Trisha - த்ரிஷாவுக்கு முதல் பட வாய்ப்பை அமீர் கொடுத்தது எப்படி தெரியுமா?.. முழு விவரம் உள்ளே

சென்னை: Trisha (த்ரிஷா) மௌனம் பேசியதே படத்தில் த்ரிஷாவை அமீர் எப்படி கமிட் செய்தார் என்பது குறித்து தெரியவந்திருக்கிறது.

திரையுலகில் பொதுவாக ஒரு நடிகை 5 வருடங்கள் பீக்கில் இருப்பதே பெரிய காரியம். ஆனால் த்ரிஷாவோ 22 வருடங்களாக ஹீரோயினாக பீக்கில் இருக்கிறார். மௌனம் பேசியதே படத்தின் மூலம் அறிமுகமான அவர் கடைசியாக லியோ படம்வரை நடித்திருக்கிறார். இதில் ஆச்சரியம் என்னவென்றால் ஒவ்வொரு படத்திலும் தனது நடிப்பையும், அழகையும் கூட்டிக்கொண்டே செல்வதுதான்.

Director Ameer Talked about How he Selected Trisha for his first film

தொடர் வாய்ப்புகள்: த்ரிஷா அறிமுகமான மௌனம் பேசியதே படம் வெற்றி பெற்றது.அ தனையடுத்து அவருக்கு பட வாய்ப்புகள் குவிந்தன. தமிழில் விஜய், அஜித், சூர்யா, விக்ரம் போன்ற முன்னணி ஹீரோக்களுடன் நடித்து உச்சத்தில் இருந்தார். ஒருபக்கம் கமர்ஷியல் படங்களில் நடித்து கவனம் ஈர்த்தவர் மறுபக்கம் அபியும் நானும் என்ற மிகச்சிறந்த படத்தில் நடித்து தன்னுடைய திறமையை காண்பித்தார்.

இப்படி உச்சத்தில் இருந்த த்ரிஷாவுக்கு சில வருடங்களுக்கு முன்பு வாய்ப்புகள் குறைய ஆரம்பித்தன. ஆனாலும் தொடர்ந்து நடித்துக்கொண்டிருந்த அவர் 96 படத்தின் மூலம் தரமான கம்பேக் கொடுத்தார். விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் அவர் ஏற்றிருந்த ஜெஸ்ஸி கதாபாத்திரம் எப்படி ரசிகர்களை கட்டிப்போட்டதோ அதேபோல் 96 ஜானு கதாபாத்திரமும் அனைவரையும் கவர்ந்தது.

குந்தவை: 96 வெற்றிக்கு பிறகு மீண்டும் லைம் லைட்டுக்கு வந்த த்ரிஷா பொன்னியின் செல்வன் படத்தில் குந்தவை கதாபாத்திரத்தில் நடித்தார். அதனையடுத்து விஜய்யுடன் லியோ படத்தில் நடித்திருந்த அவர் இப்போது அஜித்துடன் விடாமுயற்சி படத்திலும் நடித்துவருகிறார் என்று கூறப்படுகிறது. அதேபோல் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதையிலும் அவர் நடித்துவருகிறார். இவை தவிர மணிரத்னம் இயக்கத்தில் கமல் நடிக்கும் தக் லைஃப் படத்திலும் கமிட்டாகியிருக்கிறார்.

எப்படி வாய்ப்பு?: இந்த சூழலில் த்ரிஷாவுக்கு மௌனம் பேசியதே படத்தில் ஹீரோயினாகும் வாய்ப்பு எப்படி கிடைத்தது என்பது குறித்து தெரியவந்திருக்கிறது. அதாவது த்ரிஷா மிஸ் சென்னை பட்டம் வென்றவர். மாடலிங்கில் நுழைந்தாலும் சினிமா மீது பெரிய ஆர்வம் இல்லாமலேயே அவர் இருந்திருக்கிறார். நிலைமை இப்படி இருக்க அமீர் தன்னுடைய முதல் படமாக மௌனம் பேசியதே படத்தை தொடங்கியிருக்கிறார்.

அப்போது புதிய ஹீரோயின் யாரையாவது நடிக்க வைத்தால் நன்றாக இருக்கும் என யோசித்த அமீருக்கு யாருமே சிக்கவில்லையாம். அமீர் எப்போதும் புத்தகங்கள் படிப்பதை வழக்கமாக வைத்திருப்பவ. அப்படி ஒரு புத்தகத்தை படித்துக்கொண்டிருந்தபோது அதில் த்ரிஷாவின் புகைப்படம் இருந்திருக்கிறது. அதனை பார்த்த அமீர் இந்தப் பொண்ணு கரெக்ட்டா இருக்கும் என எண்ணி தேடி பிடித்து த்ரிஷாவிடம் பேசி சம்மதம் வாங்கிவிட்டாராம்.

அதேசமயம் த்ரிஷா ஏற்கனவே ப்ரியதர்ஷன் இயக்கிய லேசா லேசா படத்தில் கமிட்டாகிவிட்டார். ஆனால் அது அமீருக்கு தெரியாதாம். ஏனெனில் அமீர் த்ரிஷாவை கமிட் செய்யும்போது லேசா லேசா ஏதோ பிரச்னையில் இருந்ததாம். எனவே மௌனம் பேசியதே ரிலீஸாகிவிட்டதால் த்ரிஷாவுக்கு அதுதான் முதல் படமாக கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X