கமல் நோ சொன்ன படத்தில் நடித்த சரத்குமார்..ச்ச உலக நாயகன் நடிச்சிருந்தா இன்னும் செமயா இருந்திருக்குமே

சென்னை: சிவாஜி கணேசனுக்கு அடுத்ததாக இந்திய சினிமாவில் சிறந்த நடிகர் என கொண்டாடப்படுபவர்களில் முதன்மையானவர் கமல் ஹாசன். அவர் இப்போது தக் லைஃப் படத்தில் நடித்துவருகிறார். இந்தியன் 2 திரைப்படம் வெளியாகவிருக்கிறது. இதுவரை 233 படங்களில் நடித்திருக்கும் அவர் ஒரு படத்துக்கு நோ சொன்னதும்; அந்தப் படத்தில் சரத்குமார் நடித்ததும் தெரியவந்திருக்கிறது. இதனை இயக்குநர் கௌதம் மேனன் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் பகிர்ந்துகொண்டார்.

கமல் ஹாசன் இந்திய சினிமாவின் மிகப்பெரிய ஐகான்களில் ஒருவர். இதுவரை 233 படங்களில் நடித்திருக்கும் அவர் இப்போது மணிரத்னம் இயக்கத்தில் தக் லைஃப் படத்தில் நடித்துவருகிறார். அதேபோல் ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 படத்திலும் நடித்து முடித்திருக்கும் அவர்; அடுத்ததாக சண்டை பயிற்சியாளர்கள் அன்பறிவ் இயக்கும் ஒரு படத்தில் நடிக்க கமிட்டாகியிருக்கிறார். நீண்ட இடைவேளைக்கு பிறகு கமல் ஹாசன் சினிமாவில் பிஸியாக நடிக்க ஆரம்பித்திருப்பதால் அவரது ரசிகர்களுக்கு மகிழ்ச்சிதான்.

Director Gautham Menon Talks about Kamal Haasan And Pachaikili Muthucharam Movie

தயாரிப்பாளர் கமல் ஹாசன்: நடிப்பு மட்டுமின்றி தயாரிப்பிலும் இப்போது மீண்டும் தனது கவனத்தை திருப்பியிருக்கிறார் கமல். அதன்படி சிம்பு நடிக்கும் எஸ்டிஆர் 48, சிவகார்த்திகேயன் நடிக்கும் அமரன் ஆகிய படங்களை தயாரித்துவருகிறார். அமரன் படத்தின் ஷூட்டிங் முடிந்திருக்கும் சூழலில் எஸ்டிஆர் 48 படத்தின் ஷூட்டிங் இன்னும் தொடங்கப்படாமல் இருக்கிறது. இந்தப் படம் அதிக பட்ஜெட்டில் உருவாகவிருப்பது குறிப்பிடத்தக்கது.

செம ஷார்ப் கமல் ஹாசன்: கமலை பொறுத்தவரை தான் கேட்கும் கதைகளில் தீவிர கவனம் செலுத்துபவர். அதனால்தான் இத்தனை காலமும் அவரால் லெஜண்டாக நிலைக்க முடிகிறது. தான் நடிக்கும் கதையில் ஏதேனும் ஒரு புதுமையோ, வித்தியாசமோ இருக்க வேண்டும் என்பதில் எப்போதும் சமரசம் செய்துகொள்ளாதவர். அப்படி அவர் நடித்த பல படங்கள் சினிமாவில் இருப்பவர்களுக்கும், சினிமா துறையை தேர்ந்தெடுப்பவர்களுக்கும் பாடமாக இருக்கக்கூடியது.

நோ சொன்ன கமல் ஹாசன்: இந்தச் சூழலில் கௌதம் மேனன் சொன்ன ஒரு கதையை கமல் ஹாசன் நிராகரித்த விஷயம் தெரியவந்திருக்கிறது. அதாவது கமலை வைத்து வேட்டையாடு விளையாடு என்ற மெகா ப்ளாக் பஸ்டர் படத்தை கொடுத்தார் கௌதம் மேனன். அவரது ஒர்க்கிங் ஸ்டைல் கமலுக்கு பிடித்துப்போக; மீண்டும் இணைந்து ஒரு படம் செய்வோம். ஏதாவது கதை இருந்தால் சொல்லுங்கள் என்று சொன்னாராம்.

விமானத்தில் சொன்ன கதை: அந்த சமயத்தில் கமல் ஹாசன் கொச்சியில் இருந்திருக்கிறார். உடனடியாக கௌதம் மேனன் கொச்சிக்கு சென்று அவரை சந்தித்து அவருடனேயே விமானத்தில் வந்திருக்கிறார். அப்போது ஒரு கதையை சொன்னாராம் கௌதம். அந்தக் கதை கமல் ஹாசனுக்கு ரொம்பவே பிடித்துப்போயிருந்தாலும்; அது தனக்கு செட் ஆகாது என்று நோ சொல்லிவிட்டாராம். அதன் பிறகு அந்தக் கதையை சேரன், மாதவன், ஆர்யா ஆகிய மூன்று பேரிடம் சொன்னாராம். அவர்களும் நோ சொல்ல; கடைசியாக சரத்குமாரிடம் சொன்னாராம். அவருக்கு கதை பிடித்துப்போக நடிக்க ஒத்துக்கொண்டாராம். அந்தப் படம்தான் பச்சைக்கிளி முத்துச்சரம். படம் வணிக ரீதியாக தோல்வியடைந்தாலும் விமர்சன ரீதியாக பெரும் வரவேற்பை பெற்றது. இதனை கௌதம் மேனன் ஒரு பேட்டியில் பகிர்ந்துகொண்டார்.

கௌதம் மேனன்: முன்னதாக கோலிவுட்டின் ஸ்டைலிஷ் இயக்குநர் என்று பெயர் எடுத்தவர் கௌதம் மேனன். மின்னலே படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான அவர் வரிசையாக ஹிட் படங்களை கொடுத்துக்கொண்டிருந்தார். ஆனால் அவருக்கு இடையில் சில பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. அதனையடுத்து இயக்கத்திலிருந்து ஒதுங்கி நடிப்பில் கவனம் செலுத்தும் அவர் கடைசியாக ஜோஷ்வா இமைபோல் காக்க, வெந்து தணிந்தது காடு ஆகிய படங்களை இயக்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X