இளையராஜா,பாரதிராஜா உடன் சண்டை போட்ட சின்ன வீடு நாயகன்.. திறமை இருக்கும் இடத்தில் கோபம் இருக்கும்தானே!

சென்னை: தமிழ் சினிமா பல ஜாம்பவான்களை உருவாக்கி உள்ளது. தமிழ் சினிமாவில் பலர் பலனடைந்துள்ளார்கள். தமிழ் சினிமா பலரால் பயனடைந்துள்ளது. அப்படி தமிழ் சினிமாவுக்கே பயனுள்ள திரைவாழ்க்கையை அமைத்துக் கொண்டவர் திரைக்கதை மன்னன் கே. பாக்யராஜ். இவரது திரைவாழ்க்கை குறித்து பல சுவாரஸ்யமான தகவல்களை எக்ஸ் பக்கத்தில் Ashwin Bala என்ற பெயரில் இருக்கும் இணையவாசி ஒருவர் பகிர்ந்துள்ளார். இது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

அவரது பதிவில், " சினிமா அறிமுகம் - இயக்குநர் சிகரம் பாரதிராஜாவிடம் "கிழக்கே போகும் ரயில்" மற்றும் "16 வயதினிலே" படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றிய பாக்யராஜ் அவரது படங்களில் சிறு சிறு வேடங்களிலும் நடித்துள்ளார். ஆரம்பத்திலே பாக்யராஜின் கதை எழுதும் வல்லமை அறிந்து கொண்டார் பாரதிராஜா. வில்லனாக அறிமுகமான பாக்யராஜை சினிமாவில் கதாநாயகன் ஆக்கிய‌ பெருமையும் பாரதிராஜாவையே சாரும். 1979 புதிய வார்ப்புகள் படம் மூலம் நாயகன் ஆக்கினார். அதில் அன்றைய அழகி ரதி க்கு ஜோடியாக நடித்தது பெரும் விவாதமானது.

இயக்குநர் - 1979 ஆண்டு அன்றைய Sensation சுதாகர் உடன் இணைந்து நடித்து இயக்கிய படம் "சுவர் இல்லாத சித்திரங்கள்" .. படமும் வெற்றி படமாக அமைந்தது. தமிழில் மொத்தம் 24 படங்களை இயக்கியுள்ளார் பாக்யராஜ்... அதில் கடைசி மூன்று படங்களான "சொக்கதங்கம்" "பாரிஜாதம்" மற்றும் "சித்து +2" தவிர அனைத்து படங்களிலும் அவரே ஹீரோவாக நடித்தார். ஹிந்தியிலும் அமிதாப் , அனில் கபூர் படங்கள் உட்பட 3 படங்கள் இயக்கியுள்ளார்.

திரைக்கதை மன்னன்: 1976 ஆண்டு எம்.ஜீ.ஆர் நடிப்பில் ஸ்ரீதர் இயக்கத்தில் உருவான படம் "அண்ணா நீ என் தெய்வம்".. நிறைய காட்சிகள் படமாக்கப்பட்டு பாதியோடு நின்று போனது .. அந்த காட்சிகளுக்கு ஏற்ப திரைக்கதை எழுதி அவர் இயக்கிய படம் தான் "அவசர போலீஸ் 100". இப்படம் 1990 ஆண்டு வெளியானது. படமும் வெற்றி படமாக அமைந்தது.. எம்.ஜீ.ஆர் தவிர மற்ற அனைவரையும் இந்த படத்தில் நடிக்கவும் வைத்தார். இதனாலே திரைக்கதை மன்னன் என அழைக்கப்படுகிறார் பாக்யராஜ்...

இளையராஜாவோடு சண்டை: சின்ன வீடு படத்திற்கு பின் இளையராஜா உடன் ஏற்பட்ட மன கசப்பின் காரணமாக பாலகுமாரன் இயக்கிய "இது நம்ம ஆளு" படத்தில் இசையமைப்பாளர் அவதாரம் எடுத்தார் பாக்யராஜ்... தொடர்ந்து "ஆராரோ ஆரிராரோ","பவுனு பவுனுதான்" "சுந்தரகாண்டம்" என தனது 6 படங்களுக்கு இசையமைத்தார்.அனைத்தும் ஹிட். பாடகர் - தனது இசையில் "இது நம்ம ஆளு" படத்தில் "பச்சை மலை சாமி" பாடல் மூலம் பாடகராக அவதாரம் எடுத்தார்... தனது இசையில் மொத்தம் 3 பாடல்களும் பாடியுள்ளார் பாக்யராஜ்.

Director Bhagyaraj Interesting Cinema Life And Fight With Ilayaraja And Bharathiraja Throwback
Photo Credit:

ரசிகர்களை கவர்ந்த படங்கள்: இவர் நடித்த பெரும்பாலான படங்கள் ஹிட் படங்கள் தான். குறிப்பாக முந்தானை முடிச்சு • சின்ன வீடு • ராசுக்குட்டி • தாவணிக் கனவுகள் • டார்லிங் டார்லிங் டார்லிங் • தூறல் நின்னு போச்சு போன்ற படங்கள் ரசிகர்களின் ஃபேவரைட். தமிழ் சினிமாவின் நடிப்பு ராட்சசி என அழைக்கப்படும் "ஊர்வசி" அவர்களை கதாநாயகி ஆக்கியது பாக்கியராஜ்... அதே போல் கோவை சரளா அவர்களையும் அவர் தான் அறிமுகப்படுத்தினார்" என்று குறிப்பிட்டுள்ளார்.

பாரதிராஜாவோடு சண்டை: இளையராஜாவோடு சண்டை போட்டுக் கொண்ட பாக்யராஜ், பாரதிராஜாவோடும் சண்டை போட்டுள்ளார். பாரதிராஜாவிடம் உதவி இயக்குநராக இருந்தபோது, அவருடன் ஏற்பட்ட சண்டையால் அவரை விட்டு விலகி வந்துள்ளார். அதன் பின்னர் மறைந்த நடிகர் மனோபாலா தான், இருவருக்கும் இடையிலான பிரச்னையை தீர்த்து மீண்டும் சேர்த்து வைத்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X