ஏஆர் ரஹ்மான் நோ சொன்னார்... இளையராஜா உடனே ட்யூன் கொடுத்தார்... கெளதம் மேனன் சொன்ன ப்ளாஷ்பேக்

சென்னை: மின்னலே மூலம் இயக்குநராக அறிமுகமான கெளதம் மேனன் அடுத்தடுத்து பல ஹிட் படங்களை இயக்கினார்.

பெரும்பாலும் வித்தியாசமான காதல் பின்னணியில் படங்களை இயக்கும் கெளதம் மேனன் தற்போது நடிப்பிலும் பிஸியாக காணப்படுகிறார்.

அதேபோல் தனது படங்களில் பாடல்களுக்கும் பின்னணி இசைக்கும் அதிக முக்கியத்துவம் கொடுப்பதில் கெளதம் மேனன் அதிக ஆர்வம் கொண்டவர்.

இந்நிலையில், இளையராஜா, ஏஆர் ரஹ்மான் இருவருடன் பணிபுரிந்த சூழல் குறித்தும், அதன் பின்னணி பற்றியும் கெளதம் மேனன் மனம் திறந்து பேசியுள்ளார்.

 இயக்குநர் கெளதம் மேனன்

இயக்குநர் கெளதம் மேனன்

இயக்குநர் ராஜீவ் மேனனிடம் உதவியாளராக இருந்து திரையுலகில் அறிமுகமானவர் கெளதம் மேனன். மாதவன், அப்பாஸ் நடிப்பில் வெளியான மின்னலே படம் மூலம் இயக்குநராக என்ட்ரி கொடுத்த கெளதம், அடுத்தடுத்து காக்க காக்க, வேட்டையாடு விளையாடு, வாரணம் ஆயிரம், விண்ணைத்தாண்டி வருவாயா, நீதானே என் பொன்வசந்தம், என்னை அறிந்தால், எனை நோக்கி பாயும் தோட்டா, வெந்து தணிந்தது காடு போன்ற மேலும் சில படங்களை இயக்கியுள்ளார்.

 இசைக்கு முக்கியத்துவம்

இசைக்கு முக்கியத்துவம்

ராஜீவ் மேனனுடன் மின்சார கனவு படத்தில் உதவி இயக்குநராக வேலை பார்த்தபோதே கெளதம் மேனனுக்கு ஏஆர் ரஹ்மானுடன் பழக்கம் இருந்தது. அதனால் மின்னலே படத்திற்காக ஏஆர் ரஹ்மானிடம் தான் சென்றுள்ளார் கெளதம். ஆனால், ஏஆர் ரஹ்மான் நோ சொன்ன பிறகே அந்தப் படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைப்பாளர் ஆனார். பின்னர் அவருக்கும் கெளதம் மேனனுக்கும் இடையேயான கெமிஸ்ட்ரி தூள் பறத்தியது. தனது படங்களில் இசைக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பவர் கெளதம் மேனன் என்பது அனைவருக்கும் தெரிந்ததே.

 நோ சொன்ன ஏஆர் ரஹ்மான்

நோ சொன்ன ஏஆர் ரஹ்மான்

கெளதம் மேனன் - ஹாரிஸ் ஜெயராஜ் கூட்டணி தமிழ்த் திரையுலகில் தனித்துவமாக பார்க்கப்பட்டது. ஆனாலும், கெளதம் மேனனுக்கு ஏஆர் ரஹ்மானுடன் பணிபுரிய வேண்டும் என்பதே நீண்டநாள் கனவாக இருந்தது. அதனை அவரும் பல பேட்டிகளில் கூறியுள்ளார். இறுதியாக இந்தக் காம்போ விண்ணைத் தாண்டி வருவாயா படத்தில் இணைந்தது. சிம்பு, த்ரிஷா நடித்த இந்தப் படத்தில் ஏஆர் ரஹ்மானின் இசையும் இன்னொரு கேரக்டராக படம் நெடுக வலம்வந்தது. அதனால், நீதானே என் பொன்வசந்தம் படத்துக்கும் ஏஆர் ரஹ்மானிடம் சென்ற கெளதம் மேனனுக்கு, அவர் நோ சொல்லிவிட்டாராம்.

 உடனே ஓக்கே சொன்ன இளையராஜா

உடனே ஓக்கே சொன்ன இளையராஜா

இதுகுறித்து ஒரு பேட்டியில் மனம் திறந்துள்ள கெளதம், "நீதானே என் பொன்வசந்தம் படம் மொத்தமாக ஷூட் செய்துவிட்டே ஏஆர் ரஹ்மானிடம் சென்றேன். அவர் இரண்டு நாட்கள் டைம் கேட்டார் அதன்பின்னர் அவர் முடியாது என சொன்னதும், நானும் அவரை கம்பல் செய்யவில்லை. அப்போது தற்செயலாக இளையராஜா சாரை சந்திக்க வாய்ப்புக் கிடைத்தது. அந்த தருணத்தில் அவரிடம் பேசிய போது, சார் நீங்க என்னுடைய படத்துக்கு மியூசிக் பண்ணுவீங்களான்னு தெரியல, இருந்தாலும் கேட்டுப் பார்க்கிறேன் என்றேன். ஆனால், அவர் உடனே அதெல்லாம் ஒன்னும் இல்லையா, உன் ஒர்க் எனக்கு பிடிக்கும், இப்பவே ஆரம்பிக்கலாம் என உடனே சில ட்யூன்களை கொடுத்ததாக" கூறியுள்ளார்.

 முதல் சாய்ஸ் ஏஆர் ரஹ்மான் தான்

முதல் சாய்ஸ் ஏஆர் ரஹ்மான் தான்

தொடர்ந்து பேசியுள்ள அவர், "நீதானே என் பொன்வசந்தம் படத்துக்கு இளையராஜா சார் எனக்கு 30க்கும் மேற்பட்ட ட்யூன்கள் கொடுத்து ஆச்சரியப்படுத்தினார். நான் போதும் போதும் என்றாலும் அவர் என்னை விடவே இல்லை. அதேபோல் எனை நோக்கி பாயும் தோட்டா படத்துக்கும் ஷூட்டிங் முடித்துவிட்டு ஏஆர் ரஹ்மான் சாரிடம் சென்றேன். வழக்கம்போல இரண்டு நாட்கள் டைம் எடுத்து நான் இந்தப் படத்தில் ஒர்க் பண்ணவில்லை என்றார். துருவ நட்சத்திரம் படத்திற்கும் ஏஆர் ரஹ்மான் சாரிடம் இருந்து அதே பதில்தான். அதன்பின்னர் தான் நான் அடுத்த முடிவெடுத்தேன், அதேநேரம் நான் ரஹ்மான் சாரிடம் காரணம் கேட்டதே கிடையாது. அதுதான் எங்களுக்குள் இருக்கும் கனெக்‌ஷன்" என்றுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X