Throw Back: அய்யய்ய இவன் நமக்கு செட் ஆகமாட்டான்.. ஏ.ஆர்.ரஹ்மானை திட்டித்தீர்த்த பாரதிராஜா

சென்னை: கிழக்கு சீமையிலே படத்தின்போது ஏ.ஆர்.ரஹ்மானை பாரதிராஜா திட்டிய சம்பவம் தற்போது தெரியவந்திருக்கிறது.

ஏ.ஆர்.ரஹ்மான் இந்திய அடையாளங்களில் ஒருவர். ரோஜாவில் ஆரம்பித்த அவரது பயணம் ஆஸ்கார் மேடைவரை சென்றிருக்கிறது. பல மொழிகளுக்கு இசையமைத்துவரும் ஏ.ஆர். ரஹ்மான் ஆரம்பத்தில் வெரைட்டியாக பணியாற்றியவர். தற்போதும் தமிழில் பத்து தல, மாமன்னன், பொன்னியின் செல்வன் 2 உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்திருக்கிறார்.

பாரதிராஜாவுடன் கூட்டணி அமைத்த ஏ.ஆர். ரஹ்மான்

பாரதிராஜாவுடன் கூட்டணி அமைத்த ஏ.ஆர். ரஹ்மான்

பாரதிராஜா படம் இயக்க வந்தபோது இளையராஜாவே அவரது படஙக்ளுக்கு இசையமைத்துவ்ந்தார். வைரமுத்து பாடல்கள் எழுத வந்த பிறகு பாரதிராஜா - இளையராஜா - வைரமுத்து என்ற கூட்டணி உருவானது. இவர்கள் மூன்றுபேரும் இணைந்து கொடுத்த பாடல்கள் இன்றுவரை பலரது மனங்களை வருடிக்கொடுக்கின்றன. அந்த அளவு இவர்களது பாடல்கள் எவர்க்ரீன். ஆனால் இளையராஜாவுக்கும், வைரமுத்துவுக்கும் மோதல் வந்த பிறகு இந்தக் கூட்டணி உடைந்தது. இதனயடுத்து தான் இயக்கிய படங்களுக்கு ஏ.ஆர். ரஹ்மானுடன் கூட்டணி வைத்தார் பாரதிராஜா.

பாரதிராஜாவிடம் ரஹ்மானை சேர்த்த வைரமுத்து

பாரதிராஜாவிடம் ரஹ்மானை சேர்த்த வைரமுத்து

ஏ.ஆர். ரஹ்மான் சென்சேஷ்னலாக இருந்த சமயம் அது. தொட்டதெல்லாம் ஹிட்டாக மாற பல இயக்குநர்கள் ரஹ்மானுடன் இணைந்து பணியாற்ற ஆர்வத்தோடு இருந்தனர். இப்படிப்பட்ட சூழலில் பாரதிராஜா கிழக்கு சீமையிலே படத்தை ஆரம்பித்தார். ஆனால் இளையராஜாவுடனான பிரிவுக்கு பிறகு யாரை இசையமைப்பாளராக படத்தில் பணியாற்ற வைப்பது என்ற குழப்பத்தில் இருந்தார் பாரதிராஜா. அப்போது ஏ.ஆர். ரஹ்மானை பயன்படுத்திக்கொள்ளலாமே என வைரமுத்து பாரதிராஜாவிடம் கூறியிருக்கிறார். இதற்கிடையே ரஹ்மானும், வைரமுத்துவும் இணைந்து பல ஹிட் பாடல்களை கொடுத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏ.ஆர். ரஹ்மான் மீது நம்பிக்கை இல்லாத பாரதிராஜா

ஏ.ஆர். ரஹ்மான் மீது நம்பிக்கை இல்லாத பாரதிராஜா

வைரமுத்து கூறியது பாரதிராஜாவுக்கு ஏற்புடையதாக இருந்தாலும் தன்னுடைய ஸ்டைலுக்கு ரஹ்மான் ஒத்துவருவாரா என்ற சந்தேகம் பாரதிராஜாவுக்கு இருந்திருக்கிறது. ஏனென்றால் அதுவரை ஏ.ஆர்.ரஹ்மான் கிராமத்து படங்களுக்கு இசையமைத்திருக்கவில்லை. ஆனால் கிழக்கு சீமையிலே படமோ முழுக்க முழுக்க கிராமத்து படம். அதனால் பாரதிராஜாவுக்கு அந்த சந்தேகம் ஏற்பட்டிருக்கிறது. இருப்பினும் விடாத வைரமுத்து நிச்சயம் ரஹ்மானின் இசை இந்தப் படத்துக்கு செட் ஆகும் என்று கூறியிருக்கிறார். அதனையடுத்து இசையமைப்பாளராக ரஹ்மானை கமிட்டாக்கினார் பாரதிராஜா

ஏ.ஆர் ரஹ்மானை வைரமுத்துவிடம் திட்டிய பாரதிராஜா

ஏ.ஆர் ரஹ்மானை வைரமுத்துவிடம் திட்டிய பாரதிராஜா

கிழக்கு சீமையிலே படத்தின் ஷூட்டிங் வத்தலக்குண்டுவில் நடந்திருக்கிறது. அந்த சமயத்தில் ஒரு பாடலை படமாக்கிவிட பாரதிராஜா முடிவெடுத்தாராம். ஆனால் அதுவரை ஏ.ஆர். ரஹ்மான் அந்தப் பாடலை பதிவு செய்யவில்லையாம். இதனால் கடும் கோபமான பாரதிராஜா வைரமுத்துவிடம், 'இவன் என்ன சீக்கிரம் பாட்டு தரமாட்டேங்கிறான். எப்போ கேட்டாலும் நாளைக்கு முடிஞ்சிடும் என்றே சொல்றான். ரொம்ப லேட் ஆக்குறான். இதுக்குத்தான் இவனை வேண்டாம்னு சொன்னேன்' என்றாராம்.

பாரதிராஜாவை சாந்தப்படுத்திய வைரமுத்து

பாரதிராஜாவை சாந்தப்படுத்திய வைரமுத்து

இதனையடுத்து வைரமுத்து, பாரதிராஜாவிடம், 'கொஞ்சம் பொறுங்கள், இந்தப் படம் உங்களுக்கு வேறு ஒரு உயரத்தை கொடுக்கும். அதற்கு ரஹ்மானின் இசை உதவி புரியும்' என்றாராம் . அரை மனதாக ஒத்துக்கொண்ட பாரதிராஜா பாடல்தான் வரவில்லை அதற்குரிய காட்சிகளை படமாக்கலாம் என்று முடிவெடுத்து அதனையும் எடுத்து முடித்திருக்கிறார்.

பாடலுக்கு மாற்றப்பட்ட வரிகள்

பாடலுக்கு மாற்றப்பட்ட வரிகள்

ஒருவழியாக ட்யூனை போட்டுவிட்ட ரஹ்மான் பாடலுக்காக படமாக்கப்பட்ட காட்சிகளை பார்த்திருக்கிறார். அதனைப் பார்த்துவிட்டு வைரமுத்துவிடம், நீங்கள் இதற்கு எழுதிக்கொடுத்திருக்கும் வரிகள் ஒத்துவரவில்லை. எனவே வேறு எழுதிக்கொடுங்கள் என்று கேட்டாராம். அதன் பிறகுதான் வைரமுத்து எழுதிய வரிகள் கத்தாலங்காட்டு வழி.

பல குழப்பங்களுக்கும், சங்கடங்களுக்கும் மத்தியில் உருவான இந்தப் பாடல்தான் இன்றுவரை உயிரோட்டமாக ஒலித்துக்கொண்டிருக்கிறது. அதேபோல் கிராமத்து இசை ரஹ்மானுக்கு வராது என்ற பிம்பத்தையும் கிழக்கு சீமையிலே படம் மூலம் ஏ.ஆர். ரஹ்மான் அடித்து நொறுக்கிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X