விஜய்க்கு அந்த பயம் இருந்ததாம்.. சிம்ரனை வேண்டாம் என்று சொன்னாராம்.. என்ன காரணம் தெரியுமா?

சென்னை: சினிமாவில் பிஸியாக நடித்துவந்த விஜய் இப்போது அரசியல் களத்திலும் சுழன்றுவருகிறார். அறிக்கைகள் விடுவது, கட்சி கூட்டங்களில் கலந்துகொள்வது என பரபரவென இருக்கும் அவர்; மறுபக்கம் ஜன நாயகன் படத்தின் ஷூட்டிங்கிலும் கலந்துகொள்கிறார். சமீபத்தில்கூட கொடைக்கானலில் இருக்கும் தாண்டிக்குடியில் நடந்த படப்பிடிப்புக்கு சென்றார். கண்டிப்பாக இந்தப் படம் மெகா ஹிட்டாகும் என்று அவரது ரசிகர்கள் உச்சக்கட்ட நம்பிக்கையோடு காத்திருக்கிறார்கள்.

கோலிவுட்டின் தவிர்க்க முடியாத கமர்ஷியல் ஹீரோக்களில் முன்னணியில் இருப்பவர் விஜய். அவர் நடிக்கும் படங்கள் விமர்சன ரீதியாக அப்படி இப்படி இருந்தாலும் வசூல் ரீதியாக பெரிய வரவேற்புடன் இருக்கக்கூடியவை. அவர் கடைசியாக நடித்த நான்கு படங்களுமே உலக அளவில் 200 கோடி ரூபாய்வரை சம்பாதித்திருப்பதாக அவரது தரப்பினர் சொல்வார்கள். அதேசமயம் வாரிசு படம் படுதோல்வியை சந்தித்து நஷ்டத்தைத்தான் கொடுத்தது என்ற ஒரு பேச்சும் அடிக்கடி ஓடுவதுண்டு.

தமிழக வெற்றிக் கழகம்: அதேசமயம் விஜய்க்கு சம்பளமாக 150 கோடி ரூபாய்வரை கொடுக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. சூழல் இப்படி இருக்க சில வருடங்களுக்கு முன்பு அவர் தமிழக வெற்றிக் கழகம் கட்சியை தொடங்கினார். அவரது அரசியல் வருகை ஆதரவையும், விமர்சனத்தையும் ஒருசேர பெற்றிருக்கிறது. விஜய்யோ தன்னுடைய கட்சியின் முதல் மாநாட்டிலேயே தமிழ்நாட்டை ஆளுங்கட்சியான திமுகவை விமர்சிக்க தொடங்கிவிட்டார். நாட்கள் செல்ல செல்ல அது குறையும் என்றுதான் எதிர்பார்த்தார்கள்.

விடாத விஜய்: ஆனால் அது அதிகரிக்கத்தான் செய்திருக்கிறது. ஒருகட்டத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பெயரை குறிப்பிட்டே ஓபனாகவே பேச ஆரம்பித்துவிட்டார். இதன் காரணமாக தவெகவினரை திமுகவினரும் கடுமையாக அட்டாக் செய்ய ஆரம்பித்திருக்கிறார்கள். அவர்களுக்கு ஏற்றவாறுதான் தவெக கட்சியினரின் செயல்பாடும் இருக்கிறது. சமீபத்தில்கூட கோவையில் நடந்த சம்பவங்களை மனதில் வைத்து தன்னுடைய ரசிகர்களாகிய தொண்டர்களுக்கு அறிவுரையும் செய்திருந்தார் விஜய்.

Director Ezhil Shares Throwback incident about Vijay And Simran

ஜன நாயகன்: இதற்கிடையே முழுக்க முழுக்க அரசியலில் கவனம் செலுத்த ஆரம்பித்திருப்பதால் சினிமாவிலிருந்து ஒதுங்கும் முடிவுக்கு வந்தார் அவர். அதன்படி ஹெச்.வினோத் இயக்கிவரும் ஜன நாயகன்தான் கடைசி படம் என்று கூறப்பட்டிருக்கிறது. இதில் அவருடன் பூஜா ஹெக்டே, பாபி தியோல், மமிதா பைஜு உள்ளிட்டோர் நடித்துவருகிறார்கள். இப்படத்தின் இறுதிக்கட்ட ஷூட்டிங் மும்முரமாக நடந்துவருகிறது. அடுத்த வருடம் பொங்கலையொட்டி ஜனவரி ஒன்பதாம் தேதி படம் ரிலீஸாகவும் செய்கிறது.

எழில் பேட்டி: இந்நிலையில் விஜய்யின் கரியரில் முக்கியமான படங்களில் ஒன்றாக கருதப்படும் துள்ளாத மனமும் துள்ளும் படத்தை இயக்கிய இயக்குநர் எழில் அளித்த பேட்டி ஒன்று கவனத்தை ஈர்த்திருக்கிறது. சாய் வித் சித்ரா நிகழ்ச்சியில் பேசிய அவர், "துள்ளாத மனமும் துள்ளும் படத்தை எடுக்கும்போது என்னைவிடவும் விஜய்க்குதான் பயம் அதிகம் இருந்தது. நான் புதுமுக இயக்குநர் என்பதால் எப்படியாவது நான் படத்தை நன்றாக இயக்கிவிட வேண்டும் என்று அவர் நினைத்துக்கொண்டே இருந்தார்.

சிம்ரனை வேண்டாம் என்று சொன்ன தயாரிப்பாளர்: படத்துக்கு இன்னொரு பிளஸ்ஸாக இருந்தது சிம்ரன். அவரை நடிக்க வைக்கலாம் என்று நான் தயாரிப்பாளர் சௌத்ரியிடம் சொன்னபோது, 'அய்யோ என்னய்யா நீ.. அந்தப் பொண்ணு கிளாமரா நடித்துக்கொண்டிருக்காங்க. அவங்க வேண்டாம்' என்று சொன்னார். ஆனால் நானோ சிம்ரன்தான் வேண்டும் என்பதில் விடாபிடியாக இருந்து சௌத்ரியை சம்மதிக்கவும் வைத்தேன். சிம்ரனுக்கும் கதை ரொம்பவே பிடித்திருந்தது" என்றார்.

FAQs
விஜய்யும் சிம்ரனும் சேர்ந்து நடித்த முதல் படம் என்ன?

ஒன்ஸ்மோர்

Filmibeat Entertainment

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X