ஊட்டி ரெசார்ட்.. ஒரே நேரத்தில் 5 கிளாஸில் மது.. பணம் வராது.. நவரச நாயகன் கார்த்திக்கின் சேட்டையை பாருங்க
சென்னை: 90களின் ஃபேவரைட் நடிகர்களில் ஒருவர் கார்த்திக். நவரச நாயகன் என்று ரசிகர்களால் கொண்டாடப்பட்ட அவர் சிறந்த ஆக்டர் என்ற் பெயர் எடுத்தவர். அதேசமயம் ஷூட்டிங்கிற்கு ஒழுங்காகவே வரமாட்டார் என்ற விமர்சனம் கார்த்திக் மீது பலராலும் வைக்கப்பட்டது. இந்நிலையில் இயக்குநரும், நடிகருமான பாரதி கண்ணன் அவர் பற்றி பேசியிருக்கும் விஷயம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
முத்துராமனின் மகனான கார்த்திக் பாரதிராஜாவால் அலைகள் ஓய்வதில்லை படத்தில் ஹீரோவாக அறிமுகப்படுத்தப்பட்டார். அவரது தந்தை மிகப்பெரிய நடிகர் என்பதால் பிறக்கும்போதே வசதியோடு பிறந்து சில்வர் ஸ்பூன் குழந்தையாக வளர்ந்தவர். சினிமாவில் அறிமுகமான பிறகு தனது திறமையால் ஒட்டுமொத்த திரைத்துறையையும் தன்னுடைய தேதிகளை வாங்கும்படி வரவைத்தார். ஏனெனில் அவர் நடிப்பும், அழகும் அபரிமிதமாக இருந்தது.
சிறந்த நடிகர்: கார்த்திக் மிகசிறந்த நடிகர் என்று பெயர் எடுத்தவர். எந்த கேரக்டராக இருந்தாலும் அதை சில நிமிடங்களிலேயே உள் வாங்கி அட்டகாசமாக டெலிவர் செய்யக்கூடியவர். முக்கியமாக சிங்கிள் டேக் ஆர்ட்டிஸ்ட் என்ற பெயரையும் அவர் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. பல ஹிட் படங்களில் நடித்த அவர் புகழின் உச்சியில்தான் இருந்தார். அவர் எவ்வளவு திறமையானவர் என்று பெயரை எடுத்தாரோ அதே அளவுக்கு விமர்சனங்களையும் சந்தித்தவர்.

ஒழுங்காக வரமாட்டார்: வீட்டில் எப்படி சொகுசாக; தான் நினைத்ததை நினைத்த நேரத்தில் செய்தாரோ அதே பாணியை தன்னுடையை தொழிலிலும் பின்பற்றியவர் அவர். எப்போது தோன்றுகிறதோ அப்போதுதான் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வருவார். என்னதான் சிங்கிள் டேக் ஹீரோவாக ஜொலித்தாலும் அந்த புகழ் ஒளியெல்லாம் அவரது அலட்சியத்தால் ஒருகட்டத்தில் காணாமல் போய்விட்டது.
பாரதி கண்ணன் பேட்டி: இந்நிலையில் இயக்குநரும், நடிகருமான பாரதி கண்ணன் தனியார் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், "கார்த்திக்கை சந்தித்து கதை சொல்ல போனேன். போகும்போதே ஐந்து லட்சம் ரூபாய் அட்வான்ஸோடுதான் போனேன். அவர் என்னை பார்த்ததும் பொதுவாக பணத்தை நான் கையில் தொடுவது இல்லை அப்பா ஃபோட்டோவில் வைத்துவிடுங்கள் என்று சொன்னார். பிறகு தனது கழுத்தில் போட்டிருந்த செயினை தொட்டு பார்த்துவிட்டு இந்தப் படம் நன்றாக வரும் எனவும் ஆரூடம் சொன்னார். அதனையடுத்து திங்கட் கிழமைக்கு மேல் ஊட்டியில் இருப்பேன். அங்கு வந்து கதை சொல்லும்படி பணித்தார்.
ஒரே நேரத்தில் 5 கிளாஸ்: அங்கு சென்றவர் ஃபோன் செய்து இன்னொரு 5 லட்சம் ரூபாய் கிடைக்குமா என கேட்க; நான் அந்தப் பணத்தை எடுத்துக்கொண்டு ஊட்டிக்கு சென்றேன். அங்கே அவர் தங்கியிருந்த இடத்துக்கு சென்றபோது டேபிளில் ஐந்து கிளாஸ்கள் இருந்தன. அத்தனை கோப்பைகளிலும் ஒரே நேரத்தில் மினரல் வாட்டர் (மறைமுகமாக மது என சொல்கிறார்) ஊற்றி அடுத்தடுத்து குடித்தார். நான் கதை சொன்னேன். கதையை கேட்டுவிட்டு இந்தக் கதையில் ரத்தம் கொட்டுகிறது. கதையை மாற்றலாமே என சொல்லிவிட்டார்.
சுதாரித்த தயாரிப்பாளர்: இதற்கிடையே தயாரிப்பாளர் கார்த்திக்கை பற்றி விசாரித்துவிட்டார். என்னை தொடர்புகொண்டு அவர் ஒழுங்காக ஷூட்டிங்கிற்கு வரமாட்டார். நீ பணத்தை வாங்கிட்டு வந்திடு என்று சொல்லிவிட்டார். நான் சென்று கார்த்திக்கிடம், 'தயாரிப்பாளர் மனம் மாறிவிட்டார். உங்களிடம் கொடுத்த பணத்தை திருப்பி கேட்கிறார்' என சொல்ல; அவரோ, 'பாரதி இந்த கார்த்திக்கிடம் பணம் வந்தால் மீண்டும் வராது என இன்டஸ்ட்ரிக்கே தெரியுமே' என சொல்லிவிட்டு சென்றுவிட்டார்.
விஜயகாந்த்திடம் சென்ற பஞ்சாயத்து: இதேபோல் இன்னும் ஆறு தயாரிப்பாளர்கள் பணத்தை கொடுத்திருக்கிறார்கள். இந்த பிரச்னை அப்போது நடிகர் சங்க தலைவராக இருந்த விஜயகாந்த்திடம் சென்றது. பணம் கொடுத்த ஏழு பேர் அமர்ந்திருந்தோம். அவர் பஞ்சாயத்துக்கு கேஷுவலாக வந்தார். கேப்டனிடம், 'இன்னைக்கு எல்லாத்தையும் க்ளியர் செய்கிறேன் கேப்டன்' என சொல்லிவிட்டு; தன்னுடைய உதவியாளரிடம் ஒரு பையை எடுத்துவர சொன்னார்.
அடிக்க பாய்ந்த தயாரிப்பாளர்: பையிலிருந்து பணத்தை எடுப்பார் என்று பார்த்தால் ஒரு வெள்ளை சீட்டை எடுத்து எல்லோருக்கும் தேதி கொடுத்தார். 7 பேரில் தயாரிப்பாளர் காஜா மைதீனும் ஒருவர். அவர் டென்ஷனாகி சேரை எடுத்து அடிக்க பாய்ந்துவிட்டார். கார்த்திக்கோ கூலாக, 'பாய் கூல் பாய். நான் பணம் கொடுப்பேன் என்று சொல்லவில்லை. நீங்கள் என்னிடம் தேதி கேட்டீர்கள். தேதி கொடுக்கிறேன்' என கூறினார். இப்படி அவர் தனித்துவமான கேரக்டர். அவர் மிக பெரிய திறமையாளர். ஆனால் அவரது கரியரை அவரேதான் கெடுத்துக்கொண்டார்" என்றார்.


Click it and Unblock the Notifications