Suriya - சூர்யாவுக்கும் சிவக்குமாருக்கும் வீட்டில் உச்சக்கட்டமான சண்டை.. எல்லாத்துக்கும் அதுதான் காரணம்
சென்னை: Suriya (சூர்யா) நடிகர் சூர்யாவுக்கும் அவரது தந்தை சிவக்குமாருக்கும் இடையே சண்டை முற்றிபோனதாம்.
அமீர் இயக்கத்தில் வெளியான பருத்திவீரன் படத்தை வைத்து அந்தப் படம் ரிலீஸானபோதே பிரச்னை ஏற்பட்டது. நான் பணம் போட்டேன் என ஸ்டூடியோ க்ரீன் ஞானவேல் ராஜா கூற; இல்லை முக்கால்வாசி பணத்தை படத்துக்காக நான் போட்டேன். அவர்கள் எனக்கு ஒரு கோடி ரூபாய் தர வேண்டும் என அமீர் நீதிமன்றத்துக்கு சென்றார்.
மீண்டும் பஞ்சாயத்து: அந்த வழக்கு நீதிமன்றத்தில் நடந்துவருகிறது. சூழல் இப்படி இருக்க கார்த்தி 25 நிகழ்ச்சியில் கலந்துகொள்ள தனக்கு அழைப்பு வரவில்லை அதனால் செல்லவில்லை என்று கூறினார் அமீர். அதனையடுத்து பேட்டியளித்த ஞானவேல் ராஜாவோ, அமீருக்கு வேலை தெரியாது. அவரால் யாருக்கும் எந்த பிரயோஜனமும் இல்லை. மார்க்கெட்டில் ஓடாத குதிரை அவர் என தரம் தாழ்ந்து பேசினார். மேலும் எனது காசில்தான் வேலை கற்றுக்கொண்டார். அவர் ஒரு திருடன் என்றும் பேசியிருந்தார்.

பதிலடி: அவரது இந்தப் பேச்சுக்கு அமீர் தரமான பதிலடியை கொடுத்தார். அதேபோல் பருத்திவீரனில் பணியாற்றிய சசிகுமார், சமுத்திரகனி, சினேகன், பொன்வண்ணன் உள்ளிட்டோரும், இயக்குநர்கள் கரு.பழனியப்பன், பாரதிராஜா, நந்தா பெரியசாமி ஆகியோரும் அமீருக்கு ஆதரவாக குரல் கொடுத்தனர். மேலும் ஞானவேலுவுக்கு பின் சிவக்குமார் குடும்பம் இருக்கிறதோ என்ற சந்தேகத்தையும் கரு.பழனியப்பன் எழுப்பினார்.
வருத்தம்: இதனையடுத்து ஞானவேல் ராஜா வருத்தம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டார். ஆனால் அதற்கு எதிராகவும் சசிகுமாரும், சமுத்திரகனியும் அறிக்கை வெளியிட்டனர். இதற்கிடையே பருத்திவீரன் படத்தை வாங்கிக்கொள்வதாக சூர்யா அமீர்டம் உறுதியளித்து குறிப்பிட்ட தொகையை கொடுத்து; பிறகு தனக்கு படம் வேண்டாம் பணத்தை திருப்பி கொடுங்கள் என்று கூறியதாகவும் தகவல் வெளியானது. இந்த சூழலில் அதுகுறித்த உண்மை நிலவரம் தெரியவந்திருக்கிறது.
என்ன நடந்தது?: அதாவது ஞானவேல் ராஜா பருத்திவீரன் மற்றும் சில்லுனு ஒரு காதல் ஆகிய இரண்டு படங்களையும் ஒரே நேரத்தில் ஆரம்பித்திருக்கிறார். அப்போது பருத்திவீரனுக்கு பணம் கொடுக்க முடியாமல் பாதியில் வெளியேறியிருக்கிறார். இதனையடுத்து அமீர் தனது நண்பர்கள், உறவினர்களிடம் பணத்தை வாங்கி ஷூட்டிங்கை முடித்துவிட்டார்.
அப்போது ஸ்டூடியோ க்ரீன் வழங்கும் பருத்திவீரன் என்று ஞானவேல் ராஜா விளம்பரம் கொடுத்திருக்கிறார். அதனை பார்த்து டென்ஷனான அமீர், கார்த்தியை தொடர்புகொண்டு, ஏன் ப்பா நீதான் கூட இருந்த. இப்போ என்ன அவர் படத்துக்கு உரிமை கொண்டாடுறார் என கேட்க; அப்பாட்ட பேசிட்டு சொல்றேன் அண்ணா என கார்த்தி ஃபோனை வைத்துவிட்டாராம். அதனையடுத்து சூர்யா ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்து படத்தை நானே வாங்கிக்கொள்கிறேன் என சொல்லி குறிப்பிட்ட தொகையை அமீரிடம் கொடுத்துவிட்டு போஸ்ட் புரொடக்ஷன் வேலைகளை தொடங்குங்கள் என்று சொல்லிவிட்டு சென்றாராம்.
இதற்கிடையே ஸ்டூடியோ க்ரீன் தயாரிப்பில் சில்லுனு ஒரு காதல் படம் வெளியாகி தோல்வியடைந்துவிட்டதாம். இதனால் சிவக்குமார் உச்சக்கட்ட டென்ஷன் ஆகிவிட்டாராம். ஏனெனில் ஸ்டூடியோ க்ரீனில் இருக்கும் பணம் அனைத்துமே சிவக்குமார் குடும்பத்தின் பணமாம். படம் தோல்வியடைந்து நஷ்டம் அடைந்ததை ஏற்றுக்கொள்ள முடியாத சிவக்குமார் சூர்யாவிடம், ஒரு நடிகனுக்கு கம்பெனி தேவையா என்று இதற்குதான் கேட்டேன். நம்பி பணம் போட்டது தப்பா போச்சு என்றாராம்.
இந்த சூழலில் அமீரிடம் வந்த சூர்யா, பருத்திவீரன் படத்தை நீங்களே வைத்துக்கொள்ளுங்கள் நான் கொடுத்த பணத்தை கொடுங்கள் என்று கேட்டாராம். ஆனால் அமீரோ, நீங்கள் கொடுத்த பணத்தில்தான் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் போய்க்கொண்டிருக்கின்றன. இப்போது படத்தை வைத்துக்கொண்டு பணத்தை கொடுங்கள் என்று கேட்டால் நான் பணத்துக்கு எங்கே போவது என்று அமீர் அதிர்ச்சியுடன் கேட்டாராம். இப்படித்தான் பருத்திவீரன் படத்தில் பிரச்னைகள் வளர்ந்தனவாம். இதனை அந்தப் படத்தில் இணை இயக்குநராக பணியாற்றிய ராஜா ஒரு பேட்டியில் பகிர்ந்துகொண்டார்.


Click it and Unblock the Notifications











