Ajith - விஷால் குடும்பத்துக்காக அஜித்தை தூக்கி எறிந்த விஜய் பட இயக்குநர்.. முழு விவரம் உள்ளே

சென்னை: Ajith (அஜித்) விஷால் அண்ணனை அறிமுகப்படுத்த வேண்டும் என்பதற்காக அஜித்தை வைத்து இயக்க வேண்டாம் என்ற முடிவை இயக்குநர் வெங்கடேஷ் எடுத்த சம்பவம் தெரியவந்திருக்கிறது.

இயக்குநர் பவித்ரனிடம் உதவி இயக்குநராக இருந்தவர் வெங்கடேஷ். இவர் உதவி இயக்குநராக இருந்தபோது ஷங்கரும் பவித்ரனிடம் உதவி இயக்குநராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதன் பிறகு ஷங்கருக்கு ஜென்டில்மேன் படம் இயக்குவதற்கான வாய்ப்பு கிடைத்தபோது அந்தப் படத்தில் வெங்கடேஷ் இணை இயக்குநராக சேர்ந்தார். தொடர்ந்து ஷங்கர் இயக்கிய படங்களில் இணை இயக்குநராக பணியாற்றினார்.

Director A.venkatesh Reject tha ajith from Pooparikka varugirom Movie

இயக்குநராக அறிமுகம்: இதனையடுத்து சரத்குமாரை வைத்து மகா பிரபு என்ற படத்தை இயக்கி இயக்குநராக அறிமுகமானார் வெங்கடேஷ். முதல் படம் டீசண்ட்டான வரவேற்பை பெற அடுத்தடுத்து படங்களை இயக்கும் வாய்ப்பை பெற்றார் வெங்கடேஷ். அதன்படி இரண்டாவது படமாக விஜய்யை வைத்து செல்வார் என்ற படத்தை இயக்கினார். இரண்டாவது படமும் ஹிட்டாக கவனிக்கப்படும் இயக்குநராக மாறினார்.

நிலாவே வா: செல்வா படத்தின் வெற்றியால் வெங்கடேஷுடன் இரண்டாவது முறையாக இணைந்தார். அதன்படி நிலாவே வா படம் வெளியானது. கடந்த 1998ஆம் ஆண்டு வெளியான அப்படமும் டீசண்ட்டான வரவேற்பை பெற்றது.குறிப்பாக அந்தப் படத்தில் விஜய் ஓடும் பேருந்தில் ஜன்னல் வழியாக உள்ளே நுழையும் காட்சி இன்று பலரது ஃபேவரைட் என்பது குறிப்பிடத்தக்கது.

விஜய்யை மாற்றிய வெங்கடேஷ்: விஜய் இப்போது கமர்ஷியல் ஹீரோவாக நம்பர் 1 இடத்தில் இருக்கிறார். அதற்கான முதல் பாதை அமைத்துக்கொடுத்த படம் என பெரும்பாலும் திருமலை படத்தை சொல்வார்கள்.ஆனால் அதற்கும் முன்னதாகவே விஜய்யை மாஸ் ஹீரோவாக மாற்றிய படம் பகவதி. அந்தப் படத்தை இயக்கியவர் வெங்கடேஷ். படம் சரியாக போகாவிட்டாலும் விஜய்யின் கமர்ஷியல் நடிப்பும், ஆக்‌ஷனும் தளபதி ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்தது.

நடிகராக கலக்கிய வெங்கடேஷ்: தொடர்ந்து பூப்பறிக்க வருகிறோம், தம், சண்டமாருதம்,துரை, வாத்தியார் என ஏராளமான படங்களை இயக்கிய வெங்கடேஷ் அங்காடித்தெரு படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். அதில் அவரது நடிப்பு அனைவரையும் மிரள செய்தது. அதேபோல் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான அசுரன் படத்திலும் மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார் வெங்கடேஷ். இந்தச் சூழலில் விஷால் குடும்பத்துக்காக அஜித்தை இயக்கும் வாய்ப்பை வெங்கடேஷ் உதறிய சம்பவம் தெரியவந்திருக்கிறது.

என்ன நடந்தது?: அதாவது நிலாவே வா படத்தை எடுத்து முடித்த பிறகு வெங்கடேஷ் ஒரு கதையை எழுதியிருக்கிறார். அதில் ஒரு கேரக்டரில் விஜய்யையும், மற்றொரு கேரக்டரில் சிவாஜி கணேசனையும் நடிக்க வைத்தால் நன்றாக இருக்கும் என நினைத்திருக்கிறார். ஆனால் ஏற்கனவே விஜய்யும், சிவாஜியும் ஒன்ஸ்மோர் படத்தில் நடித்துவிட்டதால் மீண்டும் அதே கூட்டணியை வைத்து எடுத்தால் நன்றாக இருக்காது எனவும் எண்ணியிருக்கிறார்.

வந்த ஃபோன்: அப்படிப்பட்ட சூழலில் வெங்கடேஷின் முதல் படத்தை தயாரித்த ஜிகே ரெட்டி (விஷாலின் அப்பா) ஃபோன் செய்து என்னுடைய மகனை ஹீரோவாக அறிமுகம் செய்ய விரும்புகிறேன் என கூற; உடனடியாக நேரில் சென்று சந்தித்த வெங்கடேஷ் ஏற்கனவே எழுதி வைத்திருந்த கதையை சொல்லியிருக்கிறார். கதை ஜிகே ரெட்டிக்கு பிடித்துப்போக உடனடியாக ஆரம்பிக்கலாம் என சொல்லியிருக்கிறார்.

சிவாஜி வேண்டும்: உடனே இயக்குநர் இந்த கேரக்டரில் சிவாஜி நடித்தால் நன்றாக இருக்கும் என சொல்ல; ஜிகேவும் சரி அவரிடம் கதை சொல் என கூறி சிவாஜியை வைத்து அதிக படங்கள் இயக்கிய சி.வி.ராஜேந்திரன் மூலம் கதை சொல்ல ஏற்பாடு செய்திருக்கிறார். வெங்கடேஷும் சிவாஜியிடம் கதை சொல்ல அவருக்கு பிடித்து நடிக்க ஒத்துக்கொண்டார்.

அஜித் எண்ட்ரி: இந்தச் சூழலில் சி.வி.ராஜேந்திரனோ வெங்கடேஷை அழைத்து அந்த ஹீரோ கேரக்டரில் அஜித் நடித்தால் நன்றாக இருக்கும். அவரின் கால்ஷீட்டை நான் வாங்கி தருகிறேன். படத்தை நானே தயாரிக்கவும் செய்கிறேன் என சொல்லியிருக்கிறார். வெங்கடேஷுக்கோ ஒரே யோசனை. இதனையடுத்து அறைக்கு வந்து யோசித்துவிட்டு மீண்டும் ராஜேந்திரனை நேரில் சந்தித்திருக்கிறார்.

அஜித் வேண்டாம்: அப்போது, 'இல்ல சார் இது ஒத்துவராது. எனக்கு முதல் படம் கொடுத்த தயாரிப்பாளர் அவரது மகனை அறிமுகப்படுத்த ஆசைப்படுகிறார். சிவாஜி சாரும் படத்துக்குள் வந்ததும், அந்தக் குடும்பமே சந்தோஷமாக இருக்கிறது. இந்த நிலைமைல அவர் மகனுக்கு பதிலா அஜித்தை வைத்து படம் பண்ணினா நான் சந்தர்ப்பவாதியா மாறிடுவேன்' என கூறியிருக்கிறார்.

இதனை கேட்ட சி.வி.ராமநாதன் வெங்கடேஷின் குணத்தை ஏகத்துக்கும் புகழந்திருக்கிறார். அதனை அடுத்து விஷாலின் அண்ணான அஜய் மற்றும் சிவாஜி நடிப்பில் உருவாகியிருக்கி பூப்பறிக்க வருகிறோம் என்ற திரைப்படம். இந்தத் தகவலை பத்திரிகையாளர் செய்யாறு பாலு பகிர்ந்திருக்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X