கொலை முயற்சியில் ஈடுபட்ட இயக்குநர் பாலா.. மிஸ் ஆன ஸ்கெட்ச்.. கடைசில இவர் வெட்டு வாங்கிட்டாரு

சென்னை: இயக்குநர் பாலாவின் இயக்கத்தில் இந்த வருடம் வணங்கான் திரைப்படம் வெளியானது. அருண் விஜய் ஹீரோவாக நடித்திருந்த அப்படம் பெரிய வெற்றியை பெறவில்லை. அதேசமயம் அருணின் நடிப்புக்கு பாராட்டுக்கள் கிடைத்தன. அடுத்ததாக பாலா யாரை வைத்து இயக்கப்போகிறார் என்ற கேள்வி எழுந்திருக்கும் சூழலில்; அவர் செய்த கொலை முயற்சி குறித்து இதில் பார்க்கலாம்.

தமிழ் சினிமாவின் தனித்துவமான இயக்குநர்களில் ஒருவர் பாலா. சேது, நந்தா, பிதாமகன், நான் கடவுள் என இவர் இயக்கிய படங்கள் கோலிவுட்டின் புதியவகை சினிமாக்கள் வருவதற்கு விதையாக இருந்தன. முக்கியமாக யாரும் பேச மறந்த அல்லது மறுத்த விளிம்பு நிலை மனிதர்களின் வாழ்வியலை தனது படங்களில் பேசியதன் மூலம்; சினிமாவில் இப்படிப்பட்ட மனிதர்களை பற்றியும் பேசலாம் என்பதை செய்து காட்டியவர் அவர்.

சறுக்கிய பாலா: அவர் திரைத்துறையில் பீக்கில் இருந்தபோது பாலாவின் இயக்கத்தில் எப்படியாவது நடித்துவிட வேண்டும் பல முன்னணி நடிகர்கள் ஆசை பட்டிருக்கிறார்கள். ஆனால் பாலாவோ தன்னுடைய கதை யாரை கேட்கிறதோ அவரை மட்டும்தான் கதாநாயகனாக வைத்து படம் எடுப்பார். யாருக்காகவும், எதற்காகவும் காம்ப்ரமைஸும் செய்துகொள்ளமாட்டார். அப்படிப்பட்ட பாலாவுக்கு இடையில் பெர்சனலாகவும், தொழில்ரீதியாகவும் சில சிக்கல்கள் எழுந்தன.

Director Bala s Shocking Murder Attempt Reveal What Really Happened Before His Film Career
Photo Credit:

என்ன சிக்கல்கள்?: பெர்சனல் வாழ்க்கையை பொறுத்தவரை அவரும், அவரது மனைவி மலரும் விவாகரத்து செய்து பிரிந்துவிட்டார்கள். தொழிலை பொறுத்தவரை விக்ரமின் மகன் துருவ் விக்ரமை வைத்து வர்மா என்ற படத்தை இயக்கினார். ஆனால் அவர் எடுத்த வெர்ஷன் திருப்தி இல்லாததால் அதை ரிலீஸ் செய்யாமல்; இன்னொரு இயக்குரை வைத்து அதே படத்தை மீண்டும் எடுத்து வெளியிட்டார்கள். இது அவருக்கு நேர்ந்த அவமரியாதையாகவே பலரும் பார்த்தார்கள். ஏனெனில் விக்ரமின் இந்த வளர்ச்சிக்கு பாதை போட்டுக்கொடுத்தது பாலாதான்.

கைவிட்ட சூர்யா; கலங்காத பாலா: அந்தப் பிரச்னையை முடித்துவிட்டு சூர்யாவை வைத்து வணங்கான் படத்தை ஆரம்பித்தார். சில நாட்கள் ஷூட்டிங்கிற்கு சென்ற சூர்யா; பாதியிலேயே வெளியேறினார். இரண்டு பேரும் பரஸ்பரமாக பேசியே பிரிந்தார்கள். இருந்தாலும் பெரிய விவாதமானது. இதையெல்லாம் கண்டு கலங்காத பாலா அதே படத்தில் அருண் விஜய்யை ஹீரோவாக நடிக்க வைத்தார். இந்த வருடம் ரிலீஸான அப்படம் சுமாரான வரவேற்பைதான் பெற்றது. அடுத்தது யாரை இயக்கப்போகிறார் என்பது இன்னும் தெரியவில்லை.

கொலை முயற்சி: பாலாவின் ரியல் வாழ்க்கையை பொறுத்தவரை அவர் ஏகப்பட்ட பிரச்னைகளை சந்தித்தவர். ஒரு மனிதன் எப்படியெல்லாம் வாழக்கூடாதோ அப்படியெல்லாம் வாழ்ந்தவன் நான் என்று அவரே சொல்லியிருக்கிறார். அப்படிப்பட்ட பாலா ஒரு கொலை முயற்சியையும் செய்திருக்கிறார். அதாவது, சினிமாவுக்கு வருவதற்கு முன்பு நண்பர்களுக்கு ஏதாவது ஒன்று என்றால் அடிதடியில் இறங்கும் பழக்கத்தை வைத்திருந்தார்.

பாலா வாங்கிய வெட்டு: அப்படி ஒருமுறை அவரது நண்பரின் காதல் விவகாரம் பெரிய பிரச்னையை ஏற்படுத்தியிருக்கிறது. இதனால் நண்பருடைய காதலியின் உறவினர் ஒருவரை வெட்டி கொல்வது என்று பாலாவும் அவரது நண்பர்களும் ஸ்கெட்ச் போட்டு அதற்காக சென்றும் இருக்கிறார்கள். ஆனால் கடைசி நேரத்தில் பயம் வந்து அவரது நண்பர்கள் எல்லாம் எஸ்கேப் ஆகிவிட்டார்கள். தன்னை வெட்ட வருகிறார்கள் என்று முன்கூட்டியே சம்பந்தப்பட்ட நபருக்கும் தெரிந்திருந்ததால் அவரும் முன் ஏற்பாட்டுடன் வந்திருக்கிறார்.

Take a Poll

நண்பர்கள் எல்லாம் ஓடிவிட பாலா மட்டும் எதிர் கும்பலிடம் மாட்டிக்கொண்டார். அவரை சுற்றி வளைத்த அவர்கள் பனங்கருக்கை வைத்து சகட்டுமேனிக்கு வெட்டியிருக்கிறார்கள். நல் வாய்ப்பாக அந்த வெட்டுக்கள் பாலாவின் முதுகில் பட அவர் தப்பித்தும் விட்டார். பிறகு சிகிச்சை பெற்று மீண்டிருக்கிறார். இதனை தனது சுயசரிதையான இவன்தான் பாலா புத்தகத்தில் அவரே குறிப்பிட்டிருந்தார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X