Rajini - 5,000தான் சம்பளமா? இனி 15,000 சம்பளம்.. உதவி இயக்குநர்களுக்கு உதவிய ரஜினிகாந்த்.. செம மனுஷன்ப்பா
சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இந்திய சினிமாவின் அடையாளங்களில் ஒருவர். அவர் தற்போது த.செ.ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் படத்தில் நடித்துவருகிறார். அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவிருக்கிறார். இந்த சூழலில் அவர் உதவி இயக்குநர்களுக்கு உதவிய நெகிழ்ச்சியான சம்பவம் ஒன்று தெரியவந்திருக்கிறது.
இந்திய சினிமாவின் அடையாளங்களில் ஒருவரான ரஜினிகாந்த் கடைசியாக ஜெயிலர் படத்தில் நடித்திருந்தார். நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியிருந்த அந்தப் படம் மெகா ஹிட்டானது. கடந்த சில வருடங்களாகவே ஹிட்டுக்கு ஏங்கிக்கொண்டிருந்த ரஜினிக்கு ஜெயிலர் நிவாரண மருந்தாக அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது. கிட்டத்தட்ட 700 கோடி ரூபாய்வரை படம் உலகம் முழுவதும் வசூலித்தது.

வேட்டையன்: ஜெயிலர் படத்துக்கு பிறகு அவர் த.செ.ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் படத்தில் நடித்துவருகிறார். ஜெய்பீம் படத்தை இயக்கிய இயக்குநர் என்பதால் ஞானவேல் இந்தப் படத்தில் ரஜினியை வைத்து எந்த மாதிரியான விஷயத்தை பேசப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. அதேசமயம் ரஜினியின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியான டைட்டில் டீசரை பார்க்கையில் ஒருவேளை படம் கமர்ஷியல் பாதையில் பயணிக்குமோ என்ற சந்தேகத்தை ரசிகர்கள் எழுப்பிவருகின்றனர்.
நட்சத்திர பட்டாளம்: இந்தப் படத்தில் ரஜினிகாந்த்துடன் அமிதாப் பச்சன், ஃபகத் பாசில், ரித்திகா சிங், துஷாரா விஜயன், மஞ்ச் வாரியர், ராணா டகுபதி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். ஃபகத் பாசில் ரஜினிக்கு மகனாகவும், ராணா டகுபதிதான் படத்துக்கு வில்லன் என்றும் கூறப்படுகிறது. படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்துவருகிறது.
தலைவர் 171: இந்தப் படத்தை முடித்துவிட்டு அடுத்தாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தனது 171ஆவது படத்தில் நடிக்கிறார். இப்படி ரஜினிகாந்த் இப்போதும் படுபிஸியாக இருப்பதை பார்த்து ஒட்டுமொத்த திரையுலகும் ஆச்சரியம்தான் படுகிறது. கவிஞர் வைரமுத்து ரஜினிக்கு, 'மீசை வைத்த குழந்தையப்பா' என்று ஒரு பாடலில் எழுதியிருப்பார். அதற்கேற்றபடி குழந்தைபோல் படு சுறுசுறுப்பாக இருக்கிறார் ரஜினி.
நடிகர் மட்டுமில்லை: ரஜினிகாந்த் நடிகராக மட்டுமின்றி கதை எழுதி அந்தப் படத்தை தயாரிக்கவும் செய்திருக்கிறார். பாபா படம் கூட அவர் எழுதிய கதைதான். அதேபோல் பாபாவுக்கு முன்னதாகவே கடந்த ஆம் ஆண்டு வள்ளி என்ற படத்துக்கு கதை எழுதினார். மேலும் அந்தப் படத்தை தயாரிக்கவும் செய்தார். ஆனால் படம் சரியாக போகவில்லை. இருந்தாலும் அந்தப் படத்தின்போது ரஜினிகாந்த் செய்த நெகிழ்ச்சியான சம்பவம் தெரியவந்திருக்கிறது.
என்ன நடந்தது?: அதாவது 1993ஆம் ஆண்டு அந்தப் படம் வெளியானது. அதற்கு முன்னதாக அந்தப் படத்தின் இயக்குநர் நட்ராஜுடன் கதை விவாதத்தில் கலந்துகொள்வாராம் ரஜினிகாந்த். ஆர்வத்துடன் பல சீன்களையும் அவர் சொல்வாராம். முக்கியமாக உதவி இயக்குநர்களுடன் நிறைய நேரம் செலவழிப்பாராம். அப்படி ஒரு நாள் படத்தின் இயக்குநர் நட்ராஜை அழைத்து உதவி இயக்குநர்களுக்கு எல்லாம் எவ்வளவு சம்பளம் வெளியே தருகிறார்கள் என்று கேட்டிருக்கிறார்.
உயர்ந்த சம்பளம்: அதற்கு அவரோ 5,000 ரூபாய் என்று சொல்லியிருக்கிறார். என்னது 5,000 ரூபாய்தானா. இது நம்ம கம்பெனி படம். எல்லோருக்கும் பெஸ்ட் சம்பளம்தான் கொடுக்கணும். அதனால் இந்தப் படத்தில் உதவி இயக்குநர்களுக்கு 15,000 ரூபாய் சம்பளம் என்று சொல்லி உடனடியாக சம்பளத்தை உயர்த்தியிருக்கிறார். அதனையடுத்து படம் ஆரம்பித்து பொள்ளாச்சியில் ஷூட்டிங் நடந்திருக்கிறது.
அப்படத்தில் ரஜினிகாந்த்தும் கெஸ்ட் ரோலில் நடித்திருப்பார். எனவே தனது ஷெட்யூலுக்காக அங்கு சென்றிருக்கிறார். அப்போது தொடர்ந்து பணியாற்றியதால் ஒட்டுமொத்த பட யூனிட்டும் சோர்வாக இருந்திருக்கிறது. அதனை கவனித்த ரஜினிகாந்த் என்ன காரணம் என்று விசாரிக்க தொடர் படப்பிடிப்பு பற்றி தெரியவந்திருக்கிறது. உடனடியாக மொத்த யூனிட்டுக்கும் இரண்டு நாட்கள் விடுமுறை அளித்திருக்கிறார். மேலும் அந்த விடுமுறை தினத்தை கழிக்க 2000 ரூபாயையும் ஒவ்வொருவருக்கும் கொடுத்தாராம். இதனை இயக்குநர் மணிபாரதி ஒரு பேட்டியில் பகிர்ந்துகொண்டார்.


Click it and Unblock the Notifications











