷனில் ஒளிபரப்பான சின்ன சின்ன ஆசை என்ற சீரியல்.

Did You Know Vikram Directed a Serial Unknown Throwback Surfaces Amid Film Struggles
Photo Credit:

இயக்குநர் விக்ரம்: அந்த சீரியலில் அப்போதே எபிசோடுகளை பலர் இயக்கினார்கள். நடிகை குஷ்பூகூட அந்த சீரியலின் சில எபிசோடுகளை இயக்கியிருக்கிறார். அதேபோல் நடிகர் விக்ரமும் அந்த சீரியலில் நடித்தார். அந்த சமயத்தில் சீரியலின் இரண்டு எபிசோடுகளை அவர் இயக்கியிருந்தார். அதனையடுத்து என்ன காரணமோ தெரியவில்லை அவர் இயக்கத்தில் கவனம் செலுத்தவில்லை. நடிப்பில் பிஸியாகிவிட்டதால் அந்த ஏரியா பக்கம் சியான் செல்லவில்லை என்று தெரிகிறது. இந்தத் தகவலை இயக்குநர் மீரா மகதி என்பவர் தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X